search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடை பயிற்சி மேடை"

    • தன்னார்வலர்கள் மூலமும் நகரில் உள்ள அனைத்து பூங்காக்களும் முற்றிலும் மேம்படுத்தப்படவுள்ளது.
    • வெள்ளி விழா பூங்கா பின்புறம் அமையவுள்ள ரோடு முற்றிலும் நடைப்பயிற்சிக்காக மட்டுமே ஒதுக்கப்படும்.

    திருப்பூர்:

    சுகாதார துறை அமைச்சர் சுப்ரமணியம் அனைத்து நகரங்களி லும் நடைப்பயிற்சி வழக் கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், மக்கள் உடல் நலம் பேணும் வகையிலும் நடைப்பயிற்சிக்கென நடைபாதை அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.திருப்பூர் மாநகராட்சி பகுதியைப் பொறுத்த வரை கல்லூரி மற்றும் பள்ளிகளின் மைதானங்களில் மட்டுமே நடைப்பயிற்சி மேற்கொள்ளும் விதமாக விசாலமான நிலப்பரப்பு உள்ளது.

    ஒரு சில பகுதிகளில் குடியிருப்பு வாசிகள் தங்கள் பகுதியில் உள்ள சிறு பூங்காக்கள் போன்றவற்றில் உள்ள சிறிய அளவிலான நடை மேடைகளில் நடைப் பயிற்சி மேற்கொள்கின்றனர்.புறநகர் பகுதிகளில் அதிகாலை நேரங்களில் வாகனப் போக்குவரத்து குறைவாக உள்ள போது பெரும்பாலானோர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.

    திருப்பூர் நகரப் பகுதியைப் பொறுத்த வரை அதிகளவிலான வாகனப் போக்குவரத்து, பல்வேறு பணிகள் காரணமாக தோண்டியும், அரைகுறையாக மூடியும் கிடக்கும் ரோடுகள் கடந்து செல்லவே முடியாத நிலையில் அவற்றில் நடைப்பயிற்சி என்பது மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளன.இதனால் திருப்பூர் நகரப் பகுதியில் நடைப் பயிற்சிக்கென தனி ஏற்பாடு அவசியமாக உள்ளது.

    இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:-

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நொய்யல் கரை மேம்பாடு பணி நடக்கிறது. இதில் வெள்ளி விழா பூங்கா பின்புறம் அமையவுள்ள ரோடு முற்றிலும் நடைப்பயிற்சிக்காக மட்டுமே ஒதுக்கப்படும்.ஆண்டிபாளையம் குளம் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டு அங்கு மேம்பாடு பணியில், குளத்தின் கரைப்பகுதி முழுமையாக நடைப்பயிற்சி மேடையாக அமைக்கப்படும்.மூளிக்குளம் கரைகள் சீரமைக்கப்பட்டு அதைச் சுற்றிலும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் விதமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.வடக்கு பகுதியில் புதிதாக ஒரு பெரிய அளவிலான பூங்கா அமைக்க இடம் தேர்வு நடக்கிறது. அங்கு முற்றிலும் நடைப்பயிற்சி மேடை அமைக்கப்படும். மாநகராட்சி சார்பிலும், தன்னார்வலர்கள் மூலமும் நகரில் உள்ள அனைத்து பூங்காக்களும் முற்றிலும் மேம்படுத்தப்படவுள்ளது.

    மக்கள் உடல் நலனில் அக்கறை காட்டும் விதமாக மாதம்தோறும் ஒரு நாள் மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. மாதம் தோறும் ஒரு இடம் தேர்வு செய்து அங்கு உடல் நலம் பேணும் பயிற்சி, விளையாட்டு, பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவு திருவிழா ஆகியன நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×