search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணாமலையார்"

    • மலையே ஓர் அழகான நந்தி வடிவமாகத் தோன்றுவது கண்கொள்ளாக் காட்சி.
    • இது மலை நந்தி என்றால், கிரிவலப் பாதையில் நிறைய சிலை நந்திகளும் உண்டு.

    கிரிவலத்தின் தொடக்கத்தில், அதாவது அருணாசலேஸ்வரர் ஆலயப் பகுதியில் மலை ஒன்றாகத் தெரியும்.

    பின்னர் அந்தப் பாதையின் வெவ்வேறு இடங்களில் இரண்டாக, மூன்றாகத் தெரியும்,

    நிறைவாகக் கிரிவலத்தைப் பூர்த்தி செய்யும் நேரத்தில் ஐந்தாகத் தெரியும்.

    உதாரணமாக, கவுதம ஆசிரமம் எதிரே மலை மூன்று பிரிவுகளாகத் தெரியும்.

    பக்தர்கள் இதனைத் திரிமூர்த்தி தரிசனம் என்று அழைக்கிறார்கள்.

    கிரிவலம் வருகிறவர்கள் இங்கே விழுந்து கும்பிடுகிற வழக்கம் உள்ளது.

    அதேபோல், நிருதி லிங்கத்திலிருந்து சற்றுத் தொலைவில் உள்ளது நந்தி முக தரிசனம் என்ற இடம்.

    இங்கே அறிவிப்புப் பலகை உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கவனித்தால்,

    மலையே ஓர் அழகான நந்தி வடிவமாகத் தோன்றுவது கண்கொள்ளாக் காட்சி.

    இது மலை நந்தி என்றால், கிரிவலப் பாதையில் நிறைய சிலை நந்திகளும் உண்டு.

    அஷ்ட லிங்கங்கள், சூரிய, சந்திர லிங்கங்களுக்கு எதிரே உள்ள நந்திகளைத் தவிர,

    மலையே சிவம் என்பதால் அதனைப் பார்த்தபடி ஆங்காங்கே நந்தி வடிவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    • அந்த இடுக்கை மேலோட்டமாகப் பார்த்தால், நாம் இதற்குள் நுழையவே முடியாது என்றுதான் தோன்றும்.
    • நரம்புக் கோளாறுகள், ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட பல உபாதைகள் விலகிவிடும்.

    இடைக்காட்டுச் சித்தர் கிரிவல பாதையில் உள்ள ஒரு மண்டபத்தில் மூன்று யந்திரங்களைப் பிரதிஷ்டை செய்துள்ளார்.

    இவற்றை நாம் நெருங்கினாலே போதும், யந்திரங்களின் ஆகர்ஷண சக்தி நம்மீது பரவ,

    நம் உடலில் உள்ள நரம்புக் கோளாறுகள், ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட பல உபாதைகள் விலகிவிடும் என்கிறார்கள்.

    ஆனால் ஒரே ஒரு பிரச்சினை, சித்தர் பிரதிஷ்டை செய்த அந்த யந்திரங்களின் மீது ஒரு சிறிய கோபுரம் உள்ளது.

    அதற்குள் நாம் நுழைந்து வரவேண்டும்.

    அந்த இடுக்கை மேலோட்டமாகப் பார்த்தால், நாம் இதற்குள் நுழையவே முடியாது என்றுதான் தோன்றும்.

    ஆனால் ஒருக்களித்துப் படுத்த நிலையில் இடுக்கின் ஒருபுறமாகத் தலையையும் ஒரு கையையும் உள்ளே நுழைக்க வேண்டும்.

    பின்னர் மறுபுறமிருந்து உந்தித் தள்ளி வெளியே வரவேண்டும்.

    வயிற்றுப் பகுதியில் லேசாக அழுத்தும், அவ்வளவுதான்! அடுத்த பக்கம் வந்து விடலாம்.

    • திருவண்ணாமலை மலை மீது ஏராளமான ரகசிய குகைகள் இருக்கின்றன.
    • அண்ணாமலையார் ஆண்டுக்கு இரண்டு தடவைதான் வெளியில் வருவார்.

    திருவண்ணாமலை மலை மீது ஏராளமான ரகசிய குகைகள் இருக்கின்றன.

    அந்த குகைகளில் அரூப நிலையில் சித்தர்கள் தவம் இருந்து வருகிறார்கள்.

    பிராப்தம் உள்ளவர்களுக்கு அவர்களது காட்சி கிடைக்குமாம்.

    நேர் வாசலில் வர மாட்டார்

    அண்ணாமலையார் ஆண்டுக்கு இரண்டு தடவைதான் வெளியில் வருவார்.

    ஆனால் ராஜகோபுரம் வழியாக அவர் வெளியில் வர மாட்டார்.

    பக்கத்தில் உள்ள மற்றொரு வாசல் வழியாகத்தான் அவர் வெளியே வருவார் என்று கூறப்படுகிறது.

    • கிரிவல பாதையில் உள்ள முதல் லிங்கம் இந்திர லிங்கம்.
    • ஈசனே இங்கு இருப்பதால் இது ஈசான்ய லிங்கம் எனப்பட்டது.

    இந்திரலிங்கம்:

    கிரிவல பாதையில் உள்ள முதல் லிங்கம் இந்திர லிங்கம்.

    கிழக்கு திசையில் இக்கோவில் அமைந்து உள்ளது.

    கிழக்கு திசைக்கு கிரக அதிபதி சூரியன், சுக்கிரன்.

    இங்கு வழிபாடு செய்தால் லட்சுமி கடாட்சமும், வருமானமும், நீண்ட ஆயுள் மற்றும் புகழ் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அக்னி லிங்கம்:

    இது செங்கம் ரோட்டில் தாமரை குளத்திற்கு அருகே அமைந்துள்ளது.

    தென் கிழக்கு திசைக்கு அதிபதி சந்திரன்.

    இங்கு வழிபாடு செய்தால் நோய், பிணி, பயம் முதலியவை விலகும்.

    எதிரிகள், தொல்லை, மனபயம் நீங்கும்.

    எமலிங்கம்:

    கிரிவலப் பாதையில் 3வது லிங்கம். ராஜ கோபுரத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

    கோவிலின் பக்கத்திலேயே சிம்ம தீர்த்தம் உள்ளது.

    தெற்கு திசையின் அதிபதி செவ்வாய்.

    இங்கு இறைவனை மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்தால் பொருளாதார கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும்.

    நிருதி லிங்கம்:

    மலை சுற்றும் பாதையில் 4வது லிங்கமாகும்.

    நிருதி லிங்கத்தின் முன்னால் உள்ள நந்தி அருகில் இருந்து மலையை பார்த்தால் மலையில் சுயம்புவாக (இயற்கையாக) அமைந்த நந்தி தெரியும்.

    இத்திசைக்கு அதிபதி ராகு.

    இங்கு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம், சுகவாழ்வு, புகழ் ஆகியவையும் சங்கடமான நிலைமைகளில் இருந்து விடுதலையும் கிடைக்கும்.

    வருண லிங்கம்:

    ராஜகோபுரத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

    கோவிலின் அருகிலேயே வருண தீர்த்தம் அமைந்துள்ளது.

    மேற்கு திசையின் அதிபதி சனி.

    இங்கு வழிபட்டால் கொடிய நோயிலிருந்து விடுதலையும், புகழும் கிடைக்கும்.

    வாயு லிங்கம்:

    இக்கோவிலை அடையும் போது இயற்கையாகவே ஒரு அமைதி கிடைக்கும்.

    காற்று தென்றலாக வீசும். திசை அதிபதி கேது.

    இங்கு பிரார்த்தனை செய்தால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுதலை, மன அமைதி, கண் திருஷ்டி நீங்குதல், பெண்களுக்கு நல்வழி கிடைக்கும்.

    குபேர லிங்கம்:

    7வது லிங்கமாக அமைந்துள்ளது குபேர லிங்கம். இத்திசையின் அதிபதி குரு.

    இங்கு இறைவனை வேண்டினால் பொருளாதாரம் உயரும்.

    மனம் அமைதி அடையும்.

    ஈசான்ய லிங்கம்:

    கிரிவலப் பாதையில் கடைசி லிங்கம் இது.

    ஈசனே இங்கு இருப்பதால் இது ஈசான்ய லிங்கம் எனப்பட்டது.

    எல்லா நிலைகளையும் கடந்து அமைதி தேடும் இடமாகும்.

    இக்கோவில் நிலப்பரப்பில் இருந்து சற்று கீழ் இறங்கி இருக்கும். இத்திசையின் அதிபதி புதன்.

    இங்கு இறைவனை வேண்டிக் கொண்டால் மனம் ஒருநிலை அடையும்.

    இறைநிலை பெறுவதற்கு வழிகாட்டும்.

    • திருவண்ணாமலை மலை மீது வட சிகரத்தில் ஒரு மிகப்பெரிய ஆல மரம் உள்ளது.
    • ரமண மகிரிஷிக்கு ஒரு முறை, அந்த ஆலமரத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

    திருவண்ணாமலை மலை மீது வட சிகரத்தில் ஒரு மிகப்பெரிய ஆல மரம் உள்ளது.

    அங்கு அருணாசலேஸ்வரரே ஆழ்ந்த தவத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.

    அதாவது இறைவனை நோக்கி இறைவனே தவம் இருக்கும் அதிசயம் இத்தலத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

    ரமண மகிரிஷிக்கு ஒரு தடவை, அந்த ஆலமரத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

    உடனே அவர் வட சிகரத்தில் உள்ள அந்த குறிப்பிட்ட பகுதிக்கு சென்றார்.

    அப்போது நிறைய குளவிகள் கொட்டி அவரை விரட்டி விட்டன.

    இதனால் ரமணர் அந்த ஆல மரத்தை பார்க்க இயலாமல் திரும்பினார்.

    யாராலும் பார்க்க முடியாதபடி அந்த மரம் உள்ளதாம்.

    அங்கே நிறைய சித்தர்கள் இப்போதும் தவம் புரிவதாக ரமணர் குறிப்பிட்டுள்ளார்.

    • அக்னிமுக தரிசனம் என்ற ஒரு பகுதியும் கிரிவலப்பாதையில் உண்டு.
    • இங்கு கிரிவலம் வருகையில் அவர்களுக்கு இது அக்னி மலையாகவே காட்சி தரும்.

    கிருத யுகத்தில் இருந்து இன்னும் வாழ்ந்து கொண்டிக்கின்ற மகான்கள், ரிஷிகள், தேவர்கள்,கந்தர்வர்கள் போன்றோர்

    இங்கு கிரிவலம் வருகையில் அவர்களுக்கு இது அக்னி மலையாகவே காட்சி தரும்.

    அதே போல் திரேதா யுக வாசிகள் இங்கு வந்தால் அவர்களுக்கு இது இன்னமும் மாணிக்க மலையாகவே காட்சி அளிக்கும்.

    துவாரா யுக வாசிகளுக்கு இம்மலை பொன்மலையாகவே காட்சி தரும், ஏன் மரகத மலை, வைரமலை, சித்ர மலை, ரஜத மலை, வைடூரிய மலையாகவும் காட்சித்தரும்.

    அக்னிமுக தரிசனம்

    அக்னிமுக தரிசனம் என்ற ஒரு பகுதியும் கிரிவலப்பாதையில் உண்டு.

    இங்கு ஹோம வழிபாட்டை மேற்கொள்வோருக்குக் கிட்டும் பலாபலன்களோ சொல்லிலோ, பொருளிலோ அடங்காத மகத்துவத்தைக் கொண்டதாகும்.

    ஸ்ரீ பிரம்மமூர்த்தி தனக்குரிய வேள்விகளை இப்பகுதியில்தான் இன்றைக்கும் நிகழ்த்துகின்றார்.

    சூரிய பகவானும், தனக்குரிய அக்னி சக்தியை இப்பகுதியிலிருந்து தினமும் தனக்கெனப் பெற்றுக் கொள்கின்றார்.

    அஷ்டதிக்கு லிங்கங்களில் ஸ்ரீஅக்னி லிங்க சன்னதியில் கார்த்திகை நட்சத்திரம் தோறும்,

    அக்னி பகவானுக்கு உரித்தான செவ்வாய் ஹோரையில் ஹோம வழிபாட்டை மேற்கொள்வோருக்குப் பலவிதமான அற்புதமான பலன்கள் கிடைக்கும்.


    • திருவண்ணாமலையில் கவுரி வனம் என்றொரு வனம் உள்ளது.
    • அந்த இடத்துக்கு செல்பவர்கள் நினைவிழந்து விடுவார்கள்.

    திருவண்ணாமலையில் கவுரி வனம் என்றொரு வனம் உள்ளது.

    அந்த இடம் பார்வதி தேவி தவம் இருந்த இடமாகும்.

    அந்த இடத்துக்கு செல்பவர்கள் நினைவிழந்து விடுவார்கள்.

    வந்த வழி தெரியாமல் மலையில் தவிக்க நேரிடும் என்று தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    ரமணரின் பக்தர்களில் ஒருவரான ஹம்பரீஸ் என்பவருக்கு அந்த அனுபவம் ஏற்பட்டது.

    கடைசியில் அவர் ஒரு விறகு வெட்டி மூலம் மலையில் இருந்து கீழே இறங்கினார்.

    தமிழ்நாட்டில் சித்தர்கள் வாழும் எந்த மலையிலும் இப்படி அதிசய வனம் இல்லை.

    திருவண்ணாமலையில் மட்டுமே அந்த அதிசய வனம் உள்ளது.

    • பூமியிலேயே மிகப்பெரிய சுயம்பு லிங்க மூர்த்தியாக திருவண்ணாமலை கூறப்படுகிறது.
    • மலையின் மேல் உள்ள ஒவ்வொரு கல்லும் ஒரு சுயம்புலிங்கமே!

    ஆதி சிவன் தன் திருமேனியையே மலையாகக்கொண்ட இத்தலம் தற்போது கல்மலையாகக் காட்சியளிக்கின்றது.

    ஆனால் அதனுள் பொதிந்து கிடக்கும் ஆன்மீக பொக்கிஷங்களோ ஏராளம் ஏராளம்.

    பூமியிலேயே மிகப்பெரிய சுயம்பு லிங்க மூர்த்தியாக திருவண்ணாமலை கூறப்படுகிறது.

    மலையின் மேல் உள்ள ஒவ்வொரு கல்லும் ஒரு சுயம்புலிங்கமே!

    எனவேதான் திருவண்ணாமலை தலத்தில் உள்ள சிறு மண்ணையோ, கல்லையோ எவரும் எங்கும் எடுத்துச் செல்லக்கூடாது என்பார்கள்.

    "அடிக்கொரு லிங்கம், அடித்துகள் பட்ட இடமெல்லாம் கோடி கோடி லிங்கங்கள்" என்று ஸ்ரீஅகஸ்திய கிரந்தம் வர்ணிப்பதன் ஆன்மீக ரகசியம் இதுவே!

    • திருவண்ணாமலையில் அன்னதானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதது.
    • செவ்வாய், புதன் - தக்காளி, கீரை சாதம்

    திருவண்ணாமலையில் அன்னதானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதது.

    திருவண்ணாமலையில் யார் ஒருவர் பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கிறார்களோ அவர்களது கர்ம வினைகள் நீங்கும்.

    அதிலும் எந்த தினத்தில் எந்த வகை சாதத்தை தானம் செய்ய வேண்டும் என்று ஒரு விதி உள்ளது.

    ஞாயிறு - எலுமிச்சை சாதம்.

    திங்கள் - தேங்காய் சாதம்

    செவ்வாய், புதன் - தக்காளி, கீரை சாதம்

    வியாழன், வெள்ளி - பொங்கல் சாதம்

    சனி - புளியோதரை

    இந்த ஐதீகப்படி பார்த்தால் வரும் கார்த்திகை தினத்தன்று வெள்ளிக்கிழமை என்பதால் பொங்கல் வகைகளை தானம் செய்யலாம்.



    • கிரிவலம் வரும்போது அஷ்ட லிங்கங்களைத் தரிசிக்கலாம்.
    • அவரவர் நட்சத்திரம், ராசிக்கு உரிய லிங்கத்தை வழிபட்டால் நலம் உண்டாகும்.

    கிரிவலம் வரும்போது அஷ்ட லிங்கங்களைத் தரிசிக்கலாம்.

    இவை ஒவ்வொன்றும், எட்டுத் திசைகளின் காவல் தெய்வங்கள், வெவ்வேறு ராசியின் அதிபதிகள்,

    அவரவர் நட்சத்திரம், ராசிக்கு உரிய லிங்கத்தை வழிபட்டால் நலம் உண்டாகும்.

    • ரிஷபம், துலாம் - இந்திர லிங்கம்

    • சிம்மம்- அக்னி லிங்கம்

    • விருச்சிகம் - எம லிங்கம்

    • மேஷம்- நிருதி லிங்கம்

    • மகரம், கும்பம் - வருண லிங்கம்

    • கடகம்- வாயு லிங்கம்

    • தனுசு, மீனம் - குபேர லிங்கம்

    • மிதுனம், கன்னி- ஈசான்ய லிங்கம்


    • இறைவன்,தேவியை ஆட்கொண்டு தம் இடப்பாகத்தை தேவிக்கு அருளியதாக புராணம் கூறுகிறது.
    • மலைச்சரிவின் ஒரு விளிம்பில், ரிஷப வாகனத்தின் தலைப்பகுதி மட்டும் தெரியும்.

    இறைவனின் இடப்பாகத்தைப் பெற பார்வதிதேவி திருவண்ணாமலை கோவிலில் தவம் இயற்றி அப்பேற்றைப் பெற்றார்.

    தேவியின் தவ வலிமை கண்டு இரங்கிய இறைவன் "மலை சுற்றும் வழியில் ரிஷப வாகனத்தில் வந்து ஆட்கொள்வேன்" என்றார்.

    அதன்படி தேவி மலைவலம் வரும்போது நிருதி திசையின் திருப்பத்தில், ரிஷப வாகனத்தில் வந்த இறைவன்,

    தேவியை ஆட்கொண்டு தம் இடப்பாகத்தை தேவிக்கு அருளியதாக புராணம் கூறுகிறது.

    நிருதி லிங்கத்தை அடையும் இடத்திலிருந்து தெற்கிலிருந்து மேற்கு முகமாகத் திரும்பும் வளைவில்,

    மலை வலம் வருவோர் நின்று மலையைப் பார்த்தால் மலைச்சரிவின் ஒரு விளிம்பில்,

    ரிஷப வாகனத்தின் தலைப்பகுதி மட்டும் தெரியும்.

    செங்கம் செல்லும் பாதையில் இருந்து பார்த்தாலும் இவ்வரிய காட்சியைக் காணலாம்.

    பதிகங்கள் பிறந்த தலம்

    திருஞானசம்பந்த சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசக சுவாமிகள் முதலிய சமயப் பெரியார்கள் அண்ணாமலையானைப் பற்றி பாடி, பதிகங்களையும் இயற்றியுள்ளனர்.

    முக்கியமாய் மாணிக்கவாசக சுவாமிகள் பாடிய திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி இத்தலத்தில் சிறந்தது.

    இதுவுமன்றி, அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், கந்தரலங்காரம் கந்தரனுபூதி, திருவகுப்பு முதலிய முருகப் பெருமான் திருவடிப்புகழ் நூல்கள் இங்கு தான் இயற்றப்பட்டன.

    • மலை சுற்றும் பாதையில் இரண்டாகத் தெரியும். அது அர்த்த நாரீஸ்வர தத்துவம்.
    • மலையின் மேற்றிசையில் இருந்து பார்த்தால் மூன்றாகத் தெரியும். அது திரிமூர்த்தி தத்துவம்.

    திருவண்ணாமலை தலத்தில் எட்டு திசையில் இருந்து பார்க்கும் போதும் மலை எட்டுவித அமைப்பாய் தெரியும்.

    மற்ற இடங்களில் மலை மேல் கடவுள். இங்கு மலையே கடவுள்.

    இங்கு மலை வடிவில் சுயம்பு என்பதால், தீபத் திருநாளன்றி வேறெந்த நாளிலும் மக்கள் மலை ஏறுகிறதில்லை.

    இத்தனை பெரிய சுவாமிக்கு எப்படி அபிஷேக ஆராதனை நடத்துவது?

    சாமான்ய உள்ளங்களில் மருட்சி ஏற்படும். எனவே தான் ஈசன் மலை அடிவாரத்தில் ஒரு சிறிய சுயம்பு லிங்கமாய் அமர்ந்து கொண்டார்.

    இதுதான் இன்றைய அண்ணாமலையார் கோவில்.

    கீழ்த்திசையில் இருந்து நாம் மலையைப் பார்க்கின்ற போது ஒற்றையாய் தெரியும். அது ஏகலிங்க தத்துவம்.

    மலை சுற்றும் பாதையில் இரண்டாகத் தெரியும். அது அர்த்த நாரீஸ்வர தத்துவம்.

    மலையின் மேற்றிசையில் இருந்து பார்த்தால் மூன்றாகத் தெரியும். அது திரிமூர்த்தி தத்துவம்.

    மலையை சுற்றி முடிக்கின்ற கட்டத்தில் ஐந்து முகங்களாகக் காணப்படும். இது ஈஸ்வரனின் பஞ்சமுக தத்துவம்.

    இப்படி அநேக தத்துவங்களை தன்னுள் அடக்கி அமைதியாய் கொலுவீற்றிருக்கிறது அண்ணாமலை.

    ×