search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா வழக்கு"

    • குண்டர் சட்டத்தில் கைது
    • மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தாலுகா, பில்லாந்தி, மேல்சீசமங்கலம், கிராமத்தை சேர்ந்த படப்பை விக்கி (எ) விக்னேஷ் (26) என்பவரை போலீசார் கடந்த மாதம் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் வளர்மதி, அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் படப்பை விக்கி (எ) விக்னேனை போலீசார் கைது செய்து சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • சதாம் உசேன் தச்சநல்லூர் பெருமாள்கோவில் தெருவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
    • கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டவர் திடீரென கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது 29). இவர் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாக கூறி அவரை போலீசார் கைது செய்ய தேடிய நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டார்.

    இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். அவர் நெல்லையை அடுத்த தச்சநல்லூரில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படையினர் அங்கு நேற்று விரைந்தனர். அப்போது சதாம் உசேன் தச்சநல்லூர் பெருமாள்கோவில் தெருவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. உடனே அங்கு சென்று அவரை கைது செய்து ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றனர்.

    அப்போது சிறிது நேரத்தில் ஜீப்பில் இருந்த சதாம் உசேன் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கையை அறுத்துக்கொண்டார். இதில் அவரது கையில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தனிப்படையினர் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டவர் திடீரென கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×