என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நகர செயலாளர்"
- கடந்த 2020ம் ஆண்டு அவசர தேவைக்காக சண்முகத்திடம் ரூ.5 லட்சத்தை ராஜேந்திரகுமார் வாங்கியுள்ளார்.
- விசாரணைக்கு ஆஜராகாததால், ராஜேந்திரகுமாருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பனப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் என்கிற சண்முகம்(வயது 52). தையல் கலைஞரான இவர் தி.மு.க.வில் கிளை நிர்வாகியாக உள்ளார்.
இவருக்கும் தி.மு.க. நகர செயலாளராக இருக்கும் ராஜேந்திரகுமார் என்பவருக்கும் வரவு - செலவு நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு அவசர தேவைக்காக சண்முகத்திடம் ரூ.5 லட்சத்தை ராஜேந்திரகுமார் வாங்கியுள்ளார்.
இதையடுத்து சண்முகம் பணத்தை திருப்பி கேட்டபோது, ராஜேந்திரகுமார் ரூ. 5 லட்சத்திற்கான காசோ லையை கொடுத்துள்ளார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பியது. இதையடுத்து சண்முகம் பல்லடம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்ற போது விசாரணைக்கு ராஜேந்திரகுமார் ஆஜராகவில்லை. தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால், ராஜேந்திர குமாருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திர குமார் இன்று காலை பல்லடம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.