என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சட்டைநாதர்"
- ஸ்ரீ சட்டைநாதருக்குப் புணுகுச்சட்டம் சாத்தி வடை, பாயாசம் நிவேதித்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
- இவருடை உற்சவமூர்த்தியாக ஸ்ரீ முத்துச்சட்டை நாதர் அருள்பாலிக்கின்றார்.
தோணிபுரச் சிகரத்தின் விமானத் தென்புறக் கோட்டத்தில் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சட்டைநாதர் சங்கம வடிவமாகத் திகழ்கிறார். சிவாலயங்களில் கருவறையில் காணப்படுவது தாபரலிங்கம்' எழுந்தருளும் மூர்த்தங்கள் "சல்லிங்கம்"ஆகும். அடியார்கள் உள்ளத்தில் சிவபிரான் என்றும் வீற்றிருப்பதால் அவர்களைச் சங்கம் மூர்த்தமாகக் குறிக்கின்றோம்.
அவர்களை உள்ளிருந்து இயக்குவதால் சிவபெருமானுக்கும் சங்கம வடிவம் உண்டு, புராணாமுறையில் நரசிங்கமாகிய தனது கணவர் மயக்கத்துடன் இருப்பதால் அவ்வுருவை நீக்கி பழைய உருப் பெற வேண்டி திருமகள் வழிபட திருமாலின் நரசிங்க வடிவுத் தோலை உரித்து தம் மேலே போர்த்தியுள்ளார். அதனால் இவ்வடிவம் "சட்டை நாதர்" என அழைக்கப்படுகின்றது. 'சட்டை' என்பது மேல்தோலாதலின் அது உடம்புக்கு உரிய சொல்லாகக் கருதலாம்.
உயிரையும் உடலையும் பிரிப்பதால் 'கூற்றுவன்' என்ற பெயர் அமைவது போல ஸ்ரீ சட்டைநாதரும் ஆன்மாக்களின் உடலைப் பிரித்து மீண்டும் உயிருக்கு பிறவா வரமாகிய ஞானவாழ்வைத் தந்தருளுகின்றார். மானிடர்க்கு அமைந்த உடல் மாயை காரணமாக வந்த காரியம், 'மாயாப்பிறப்பு என்கிறது திருவாசகம் 'மாயைக்குக் கலை' என்ற சொல்லாலும் பெயர் கூறப்படும். கலை என்றால் ஆடை என்றும் பொருள்படும் நிருவாண தீக்கையில் "கலாசோதனை' ஆறு அத்துவாக்கள் அடங்கிய பஞ்சகலைகளிலிருந்து ஆன்மாவை ஞானகுரு விடுவிப்பார்.
ஆடை நீக்கம் என்பது உலக வழக்கில் நிருவாணம் எனப்படுவது போல் கலைகள் நீங்குவதால் இத்தீக்கையும் நிருவாண தீக்கை எனப்படுகின்றது. (நிர்பாணம்" என்பதே 'நிர்வாணம்' எனப் பேச்சு வழக்கில் கூறப்படுகின்றது. பாணம் - சரீரம் சரீர நினைவு அற்று விடுதல் நிர்பாணம் ) "சமைய விசேட நிருவாணம் என்று நம் சண்பைப்பிரான் அமைய உரைத்தது உணர்ந்தாய் கொள் நீ தனியாகுவதே சமையம் நின் அம் கை தொடலே விசேடம் தரித்தகலை அமைய நெகிழ்த்திடலே நிருவாணமெய்யாம் இதுவே"என்று காழிக்கோவை நூலும் சாற்றுகிறது.
ஆன்மாக்களின் கலைகளை நீக்கியும் நீக்கப்பட்ட மாயை அழியாத பொருள் என்பதால் அதனை சூக்குமமாக்கி சட்டையாகத் தரித்தும் குண்டலினி நிகர்த்த பாம்பும் ஆறு ஆதாரங்களை ஒத்த தண்டாயுதத்தைக் கொண்டும் தென்திசை நோக்கியும் சின்முத்திரையோடு ஞான வடிவ சங்கம மூர்த்தியாக ஸ்ரீ சட்டைநாதர் திருவுருவத் தத்துவார்த்தும் விளாங்குகின்றது. தருமையாதீனம் 10வது குருமகாசந்நிதானம் பாடிய ஆபத்துத்தாரணர் மாலையில் "தாருவனத்தில் சென்ற சைவாகமப் பொருளே காழி ஆபத்துதாரணனே" என்று இச்சிறப்புகள் அனைத்தும் விளக்கமுற அருளியுள்ளார்கள்.
திருமாலின் வாமன அவதாரத்தில் பேருவம் எடுத்து மீண்டும் பழைய வடிவு பெற இயலாமையால் இறைவனை வேண்டிட மாலின் முதுருந்தண்டை உடைத்து பழைய உருவமாக்கி அதனை தனது கைத்தடியாகவும் கொண்டு விளங்குவதால் தண்டாயுதபாணி என்ற பெயரும் சட்டைநாதர்க்கு உண்டு. சுக்கிர வாரத்தில் அர்த்தயாமத்திற்குப் பிறகு பலிபீடத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மலை மேல் உள்ள ஸ்ரீ சட்டைநாதருக்குப் புணுகுச்சட்டம் சாத்தி வடை பாயாசம் நிவேதித்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
இவருடை உற்சவமூர்த்தியாக ஸ்ரீ முத்துச்சட்டை நாதர் அருள்பாலிக்கின்றார். இம்மூர்த்திக்கும் வெள்ளிதோறும் இராகு காலத்த்தில் அபிஷேகத்தோடு விசேட பூஜைகள் நடைபெறுகின்றன. வருடாந்திரம் பிரமோற்சவத்தைப் பின்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை அன்று ஏகத்தின உற்சவமாக புறப்பாடுடன் கொண்டாடப்படுகின்றது. ஸ்ரீ முத்துர் சட்டைநாதருக்கு தற்பொழுது நூதன மெருக்கேற்றப்பட் கருங்கல்லினால் விமானத்துடன் கற்றளி கட்டப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்