search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிர்வாகிகளுடன் ஆலோசனை"

    • அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது. வீழ்ச்சியும் கிடையாது.
    • சயனைடு கலந்த மது குடித்ததில் 2 பேர் பலியாகினர் என கூறுவது மக்களை திசை திருப்பும் செயல்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கள்ளச்சா ராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 29-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி தஞ்சையில் 29-ந் தேதி தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று தஞ்சையில் நடைபெற்றது.

    இதற்கு அ.தி.மு.க அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது :-

    தஞ்சாவூர் தெற்கு மாவட்ட உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்து தலைமை அலுவல கத்திற்கு இரண்டு நாட்களில் அனுப்ப வேண்டும்.

    எடப்பாடி பழனிசாமி தஞ்சைக்கு வந்த போது மிக சிறப்பான முறையில் வரவேற்பு அளித்த அனைவ ருக்கும் நன்றி. இப்பொழு துதான் தஞ்சை தெற்கு மாவட்டம் புத்துணர்ச்சி பெற்றுள்ளது.

    தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் தான் ஆகிறது.

    ஆனால் அதற்குள் அவர்கள் பல்வேறு சர்ச்சையில் சிக்கி உள்ளார்கள்.

    அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது.

    வீழ்ச்சியும் கிடையாது.

    கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் இறந்தனர்.

    அதேபோல் தஞ்சையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மது குடித்த 2 பேர் பலியாகினர்.

    சயனைடு கலந்த மது குடித்ததில் 2 பேர் பலியாகினர் என கூறுவது மக்களை திசை திருப்பும் செயலாக உள்ளது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பின்படி தஞ்சையில் 29-ந் தேதி தி.மு.க அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை. திருஞானம், பால் வளத் தலைவர் காந்தி, ஒத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி. சேகர், அரசு அச்சக தலைவர் புண்ணிய மூர்த்தி, முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், முன்னாள் நகரச் செயலாளர் பஞ்சாபிகேசன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் நாகராஜன், செயற்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் ஹேமா, பிரதிநிதிகள் சண்முகசுந்தரம், நடராஜன், கவுன்சிலர்கள் கோபால், கேசவன், தட்சிணாமூர்த்தி, ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் ஐயப்பன், திராவிட வங்கி இயக்குனர் மகேந்திரன், அம்மா பேரவை துணைத்தலைவர் ரெங்கப்பா, மாணவரணி முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×