search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காப்பு காட்டுதல்"

    • காப்பு கட்டுதலுடன் வைகாசி விசாக திருவிழா இன்று தொடங்குகிறது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டா டப்படும் விழாக்களில் வைகாசி விசாகத் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காப்பு கட்டுதளுடன் தொடங்கு கிறது. விழாவையொட்டி இன்று மாலை 6 மணியளவில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு உற்சவர் சன்னதியில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி- தெய்வானையுடன் எழுந்தரு ளுவார்.

    அங்கு சிறப்பு தீப, தூப, ஆராதனைகள் நடைபெற்று ஓதுவார்களால் பாடல் பாடப்படுகிறது. இதையடுத்து இரவு 8 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் மீண்டும் உற்சவர் வருகிற 1-ந் தேதி வரை மாலை தோறும் இந்த நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக 2-ந் தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி வருடத்திற்கு ஒருமுறை சண்முகர் சன்னதியில் இருந்து வள்ளி தெய்வானை யுடன் கோவில் விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு அதிகாலை 4.30 மணி முதல் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வரும் பாலால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

    விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால் காவடி, பறவை காவடி, பால்குடம் உள்ளிட்ட பல்வேறு வகையில் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அன்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு பாலாபிஷேகம் நடைபெறும்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 3-ந் தேதி மொட்டை அரசு திருவிழா நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    ×