என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பணிக்கு வராத டாக்டர்கள்"
- க.விலக்கு பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை என புகார் எழுந்தது.
- பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் ஒப்புதலுடன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி:
தேனி அருகே க.விலக்கு பகுதியில் அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த ஆஸ்பத்தி ரிக்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாது கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 32 பேர் தலைகாய சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்து சிகிச்சை அளிக்க நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணத்துவம் பெற்ற டாக்டர்கள் கல்லூரி ஆஸ்பத்திரியில் தங்கியிருக்க வேண்டும்.
ஆனால் 2018-ம் ஆண்டு பணியில் சேர்ந்த டாக்டர் சந்தானகிருஷ்ணன் தேனி மருத்துவக்கல்லூரிக்கு வருவதில்லை. வருகை பதிவிற்கான பயோமெட்ரிக் பதிவு செய்வதும் இல்லை என புகார் எழுந்தது. விபத்தில் பாதிக்கப்பட்டு தலைக்காய சிகிச்சைக்காக மதுரைக்கு பரிந்துரை செய்யப்படுபவர்களில் பலர் வழியிலேயே உயிரி ழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே அவர் மீது நட வடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து ஆஸ்பத்திரி மருத்துவத்துறை அதிகாரி கள் கூறுகையில்,
டாக்டர் சந்தான கிருஷ்ணன் தேனி மருத்துவ க்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு முறையாக பணிக்கு வருவதில்லை என பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தனர். இதுகுறித்து விளக்க குறிப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால் இதற்கு முறையான பதிலை அளிக்காத அவர் நேரிலும் விளக்கம் அளிக்கவில்லை. இதனால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மேலும் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதால் டாக்டர் சந்தானகிருஷ்ணன் மீது பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் ஒப்புதலுடன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் முறையாக பணியாற்றாததால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.எனவே டாக்டர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றனர்.