search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாசன கால்வாய் புனரமைக்கும் பணி"

    • கால்வாயில் பக்கவாட்டு சுவர்கள் பல இடங்களில் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது.
    • வரும் ஜூன் மாதத்தில் வைகை அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் பிக்கப் அணையை அடைந்து அங்கு இருந்து தண்ணீரை பிரித்து பாசன கால்வாய் வழியாகவும், ஆற்றின் வழியாகவும் செல்ல வழி அமைக்கப்பட்டுள்ளது.

    மதுரை, திண்டுக்கல் மாவட்டத்துக்கு செல்லும் நீர் விரயமாகாமல் விரைந்து செல்ல பல ஆண்டுகளுக்கு முன் வைகை அணை அருகே பேரணை மெயின் கால்வாய் அமைக்கப்பட்டது. தற்பொழுது தண்ணீர் செல்லும் கால்வாய் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நீர் வளத்துறை மூலம் ரூ.23 கோடியே 98 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    வைகை அணை அருகே பிக்கப் அணையில் தொடங்கி சங்கரமூர்த்தி பட்டி, அணைக்கரைப்பட்டி, மூணாண்டிப்பட்டி, தர்மத்துப்பட்டி, விராலிப்பட்டி, விருவீடு ஆகிய ஊர்களை கடந்து பேரணையில் சேர்கிறது. கால்வாயில் பக்கவாட்டு சுவர்கள் பல இடங்களில் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது.

    எனவே சேதம் அதிகமாக உள்ள இடங்களில் கால்வாய் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. வரும் ஜூன் மாதத்தில் வைகை அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும். அதற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் பணிகள் முடியவில்லை என்றால் நீர் திறப்பு காலத்திற்கு மீண்டும் நடைபெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×