search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேப்பமரம்"

    • ஏற்காடு அடிவாரம், கோரிமேடு, ஓமலூர், குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பேளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது.
    • மழையினால் குமாரபாளையம் நகராட்சி மின் மயானத்திற்கு எதிரே இருந்த நாகராஜன்- லட்சுமி தம்பதிக்கு சொந்தமான ஓட்டு வீடு இடிந்து விழுந்தது.

    சேலம்:

    தமிழகத்தில் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது. அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயிலும் கொளுத்தி வருவதால், பொதுமக்கள் யாரும் பகல் நேரத்தில் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு வெப்பம் அதிகமாக இருக்கிறது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பல நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவானது. காலை 7 மணிக்கு தொடங்கும் வெயில் மாலை 4 மணி வரை அனலாக கொளுத்தியது. இரவிலும் காற்று குறைந்து வெப்ப அலை வீசியது. இதனால் இரவில் தூக்கமின்றி பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. சேலம் மாநகரில் நேற்று 1.30 மணி அளவில் இடியுடன் கூடிய கன மழை பெய்த தொடங்கியது. இந்த மழை மதியம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. கன மழையால் சேலம் 4 ரோடு, கலெக்டர் அலுவலகம், சாரதா கல்லூரி சாலை, செவ்வாய்ப்பேட்டை, நெத்திமேடு உள்ளிட்ட மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    புறநகர் பகுதிகளான எடப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி, தேவூர், செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, அரசிராமணி, கல்வடங்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் காற்றினால் வாழை மரங்கள், பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்தது.

    ஏற்காடு, ஏற்காடு அடிவாரம், கோரிமேடு, ஓமலூர், குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பேளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது.

    பல நாட்களுக்கு பிறகு பெய்த இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை உருவானது. வெப்ப சலனம் நீங்கி இரவில் வீடுகளில் குளிர்ச்சி நிலவியது.

    மேட்டூரில் நேற்று சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதில் மாலை 3 மணிக்கு மேட்டூர், ஆர்.எஸ்.புரம், பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் உள்ள 60 ஆண்டு பழமையான பெரிய வேப்பமரம் ஒன்று சாய்ந்து சாலையில் சென்ற அரசு பஸ் மீது விழுந்தது. இந்த பஸ் சேலத்தில் இருந்து மாதேஸ்வரன் மலை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஆகும்.

    மரம் சாய்ந்து விழுந்ததில் பஸ்சின் முன்புற கண்ணாடிகள் உடைந்தன. 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். சாலையோரம் மின் கம்பத்தில் உள்ள மின் கம்பி மீதும் வேப்பமர கிளைகள் விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அருகில் இருந்த பொதுமக்கள் பஸ்சில் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

    நடுரோட்டில் பஸ்சின் மீது இந்த வேப்பம் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேட்டூரில் இருந்து சேலம், தர்மபுரி செல்லும் வாகனங்கள் தங்கமாபுரி பட்டணம், சிட்கோ, கருமலைக்கூடல் வழியே உள்ள மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மேட்டூர் தீயணைப்பு குழுவினர் மரத்தை வெட்டி அகற்றினர். ஒரு மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது.

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, பள்ளிப்பாளையம், சேந்தமங்கலம், எருமப்பட்டி, ராசிபுரம், புதுச்சத்திரம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதேபோல் குமாரபாளையத்தில் நேற்று மாலை 3 மணிக்கு மேல் குமாரபாளையம் நகரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மேலும் குமாரபாளையம் சுற்றுப்புற பகுதிகளான எம்.ஜி.ஆர். நகர், சானார்பாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், சீராம்பாளையம், ஆல ங்காட்டு வலசு, கல்லாங்காடு வலசு, சத்யா நகர், தட்டான் குட்டை, வேமன் காட்டு வலசு, வளையக்காரனூர், வட்டமலை, சடைய ம்பாளையம், சாமிய ம்பாளையம், கத்தேரி மற்றும் புளியம்பட்டி உள்பட பல பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தனிந்ததையொட்டி பொதுமக்களும் மற்றும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த மழையினால் குமாரபாளையம் நகராட்சி மின் மயானத்திற்கு எதிரே இருந்த நாகராஜன்- லட்சுமி தம்பதிக்கு சொந்தமான ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் தப்பினர். பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நகரில் மின்சாரம் தடைபட்டது. 

    • காளியம்மன் கோவில் வேப்பமரத்தில் இருந்து முதலில் மரத்தின் ஒரு பகுதியில் மட்டும் பால் வடிந்தது.
    • தமிழகத்தில் கோவிலில் அவ்வப்போது நிகழும் இந்த அதிசயம் தற்போது தஞ்சையிலும் நிகழ்ந்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கரந்தை சி.ஆர்.சி டெப்போ அருகில் எம்ஜிஆர் நகர் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோயிலில் முனீஸ்வரர், நாகம்மன் சன்னதிகளும் பரிவார தெய்வங்களாக உள்ளன. தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். இங்கு சுமார் 40 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் உள்ளது.

    இந்நிலையில் இந்த வேப்பமரத்தில் இருந்து திடீரென வெள்ளை நிறத்தில் பால் வடிந்தது. தொடர்ந்து இடைவிடாமல் பால் வடிந்து வருகிறது.

    தகவல் அறிந்த பக்தர்கள் ஏராளமானோர் கோவிலில் திரண்டு வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயத்தை கண்டு வியந்து தரிசனம் செய்து வருகின்றனர். பலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்து வருகின்றனர்.

    இது பற்றி பக்தர்கள் கூறும்போது, காளியம்மன் கோவில் வேப்பமரத்தில் இருந்து முதலில் மரத்தின் ஒரு பகுதியில் மட்டும் பால் வடிந்தது. தற்போது 3 இடங்களில் வடிந்து ஓடி கொண்டிருக்கிறது என்றனர்.

    தமிழகத்தில் கோவிலில் அவ்வப்போது நிகழும் இந்த அதிசயம் தற்போது தஞ்சையிலும் நிகழ்ந்துள்ளது. 

    • ஜன்ம லக்னத்திற்கு 5-ம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும்.
    • மேலும் நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்ப மரம் நடுவது நன்மை தரும்.

    ராகு, கேதுக்களின் மத்தியில் மீதியுள்ள கிரகங்கள் இடம் பெற்றிருக்குமானால் அது கால சர்ப்ப தோஷம் என்று கூறப்படும்.

    சந்திரனுக்கு முன்னாலோ, அல்லது பின்னாலோ ராகு நின்றால் நாக தோஷம் இருப்பதாக கொள்ள வேண்டும்.

    ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டிலோ அல்லது பன்னிரண்டிலோ ராகு தனித்து நின்றால் நாக தோஷம் உண்டு.

    ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு, ஏழாம் இடத்தில் கேது இருந்தால் அந்த ஜாதகருக்கு நாகதோஷத்தால் திருமண தடை ஏற்படும்.

    ஜன்ம லக்னத்திற்கு 5-ம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும்.

    புத்திர ஸ்தானத்திற்கு 1,5,9 ஆகிய மூன்று திரிகோண ஸதானங்களில் எங்காவது ராகு அல்லது கேது இடம் பெற்றிருந்தால் அது புத்திர தோஷத்தை அளிக்கக்கூடியது.

    இவர்கள் அடிக்கடி சர்ப்ப சாந்தியை செய்து கொள்ள நன்மை உண்டாகும்.

    மேலும் நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்ப மரம் நடுவது நன்மை தரும்.

    மேலும் சுபகிரகங்கள் பார்த்தால் தோஷம் விலகும்.

    • போலீசாக பணியில் இருந்து வரும் ரூபன் பதி கடந்த 3-ந் தேதி இரவு ஜெயமாலா வீட்டிற்கு வந்துள்ளார்.
    • அந்தப் பகுதியில் இருந்த தடயங்களை சேகரித்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த அங்கு செட்டி பாளையம் சேலம் மெயின் ரோடு புதுநகரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் கடந்த 5ஆண்டுகளுக்குமுன்இறந்துவிட்டார். இவரது மனைவி ஜெயமாலா (40) செங்கல்சூளையி ல்கூலிதொழிலாளி. இவர்களுக்கு ஜெகன் பிரியா, சத்யபிரியா ஆகிய2மகள், கிரி என்கிறஒரு மகன் உள்ளனர். மூத்தமகள்ஜெகன் பிரியாவை கடந்த 4வருடங்களுக்கு முன்புதிருமணம் செய்து கொடுத்தனர். இந்த நிலையில் மூத்த மகள் ஜெகன் பிரியாவின் கணவருடைய தம்பி ரூபன் பதி ஜெயமாலா வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். உளுந்தூர்பேட்டையில் போலீசாக பணியில் இருந்து வரும் ரூபன் பதி கடந்த 3-ந் தேதி இரவு ஜெயமாலா வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    பின்னர் இரவு முழுவதும் அங்கிருந்த ரூபன் பதி மறுநாள் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். ரூபன் பதி வேலைக்கு சென்ற சிறிது நேரத்தில் வீட்டு தோட்டத்தில் உள்ள வேப்பமரம் ஒன்றில் துப்பட்டா துணியால் சத்திய பிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புதுப்பேட்டை போலீசில் சத்யபிரியாவின் தம்பி கிரி புகார் கொடுத்தார் . அதில் தனது அக்காள் சத்யபிரியாவின் சாவில் சந்தேகம் உள்ளது என கூறியிருந்தார். புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து சத்திய பிரியா பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூரில் இருந்து தடஅறிவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் தடயங்களைசேகரித்தனர்.தொடர்ந்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலை மையிலான போலீசார் அந்தப் பகுதியில் இருந்த தடயங்களை சேகரித்து விசாரணையை முடுக்கிவிட்டனர். விசாரணையில் தாயாரும், தாயாரின்கள்ளக்காதலன் ரூபன் பதியும் சத்திய பிரியாவை தற்கொலைக்கு தூண்டியதுதெரியவந்தது. இவர்களது தொல்லையால் தான் இளம் பெண் சத்திய பிரியா தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.இதனைதொடர்ந்து தற்கொலை வழக்கைதற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்குபெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டிலோ அல்லது பன்னிரண்டிலோ ராகு தனித்து நின்றால் நாக தோஷம் உண்டு.
    • ஜன்ம லக்னத்திற்கு 5-ம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும்.

    ராகு, கேதுக்களின் மத்தியில் மீதியுள்ள கிரகங்கள் இடம் பெற்றிருக்குமானால் அது கால சர்ப்ப தோஷம் என்று கூறப்படும். சந்திரனுக்கு முன்னாலோ, அல்லது பின்னாலோ ராகு நின்றால் நாக தோஷம் இருப்பதாக கொள்ள வேண்டும். ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டிலோ அல்லது பன்னிரண்டிலோ ராகு தனித்து நின்றால் நாக தோஷம் உண்டு.

    ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு, ஏழாம் இடத்தில் கேது இருந்தால் அந்த ஜாதகருக்கு நாகதோஷத்தால் திருமண தடை ஏற்படும். ஜன்ம லக்னத்திற்கு 5-ம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும். புத்திர ஸ்தானத்திற்கு 1,5,9 ஆகிய மூன்று திரிகோண ஸதானங்களில் எங்காவது ராகு அல்லது கேது இடம் பெற்றிருந்தால் அது புத்திர தோஷத்தை அளிக்கக்கூடியது.

    இவர்கள் அடிக்கடி சர்ப்ப சாந்தியைச் செய்து கொள்ள நன்மை உண்டாகும். மேலும் நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்பமரம் நடுவது நன்மை தரும். மேலும் சுபகிரகங்கள் பார்த்தால் தோஷம் விலகும்.

    • மரத்தின் வளர்ச்சிக்கு ஹியூமிக் ஆசிட் 1 கிலோவும், கூடுதல் வளர்ச்சிக்கு வேப்ப புண்ணாக்கு 5 கிலோவும் அந்த பள்ளத்தில் போடப்பட்டது.
    • சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வேரோடு சாய்ந்த மரத்தை நட்டு முடித்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் உள்ள முகமது அலி தெருவில் கோலம் கொண்ட அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா, ஜாத்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த கோவிலின் முன்பு 150 ஆண்டு பழமையான வேப்பமரம் உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதில் கோவில் முன்பு இருந்த பழமையான வேப்ப மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

    அந்த மரத்தை அதே இடத்தில் நட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இந்த வேண்டுகோளை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ரா தேவி நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி கோவில் தக்கார் பிரகாஷ், மற்றும் வேளாண்மை துறை சார்பில் விஜயகாந்த், மின்சாரத்துறை சார்பில் உதவி பொறியாளர் தட்சிணா மூர்த்தி உள்பட அதிகாரிகள் வேரோடு சாய்ந்த வேப்ப மரத்தை மீண்டும் அதே இடத்தில் நடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    சாய்ந்த மரத்தின் கிளைகளை முழுவதுமாக முதலில் அகற்றினர். பின்னர் அந்த இடத்தில் 5 அடி ஆழத்திற்கு வேர்கள் ஊடுருவும் பகுதி வரை ஆழமாக பள்ளம் தோண்டப்பட்டு ராட்சத கிரேன் உதவியுடன் வேப்பமரத்தை அதே இடத்தில் நட்டனர். பணி நடைபெற்றபோது, மரம் மின்கம்பத்தின் மீது படாமல் இருப்பதற்காக அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    மேலும் வேளாண்மை துறை சார்பில் வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் பரிந்துரையின் பேரில் காப்பர் ஆக்சி குளோரைடு 50 சதவிகித சத்து பவுடர் அரை கிலோவில் மரத்தின் வேரின் அடி பாகத்தில் நன்கு நனையும்படி மெழுகு பதத்தில் பூசப்பட்டது. மரத்தின் வளர்ச்சிக்கு ஹியூமிக் ஆசிட் 1 கிலோவும், கூடுதல் வளர்ச்சிக்கு வேப்ப புண்ணாக்கு 5 கிலோவும் அந்த பள்ளத்தில் போடப்பட்டது.

    சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வேரோடு சாய்ந்த அந்த மரத்தை நட்டு முடித்தனர். இதனை கண்டு அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அந்த மரத்திற்கு பக்தர்கள் மஞ்சள், குங்குமம் பூசி வழிபட்டு சென்றனர்.

    ×