search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடன் தற்கொலை"

    • சாருமதி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார். கடன் பிரச்சினையால் சித்த மருத்துவர் குடும்பமே பலியாகி விட்டது.
    • கங்காதரனுக்கு கடன் கொடுத்தவர்கள் யார்?யார்? அவரை யாரேனும் மிரட்டினார்களா என்ற விபரத்தை போலீசார் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

    போரூர்:

    சாலிகிராமம், திலகர் தெருவில் வசித்து வந்தவர் கங்காதரன். சித்த மருத்துவர். இவரது மனைவி சாருமதி (வயது57). நெடுஞ்சாலைத் துறையில் சூப்பிரண்டாக வேலை பார்த்து வந்தார். இவர்களது மகள் ஜனபிரியா.

    கங்காதரன் கடந்த சில மாதங்களாகவே கடன் பிரச்சினையால் தவித்து வந்ததாக தெரிகிறது மேலும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்தனர்.

    இதனால் விரக்தி அடைந்த கங்காதரன் கடந்த 11-ந்தேதி நள்ளிரவு உறவினர் ஒருவருக்கு தற்கொலை செய்யப் போவதாக செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பினார்.

    பின்னர் கங்காதரன் அவரது மனைவி சாருமதி மகள் ஜனபிரியா ஆகிய 3 பேரும் அளவுக்கு அதிகமாக விஷ மாத்திரைகளை சாப்பிட்டனர். இதில் கங்காதரன் அவரது மகள் ஜனபிரியா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த சாருமதியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சாருமதி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். கடன் பிரச்சினையால் சித்த மருத்துவர் குடும்பமே பலியாகி விட்டது.

    கங்காதரனுக்கு கடன் கொடுத்தவர்கள் யார்?யார்? அவரை யாரேனும் மிரட்டினார்களா? என்ற விபரத்தை போலீசார் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

    ×