search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமல காமாட்சியம்மன் கோவில்"

    • நாளை காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவியம், நவகிரக ஹோமம், தீபாராதனை நடைபெற உள்ளது.
    • 25-ந் தேதி முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெற உள்ளது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த வாளவாடியில் கமல காமாட்சியம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் புனரமைப்பு செய்து கும்பாபிஷேக விழா நடத்துவதென பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக புனரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவுற்ற நிலையில் நாளை மறுநாள் 24 ந் தேதி புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக நாளை செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், புண்யாகவாஜனம், பஞ்சகவியம், நவகிரக ஹோமம், கோ பூஜை, தீபாராதனை நடைபெற உள்ளது. நாளை மாலை 4.30 மணிக்கு வாஸ்து சாந்தி, கும்ப ஸ்தாபனம், யாக சாலை பிரவேசம்,பூர்ணாகுதி உள்ளிட்ட முதல் கால பூஜையும், இரவு 10.30 மணிக்கு கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    அதைத் தொடர்ந்து நாளை மறுநாள் 24-ம் தேதி (புதன்கிழமை) காலை 4.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், கலசங்கள் யாகசாலையில் இருந்து மூலாலயம் புறப்பாடு நிகழ்ச்சியும் காலை 6 மணிக்கு விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகமும், அதைத்தொடர்ந்து 6:30 மணிக்கு விநாயகர், மகாவிஷ்ணு, கமலகாமாட்சி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.இதையடுத்து 10.30 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. 25 -ந் தேதி முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.  

    ×