search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளம்பரதட்டிகள்"

    • அரியலூர் நகராட்சியில் சாலையோரம் உள்ள விளம்பரதட்டிகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
    • நகர்பகுதிகள் முழுவதும் ஆக்கிரமிப்புகள் மிகுந்து நடந்துகூட செல்லமுடியாத சூழ்நிலைக்கு இருந்து வருகின்றது

    அரியலூர்,

    அரியலூர் நகராட்சியில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றது. முக்கிய நகர பகுதிகளுக்கு 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. 40 கி.மீட்டர் சுற்றளவு பகுதியிலிருந்து தினசரி 25 ஆயிரம் பேர்கள் வந்துசெல்கின்றனர்.நகர்பகுதிகள் முழுவதும் ஆக்கிரமிப்புகள் மிகுந்து நடந்துகூட செல்லமுடியாத சூழ்நிலைக்கு இருந்து வருகின்றது. சாலையின் இருபுறமும் எங்கு பார்த்தாலும் விளம்பர தட்டிகள் உள்ளது. கோர்ட் உத்தரவிட்டும், அரசு உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றவோ, விளம்பர தட்டிகளை அப்புறப்படுத்தவோ அதிகாரிகள் முன்வரவில்லை.எனவே அரியலூர் நகரில் சாலை இருபுறமுள்ள விளம்பர தட்டிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×