search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிங்கம்"

    • இறைவன்,தேவியை ஆட்கொண்டு தம் இடப்பாகத்தை தேவிக்கு அருளியதாக புராணம் கூறுகிறது.
    • மலைச்சரிவின் ஒரு விளிம்பில், ரிஷப வாகனத்தின் தலைப்பகுதி மட்டும் தெரியும்.

    இறைவனின் இடப்பாகத்தைப் பெற பார்வதிதேவி திருவண்ணாமலை கோவிலில் தவம் இயற்றி அப்பேற்றைப் பெற்றார்.

    தேவியின் தவ வலிமை கண்டு இரங்கிய இறைவன் "மலை சுற்றும் வழியில் ரிஷப வாகனத்தில் வந்து ஆட்கொள்வேன்" என்றார்.

    அதன்படி தேவி மலைவலம் வரும்போது நிருதி திசையின் திருப்பத்தில், ரிஷப வாகனத்தில் வந்த இறைவன்,

    தேவியை ஆட்கொண்டு தம் இடப்பாகத்தை தேவிக்கு அருளியதாக புராணம் கூறுகிறது.

    நிருதி லிங்கத்தை அடையும் இடத்திலிருந்து தெற்கிலிருந்து மேற்கு முகமாகத் திரும்பும் வளைவில்,

    மலை வலம் வருவோர் நின்று மலையைப் பார்த்தால் மலைச்சரிவின் ஒரு விளிம்பில்,

    ரிஷப வாகனத்தின் தலைப்பகுதி மட்டும் தெரியும்.

    செங்கம் செல்லும் பாதையில் இருந்து பார்த்தாலும் இவ்வரிய காட்சியைக் காணலாம்.

    பதிகங்கள் பிறந்த தலம்

    திருஞானசம்பந்த சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசக சுவாமிகள் முதலிய சமயப் பெரியார்கள் அண்ணாமலையானைப் பற்றி பாடி, பதிகங்களையும் இயற்றியுள்ளனர்.

    முக்கியமாய் மாணிக்கவாசக சுவாமிகள் பாடிய திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி இத்தலத்தில் சிறந்தது.

    இதுவுமன்றி, அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், கந்தரலங்காரம் கந்தரனுபூதி, திருவகுப்பு முதலிய முருகப் பெருமான் திருவடிப்புகழ் நூல்கள் இங்கு தான் இயற்றப்பட்டன.

    • மலை சுற்றும் பாதையில் இரண்டாகத் தெரியும். அது அர்த்த நாரீஸ்வர தத்துவம்.
    • மலையின் மேற்றிசையில் இருந்து பார்த்தால் மூன்றாகத் தெரியும். அது திரிமூர்த்தி தத்துவம்.

    திருவண்ணாமலை தலத்தில் எட்டு திசையில் இருந்து பார்க்கும் போதும் மலை எட்டுவித அமைப்பாய் தெரியும்.

    மற்ற இடங்களில் மலை மேல் கடவுள். இங்கு மலையே கடவுள்.

    இங்கு மலை வடிவில் சுயம்பு என்பதால், தீபத் திருநாளன்றி வேறெந்த நாளிலும் மக்கள் மலை ஏறுகிறதில்லை.

    இத்தனை பெரிய சுவாமிக்கு எப்படி அபிஷேக ஆராதனை நடத்துவது?

    சாமான்ய உள்ளங்களில் மருட்சி ஏற்படும். எனவே தான் ஈசன் மலை அடிவாரத்தில் ஒரு சிறிய சுயம்பு லிங்கமாய் அமர்ந்து கொண்டார்.

    இதுதான் இன்றைய அண்ணாமலையார் கோவில்.

    கீழ்த்திசையில் இருந்து நாம் மலையைப் பார்க்கின்ற போது ஒற்றையாய் தெரியும். அது ஏகலிங்க தத்துவம்.

    மலை சுற்றும் பாதையில் இரண்டாகத் தெரியும். அது அர்த்த நாரீஸ்வர தத்துவம்.

    மலையின் மேற்றிசையில் இருந்து பார்த்தால் மூன்றாகத் தெரியும். அது திரிமூர்த்தி தத்துவம்.

    மலையை சுற்றி முடிக்கின்ற கட்டத்தில் ஐந்து முகங்களாகக் காணப்படும். இது ஈஸ்வரனின் பஞ்சமுக தத்துவம்.

    இப்படி அநேக தத்துவங்களை தன்னுள் அடக்கி அமைதியாய் கொலுவீற்றிருக்கிறது அண்ணாமலை.

    • அருணாசலத்தில் மலையே லிங்கமாக உள்ளது.
    • அருணாசலத்தின் கீழ்ப்புறம் ஒரு மலையில் இந்திரன் இருந்து இறைவனைத் துதிக்கிறான்.

    திருவண்ணாமலையை முக்தி நகரம் என்றும், தட்சிண கயிலாயம் என்றும் போற்றுகிறார்கள்.

    அது விஷ்ணுவும், பிரம்மனும் பூஜித்த தலமாகும்.

    அருணாசலம், இன்று, நேற்று தோன்றியதல்ல.

    ஏழுலகமும், ஆகாயமும் என்று உண்டாயினவோ அன்றே உண்டானது.

    அசுர லிங்கம், தைவ லிங்கம், மானிட லிங்கம், சுயம்பு லிங்கம் என்று தலங்கள் தோறும் எத்தனையோ லிங்கங்கள் இருக்கும்.

    ஆனால், அருணாசலத்தில் மலையே லிங்கமாக உள்ளது.

    முன்னொரு காலத்தில் சிவனே கிரியானான்.

    அருணாசலத்தின் கீழ்ப்புறம் ஒரு மலையில் தேவர் கோனாகிய இந்திரன் இருந்து இறைவனைத் துதிக்கிறான்.

    தென்புறக் குன்றில் இமயன் இருந்து வணங்குவான்.

    மேற்புறத்தில் வருணன் கைகூப்பிப் பணிகிறான்.

    வடதிசைக் குன்றில் குபேரன் இருந்து தோத்திரம் செய்கிறான்.

    மற்ற நான்கு திக்குகளில் இருக்கின்ற மலைகளில் தங்கி வாயு, அக்கினி, ஈசான்ய, நிருதிகள் வணங்குவர்.

    இவற்றைச் சுற்றி உள்ள மற்ற மலைகளில் தேவர்களும், சித்தர்களும், அஷ்ட வசுக்களும் இருந்து இறைவனைப் போற்றுகின்றனர்.

    வேள்வி, தியானம், யோகம் என்று எத்தனை புரிந்தாலும் அண்ணாமலையானை எண்ணாவிடில் முக்தி என்பது சாத்தியம் இல்லை.

    இத்தகைய பெரும் சிறப்புகளை கொண்ட இதனை, "எத்தலத்துக்கும் மூலம் அருணாசலம்" என்று உரைத்தார் நந்தி தேவர்.

    • அக்னி கோவிலுக்குரிய நாள் செவ்வாய்க்கிழமை.
    • இந்த கோவிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்க்கிழமை விசேஷ வழிபாடு நடக்கும்.

    மலைவலம் வர சிறந்த நாள் பவுர்ணமி, சிவராத்திரி கிரிவலம் மிகச்சிறப்பு என்று முன்பே பார்த்தோம்.

    இதைவிட அதி சூட்சுமமான "வியா தீபாத யோக நாள்" அன்று மலை வலம் வந்தால் நினைத்த காரியம் சித்தி அடையும் என்று கூறுகின்றனர்.

    இந்த நாளை பாம்பு பஞ்சாங்கம் மற்றும் அர்ச்சகர் பஞ்சாங்கங்களில் மட்டுமே மதிப்பிடுவதாகவும் கூறுகின்றனர்.

    அருணாசலேஸ்வரருக்கு சிறந்த நாள்

    சிவன் கோவில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கட்கிழமையாக இருக்கும்.

    ஆனால் திருவண்ணாமலை அக்னி மலை. இதனால் தான் அருணாசலம் என்ற பெயரும் உண்டு.

    அருணம் என்றால் சிவப்பு என்று பொருள். இந்த கோவில் அக்னி கோவில்.

    அக்னி கோவிலுக்குரிய நாள் செவ்வாய்க்கிழமை. அக்னிக்குரிய காரகன் அங்காரகன்.

    ஆகவே இந்த கோவிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அன்று விசேஷ வழிபாடு நடக்கும்.

    அதுபோலவே செவ்வாய்க்கிழமை அன்று வழிபடுவோர் பிறவி பிணியில் இருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகிறது.

    • தற்காலத்தில் கிரிவலம் வருவது ஒரு பொழுது போக்கு அம்சமாக ஆகிவிட்டது.
    • நீரை தவிர வேறு எதையும் உட்கொள்ளகூடாது எளிய உணவு, குறைந்த அளவில் உட்கொள்ளலாம்.

    தற்காலத்தில் கிரிவலம் வருவது ஒரு பொழுது போக்கு அம்சமாக ஆகிவிட்டது.

    கிரிவலம் வரும் பொழுது மிகவும் மெதுவாக நடக்க வேண்டும்.

    இறை சிந்தனையோ, நாம ஜபமோ இருந்தால் நல்லது.

    கர்ப்பிணி பெண் போல நடக்க வேண்டும் என்பார்கள்.

    எப்பொழுதும் தன் வயிற்றில் இருக்கும் சிசுவின் மேல் கவனம் இருப்பது போல மந்திரத்தில் கவனமும், சீரான நடையும் இருக்க வேண்டும்.

    நீரை தவிர வேறு எதையும் உட்கொள்ளகூடாது எளிய உணவு, குறைந்த அளவில் உட்கொள்ளலாம்.

    மலையை ஒட்டி ஒரு காட்டு வழிச்சாலை இன்றும் உண்டு.

    தகுந்த வழிகாட்டியுடன் சென்றால் அந்த பாதை எது என புலப்படும் இது உள்வழிப்பாதை.

    இது போல மலையின் மேல் பகுதியில் ஒரு கிரிவலப்பாதை உண்டு.

    ஒரு சிவலிங்கத்தை கவனித்தீர்கள் என்றால் மேல் பகுதியிலிருந்து கீழ்பகுதி வரை மூன்று வட்டப்பகுதிகள் இருக்கும்.

    லிங்கப்பாதை என்ற இந்த தன்மையைத்தான் இந்த மூன்று கிரிவலப்பாதையும் குறிக்கிறது.

    ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் 15 லட்சம் பேர் கிரிவலம் வருகிறார்கள்.

    பவுர்ணமிக்கு அடுத்த நாள் கிரிவலப்பாதையை பார்த்தால் அவர்களின் பக்தி புரியும்.

    முன் காலத்தில் விளக்கு வசதி இல்லை.

    அதனால் காட்டுப்பாதையாக இருந்தால் பவுளர்ணமி அன்று மட்டும் வலம் வந்தார்கள்.

    தற்காலத்தில் நவீன மின்வசதிகள் உண்டு அதனால் எல்லா நாட்களிலும் வலம் வரலாம்.


    • புனித தலங்களில் திருவண்ணாமலையில் மட்டுமே கிரிவலம் வரும் தன்மை உண்டு.
    • ஒரு ராஜா வேட்டைக்காக திருவண்ணாமலை பகுதிக்கு வந்தார்.

    புனித தலங்களில் திருவண்ணாமலையில் மட்டுமே கிரிவலம் வரும் தன்மை உண்டு.

    பல நூற்றாண்டுகளாக கிரிவலம் வருவது திருவண்ணாமலையில் வழக்கத்தில் இருக்கிறது.

    கிரிவலம் வருவதால் நம் உடல் மனம் மற்றும் ஆன்மா இனம் புரியாத உயர் நிலைக்கு அழைத்து செல்லப்படுகிறது.

    அவ்வாறு கிரிவலத்தின் மேன்மையை உணர வேண்டுமானால் கிரிவலம் வருவதற்கான சரியான முறையை தெரிந்து கொள்வது அவசியம்.

    அருணாச்சல மஹாத்மியத்தில் கிரிவலம் பற்றி ஒரு கதை உண்டு.

    ஒரு ராஜா வேட்டைக்காக திருவண்ணாமலை பகுதிக்கு வந்தார்.

    அந்த காலத்தில் அது வனப்பிரதேசமாக இருந்தது.

    ஒரு காட்டுப் பூனையை கண்டு அதை வேட்டையாட துரத்தினார்.

    பூனையும் தன்னைக் காத்துக் கொள்ள ஓடத்துவங்கியது.

    துரத்திய ராஜாவும், துரத்தப்பட்ட பூனையும் தங்களை அறியாமல் மலையை வலம் வந்தனர்.

    ஒரு முறை சுற்றி முடிந்ததும் ராஜா திடீரென கீழே விழுந்தார்.

    காரணம் மலையை சுற்றி வந்ததால் ராஜாவின் குதிரையும், காட்டுபூனையும் மோட்சம் அடைந்து மேலோகம் சென்றதாம்.

    ஆனால் ராஜா செல்லவில்லை. காரணம், ராஜா வேறு சிந்தனையில் சுற்றினாராம்.,

    பூனை தன்னை காக்க வேண்டும் என இறைவனை வேண்டியும், குதிரை பூனையை வேட்டையாட மன எண்ணம் இல்லாமலும் சுற்றியது என்பதால் மோட்சம் அடைந்ததாக சொல்லுகிறார்கள்.

    • திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
    • இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.

    1. திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

    2. திருவண்ணாமலை ஈசனை மனதில் தினமும் நினைத்தால் நிச்சயம் முக்தி கிடைக்கும் என்று மார்க்கண்டேய முனிவரிடம் நந்தி பகவான் அருளியுள்ளார்.

    3. வல்லாள மன்னன் நினைவு நாளில் அவனுக்கு இன்றும் திருவண்ணாமலை ஈசன் திதி கொடுக்கிறார்.

    4. வினையை நீக்கும் மலை உருவில் திருவண்ணாமலை உள்ளது.

    5. திருஞான சம்பந்தர் தாம் பாடிய ஒவ்வொரு பதிகத்தின் பதிகத்திலும் 9வது பாடலில் அண்ணாமலையாரை குறிப்பிட்டுள்ளார்.

    6. திருவண்ணாமலை ஈசனை "தீப மங்கள ஜோதி நமோ நம" என்று அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.

    7. ஆடி மாதம் பூரம் தினத்தன்று உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீ மிதித்தல் நடைபெறும்.

    இதை வேறு எந்த சிவாலயத்திலும் பார்க்க முடியாது.

    8. திருவண்ணாமலை தலத்தில் தான், முதன் முதலில் லிங்க வழிபாடு தொடங்கியது.

    9. மகா சிவராத்திரி தொடங்கியதும் இந்த தலத்தில் தான்., என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    10. கோவில்களில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யும் போது அஷ்ட பந்தனம் செய்வது தான் வழக்கம்.

    ஆனால் திருவண்ணாமலை தலத்தில் தங்கத்தைத் கொண்டு சொர்ண பந்தம் செய்து லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர்.

    11. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு நிகராக இதுவரை எந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு ஏற்பட்டதில்லை.

    12. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம், அண்ட சராசரங்களுக்கும் தீப விளக்காக கருதப்படுகிறது.

    13. திருவண்ணாமலையில் கார்த்திகை தீப தரிசனத்தை ஒரு தடவை செய்தாலே, அது 21 தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும் என்று தல புராணப் பாடலில் கூறப்பட்டுள்ளது.

    14. திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஒரு வாரம் வரை எரியும்.

    15. கார்த்திகை தீபம் தினத்தன்று அண்ணாமலையாரும், உண்ணாமலை அம்மனும் ஒன்று சேர கிரிவலம் வருவார்கள்.

    அவர்களுடன் பக்தர்களும் சேர்ந்து வருவது புண்ணியமாகக் கருதப்படுகிறது.

    16. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம், உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொருள் ஒன்றே என்பதையும், "இறைவன் ஒருவனே" என்ற தத்துவத்தையும் உணர்த்துகிறது.

    17. கார்த்திகை தீபத்தன்று அதிகாலை திருவண்ணாமலை கோவிலில் பரணி நேரத்தில் ஏற்றப்படும் பரணி தீபத்தை அங்குள்ள கால பைரவர் சன்னதியில் வைத்து விடுவார்கள்.

    பிறகு மாலையில், அதைத்தான் மலை உச்சிக்கு எடுத்துச் சென்று தீபத்தை ஏற்றுவார்கள்.

    18. திருவண்ணாமலை தீபத்தை காண ஆண்டு முழுவதும் சுமார் 20 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் திரள்கின்றனர்.

    19. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால், பாவம் நீங்கி பிறவிப் பிணி அகழும் என்பது ஐதீகமாகும்.

    20. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டதும், "அண்ணாமலையாருக்கு அரோகரா" என்று பக்தர்கள் முழக்கமிடுவார்கள்.

    இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? "இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, உள்முகத்தால் அத்னவத ஆன்ம ஜோதியைக் காண்பது தான் இந்த தீப தரிசனம் ஆகும்" இதை சொல்லி இருப்பவர் ரமண மகரிஷி.

    21. பஞ்சபூத தலங்களுக்குள் இது நெருப்புக்குரிய தலம்.

    22. இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.

    23. வல்லாள மன்னனுக்கு மகனாக வந்து அவதரித்து இறைவன் அருள் செய்த பதி இதுவே.

    24. அருணகிரி நாதரின் வாழ்வில் அருள் திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த தலம் இது தான்.

    25. இத்திருக்கோவிலின் கிழக்குக் கோபுரம் 217 அடி உயரம் கொண்டு தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது.

    தெற்கு கோபுரமானது, திருமஞ்சன கோபுரம், மேலக்கோபுரம், பேய்க்கோபுரம், வடக்குக் கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம் என்றழைக்கப்படுகிறது.

    26. கோவிலுள் நுழைந்தவுடனே சர்வசித்தி விநாயகருக்கு வலப்பால் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி மற்றும் ரமணர் தவம் செய்த இடம், தரிசிக்கத் தக்கது.

    27. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகப் பெருமானுக்குச் சார்த்திய வேல் இன்றுமுள்ளது.

    28. விசுவாமித்திரர், பதஞ்சலி வியாக்ரபர்தர், அகத்தியர், சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.

    29. 25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இத்திருக்கோவில் (திருவாசகத்தில்) திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது.

    30. வள்ளல் பச்சையப்பர் இக்கோவிலில் அர்த்த சாமக்கட்டளைக்கு ஒரு லட்சம் வராகன் வைத்துள்ள செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டொன்று கோவிலில் உள்ளது.

    • பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனி சன்னதியில் காட்சி தருகிறார்.
    • பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக் கொண்டிருப்பவர்.

    திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது.

    இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர்.

    எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார்.

    தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது.

    ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

    பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனி சன்னதியில் காட்சி தருகிறார்.

    பிரம்மா, இங்கு சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்திருக்கின்றனர்.

    பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக் கொண்டிருப்பவர்.

    இதை உணர்த்தும் விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன.

    மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ, இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

    • பங்குனி மாத 15ம் நாளன்று கொடியேற்றம் நடைபெறும்.
    • இரண்டாம் நாள் கற்பக விருட்சம். மூன்றாம் நாள் பூதவாகனம்,

    திருச்சி தாயுமானவர் ஆலயம் குழந்தைப்பேறு, சுகப்பிரசவ பிரார்த்தனை தலம்.

    தென்னகத் தலங்களுள் இத்தலத்தை தென் கயிலாயம் என்பர்.

    நில எல்லையில் இருந்து பார்த்தால் மூன்றடுக்கு உடையதாக இம்மலை தோற்றமளிக்கும்.

    மட்டுவார் குழலியம்மன் திருக்கோவில், தாயுமானவர் கோவில். உச்சிப் பிள்ளையார் கோவில் என அமைந்துள்ளது.

    மேற்கு பார்த்த மூர்த்தலிங்கம் தமிழகத்தின் நான்காவது பெரிய லிங்கம் ஆகும்.

    பங்குனி மாதம் இக்கோவிலில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.

    அதில் 9ம் நாள் அன்று பங்குனி உத்திரத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்.

    10ம் நாள் தீர்த்தவாரி நடைபெறும். இத்தெப்பத்திற்கு தான் தாயுமானவர் தெப்பம் என பெயர்.

    பங்குனி மாத 15ம் நாளன்று கொடியேற்றம் நடைபெறும்.

    ஒன்பதாம் நாள் பங்குனி உத்திரமாக இருக்கும்படி தான் விழா ஏற்பாடு செய்வார்கள்.

    இரண்டாம் நாள் கற்பக விருட்சம். மூன்றாம் நாள் பூதவாகனம்,

    நான்காம் நாள் கைலாச பர்வதம், ஐந்தாம் நாள் வெள்ளை ரதம், ஆறாம் நாள் யானை வாகனம்,

    ஏழாம் நாள் நந்தி வாகனம், எட்டாம் நாள் தங்க குதிரை வாகனம், ஒன்பதாம் நாள் தெப்ப உற்சவம்,

    பத்தாம் நாள் தீர்த்தவாரியுடன் விழா இனிதே நடைபெற்று முடிவடையும்.

    • கிழக்கு மேற்கு கோபுரங்கள் அடிமுதல் நுனிவரை கருங்கற்களால் கட்டப்பட்டவை.
    • ராமேஸ்வரம் கோவில் கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

    இத்திருக்கோவிலானது மிகவும் பழமை வாய்ந்தது.

    இதன் கர்ப்ப கிரகம் இலங்கையை சேர்ந்தது.

    பராக்கிரம பரகு என்ற மன்னனால் கி.பி.1173ல் கட்டியதாக கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது.

    ராமேஸ்வரம் கோவில் கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

    இக்கோவிலின் கிழக்கு மேற்கு கோபுரங்கள் அடிமுதல் நுனிவரை கருங்கற்களால் கட்டப்பட்டவை.

    இக்கோவிலில் உள்ள நந்தி (செங்கற்சுண்ணாம்பு) அறையால் அமைக்கப்பட்டது.

    இதன் நீளம் 22 அடி, அகலம் 12 அடி உயரம் 17 அடி). இது அழகிய வடிவில் அமையப் பெற்று பார்ப்பதற்கு அழகாக அமையப்பெற்றுள்ளது.

    இத்திருக்கோவிலில் உள்ள பிரகாரங்கள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் அமையப் பெற்றுள்ளது.

    இத்திருக்கோவில் மூன்றாம் பிரகாரம் உலகத்திலேயே நீண்ட பிரகாரமாக கருதப்படுகிறது.

    பக்தர்களுக்கு வசதி

    பக்தர்கள் தங்குவதற்கு தேவஸ்தானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதிகள் கிடைக்கும்.

    இவை தவிர தனியார் துறையில் தங்கும் விடுதிகளும் (லாட்ஜ்) ஏராளமாக உள்ளன.

    இவைகளில் நவீன வசதியுடன் கூடிய அறைகள் குறைந்த வாடகையில் கிடைக்கும்.

    • ஆருத்ரா தரிசனம் (10 நாட்கள்) (டிசம்பர், ஜனவரி)
    • மகா கிருத்திகை (திருக்கார்த்திகை நாள் (பஞ்சமூர்த்திகள் ரத வீதியில் வலம் வருதல்)

    இத்திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள்:

    1. மகா சிவராத்திரி திருவிழா (பிப்ரவரி, மார்ச்).

    2. வசந்த உத்ஸவம் (மே, ஜூன்)

    3. ராமலிங்கம் பிரதிஷ்டை (மே, ஜூன்) ராவண சம்ஹாரம், விபீஷணர் பட்டாபிஷேகம், ராமலிங்க பிரதிஷ்டை.

    4. திருக்கல்யாண திருவிழா (17 நாட்கள்) (ஜூன், ஆகஸ்ட்). தபசு நாள் பல்லக்கில் சயன சேவை திருக்கல்யாண நாள்.

    5. நவராத்திரி விழா (10 நாட்கள்) (செப்டம்பர், அக்டோபர்)

    6. கந்த சஷ்டி விழா (6 நாள்) (அக்டோபர், நவம்பர்)

    7. ஆருத்ரா தரிசனம் (10 நாட்கள்) (டிசம்பர், ஜனவரி)

    இவை தவிர மாத நாள், வார சிறப்பு விழாக்களும் உண்டு.

    1. மாத விழா (ஒவ்வொரு கார்த்திகை)

    2. பட்ச விழா : பிரதோஷம்

    3. வார விழா (வெள்ளிக்கிழமை) அம்பாள் புறப்பாடு.

    சிறப்பு விழாக்கள்

    1. சங்ராந்தி (தை மாத முதல் நாள்) பஞ்ச மூர்த்திகள் ரதவீதியில் வலம் வருதல்.

    2. சித்திரை மாத பிறப்பு (சித்திரை மாத முதல்நாள்) (பஞ்ச மூர்த்திகள் ரத வீதியில் வலம் வருதல்)

    3. மகா கிருத்திகை (திருக்கார்த்திகை நாள் (பஞ்சமூர்த்திகள் ரத வீதியில் வலம் வருதல்)

    4. தெப்போத்ஸவம் : தை மாத பவுர்ணமியில் பஞ்சமூர்த்திகள் வீதி வலம் வந்து லட்சுமண தீர்த்தத்தில் தெப்பத்திருவிழா நடைபெறும்.

    5. வைகுண்ட ஏகாதசியன்றும் ஸ்ரீராம நவமியன்றும் ராமர் புறப்பாடு நடைபெறும்.

    6. ஆடி அமாவாசை தை அமாவாசை நாளில் ஸ்ரீகோதண்டராமர் கருட வாகனத்தில் அக்கினி தீர்த்தத்தில் எழுந்தருளி தீர்த்தம் கொடுப்பார்.

    • ஆலயத்தில் நடத்தப்படும் அபிஷேக, அர்ச்சனைகள் விபரங்கள்
    • உற்சவ விஷேச அலங்காரங்கள் செய்ய, கோவில் முன்அனுமதி பெற வேண்டும்.

    ராமேஸ்வரம் ஆலயத்தில் நடத்தப்படும் அபிஷேக, அர்ச்சனைகள் விபரங்கள்:

    1. சகஸ்ரகலச அபிஷேகம்

    2. சங்காபிஷேகம் (1008)

    3. அஷ்டோத்திர கலச அபிஷேகம் (1008)

    4. ருத்ராபிஷேகம்

    5. உபயாபிஷேகம் (பஞ்சாமிர்தம்)

    6. சங்காபிஷேகம் (108) நெய்வேத்தியத்துடன்

    7. கெங்காபிஷேகம்

    8. பால் அபிஷேகம்

    9. ஸ்படிகலிங்க அபிஷேகம் (சுவாமி சன்னதி)

    10. பன்னீர் அபிஷேகம் (பன்னீர் நீங்கலாக)

    11. கோடி தீர்த்த அபிஷேகம்

    12. விபூதி அபிஷேகம்

    உற்சவங்கள்:

    1. வெள்ளி ரத உத்ஸவம்

    2. பஞ்ச மூர்த்தி உத்ஸவம்

    3. ஸ்ரீஅம்பாளுக்கு அலங்காரம் செய்ய தங்கப் பல்லக்கில் மூன்றாம் பிரகாரம் சுற்றி வருதல்

    4. தங்க ரத வீதி உத்ஸவம்

    உற்சவங்கள் விஷேச அலங்காரங்கள் செய்ய விரும்புகிறவர்கள் கோவில் முன் அனுமதி பெற்று சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.

    திருக்கோவிலாரின் சவுகரியத்தை அனுசரித்து இவைகள் நடத்தி வைக்கப்படும்.

    ×