search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4383 மாணவ-மாணவிகள்"

    • ஈரோடு மாவட்டத்தில் 4,383 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகிறார்கள்.
    • தேர்வு 7 மையங்களில் நடக்கிறது.

    ஈரோடு:

    நாடு முழுவதும் நாளை மறுநாள் (7-ந் தேதி) நீட் தேர்வு நடக்கிறது. மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை தேர்வு நடக்கிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வு 7 மையங்களில் நடக்கிறது. இதில் ஈரோடு திண்டலில் உள்ள கீதாஞ்சலி அகில இந்திய சீனியர் பள்ளியில்555 மாணவ, மாணவிகளும், கூரப்பாளையம் நந்தா கலை அறிவியல் கல்லூரியில் 864 மாணவ, மாணவிகளும், நந்தா சென்ட்ரல் பள்ளி மையத்தில் 552 மாணவ, மாணவிகளும்,

    அவல்பூந்துறை லயன்ஸ் மெட்ரிக் குலேசன் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 288 மாணவ, மாணவிகளும், ரங்கம் பாளையத்தில் உள்ள தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் 1056 மாணவ, மாணவிகளும், கோபி ெசட்டி பாளையம் ஒத்தக்குதிரையில் உள்ள வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி மையத்தில் 504 மாணவ, மாணவிகளும், கோபி வெங்கடேஸ்வரா இன்டர்நேஷனல் பள்ளியில் 564 மாணவ, மாணவிகளும் என ெமாத்தம் 4,383 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகிறார்கள்.

    நீட் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு4896 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதிய நிலையில் இந்த ஆண்டு 513 பேர் குறைந்து உள்ளனர்.

    நீட் தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.

    ×