search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷவாயு விபத்து"

    • கலெக்டர் வளர்மதி வழங்கினார்
    • தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட்டில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் கடந்த 16-ந் தேதி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது விஷவாயு தாக்கியது.

    இதில் வேலூர் மாவட்டம், சதுப்பேரி கிராமத்தைச் சார்ந்த தொழிலாளி செந்தமிழ் செல்வன் (31) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து செந்தமிழ் செல்வன் குடும்பத்திற்கு அரசின் உடனடி நிவாரணத் தொகையாக ரூ.6 லட்சத்திற்கான காசோலையினை , மாவட்ட கலெக்டர் வளர்மதி, உயிரிழந்த செந்தமிழ் செல்வனின் மனைவி ஷீலாவிடம் வழங்கினார்.அப்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் பூங்கொடி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    மேலும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

    தொழிற்சாலையில் நடந்த இந்த விபத்து பெரும் அபாயகரமானது. இனி வரும் காலங்களில் இது போன்ற விபத்துகள் நடைபெறாத வண்ணம் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர் கண்காணிப்பு இருத்தல் வேண்டும்.

    அதன் அடிப்ப டையில் ராணி ப்பேட்டை மாவட்டத்தில் பல மாதங்களாக இயங்காத அனைத்து தொழிற்சா லைகளிலும், தொழிற்சா லையில் உற்பத்தி மற்றும் உற்பத்தி அல்லாத பணியை தொடங்குவதற்கு முன் தொழிற்சாலை நிர்வாகத்தினர், மேலாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் மாவட்ட கலெக்டர்,தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார அலுவலர், மாசுகட்டுப்பாட்டு வாரியம், போலீஸ் நிலையங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன்அறிவிப்பு தெரிவித்த பின் பணியை தொடங்க வேண்டும்.

    தொழிற்சாலையில் மேற்கண்ட பணியை மேற்கொள்ள எந்தவொரு அறிவிப்புமின்றி பணி செய்தால் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடி சட்டரீதியான குற்றவியல் நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×