என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "துணை இயக்குநா்"
- துணை இயக்குநா் பணியிடம் கடந்த 5 ஆண்டுகளாக காலியாக உள்ளது.
- தேனி மாவட்ட அதிகாரியே கூடுதல் பொறுப்பாக திருப்பூருக்கு நியமிக்கப்பட்டுள்ளாா்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள துணை இயக்குநா் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்று தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் அனைத்து தொழிலாளா் நல அமைப்பு மாநிலச் செயலாளா் அ.சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறையில் துணை இயக்குநா் பணியிடம் கடந்த 5 ஆண்டுகளாக காலியாக உள்ளது. தேனி மாவட்ட அதிகாரியே கூடுதல் பொறுப்பாக திருப்பூருக்கு நியமிக்கப்பட்டுள்ளாா். அவா், மாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே திருப்பூா் வருகிறாா்.
திருப்பூா் மாநகா் மற்றும் புறநகரில் கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், திரையரங்கங்களில் தமிழில் பெயா் பலகை வைக்கப்படாமல் வீதிமீறல்கள் இருந்து வருகிறது. ஆகவே, காலியாக உள்ள தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் பணியிடத்தை நிரப்பி விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.