search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய போலீஸ் நிலையங்களை"

    • போலீஸ் நிலையம் அமைப்பதற்கான வேலைகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தது.
    • காவல் நிலையத்திற்கு ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 27 போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர்.

     கவுண்டம்பாளையம்,

    கோவை மாநகரில் பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு போலீஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    அதனை ஏற்று கோவை மாநகரில் கவுண்டம்பாளையம், சுந்தராபுரம், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளில் 3 போலீஸ் நிலையங்கள் அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே போலீஸ் நிலையம் அமைப்பதற்கான வேலைகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த காவல் நிலையத்திற்கு ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 27 போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று இந்த புதிய காவல் நிலையத்தை டி.ஜி.பி சைலேந்திரபாபு ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றியும் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து அங்குள்ள காவல் துறையினரிடம் இந்த பகுதியை முழுவதுமாக ஆய்வு செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் பாதுகாக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.

    இதேபோல் சிட்கோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுந்தராபுரம் போலீஸ் நிலையம், குனியமுத்தூரை அடுத்த சுண்ணாம்பு காலவாயில் அமைந்துள்ள கரும்புக்கடை போலீஸ் நிலையம் மற்றும் போத்தனூர் காவல் நிலைய வளாகத்தில் கோவை தெற்கு மகளிர் போலீஸ் நிலையத்தையும் டி.ஜி.பி.சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.

    இதில் மாவட்ட கலெக்டர் கிராந்திரகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன், துணை கமிஷனர்கள் சந்தீஷ், மதிவாணன், சந்தீப், சுகாசினி, உதவி ஆணையாளர் பசீனா பிவி, இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், தமிழரசு, ரத்தினகுமார், நடசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×