என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நேர்த்தி க்கடன்"
- தலத்தெருவில், பழமை வாய்ந்த தங்கமாரியம்மன் கோவில் உள்ளது.
- நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி க்கடனை செலுத்தினர்.
காரைக்கால்:
காரைக்கால் மாவட்டம் திருதெளிச்சேரி எனும் தலத்தெருவில், பழமை வாய்ந்த தங்கமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோ விலில் ஆண்டுதோறும் சித்திரத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா, கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொ டங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி நாளான நேற்று மாலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆரா தனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்ன தாக சந்தன காப்பு அல ங்காரத்தில் அருள்பாலித்த மூலவர் தங்க மாரிய ம்மனுக்கும் உற்சவருக்கும் மகா தீபாரா தனை காட்டப்பட்டது. தீக்குளி அருகே தங்க மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி க்கடனை செலுத்தினர். தீமிதியின் போது வான வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதில் கோவில் அறங்காவல் குழுவினர்கள், ஊர் பொது நல சங்கம் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் பெண்கள் குழந்தைகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.