என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நல்லதங்காள் ஓடை அணை"
- உடையார் குளத்திற்கு 12.96 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்படுகிறது.
- 26 நாட்கள் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
சென்னை :
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவில் உள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க பாசன பகுதியில் உள்ள 4 ஆயிரத்து 744 ஏக்கர் பரப்பளவிலான பயிர்களை காப்பாற்றும் பொருட்டும், கால்நடைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டும், நல்லதங்காள் பிரதான கால்வாய் மதகு வழியாக 21-ந் தேதி (நாளை) முதல் அடுத்த மாதம் (ஜூன்) 15-ந் தேதி வரை 42.34 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், உடையார்குளம் பாசன பகுதியில் உள்ள 87.36 ஏக்கர் பரப்பளவிலான பயிர்களை காப்பாற்றும் பொருட்டும், ஆற்று மதகு மூலம் நல்லதங்காள் ஓடை வழியாக உடையார் குளத்திற்கு 12.96 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்படுகிறது.
இதன்மூலம் மொத்தம் 4,831.36 ஏக்கர் நிலங்களுக்கு 55.30 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தகுந்த இடைவெளி விட்டு 26 நாட்கள் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.