search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் நின்று செல்ல"

    • சென்னை சென்ட்ரலில் இருந்து, நாமக்கல் வழியாக வாரத்திற்கு 3 முறை மதுரை வரை, எக்ஸ்பிரஸ் ரெயில் இயங்குகிறது.
    • இந்த ரெயில், சேலம், கரூர், திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது.

    நாமக்கல்:

    சென்னை சென்ட்ரலில் இருந்து, நாமக்கல் வழியாக வாரத்திற்கு 3 முறை மதுரை வரை, எக்ஸ்பிரஸ் ரெயில் இயங்குகிறது. இந்த ரெயில், சேலம், கரூர், திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்க ளில் மட்டும் நின்று செல்கி றது. நாமக்கல்லில் நிற்ப தில்லை. கடந்த 5 ஆண்டு களாக, இதே நிலைதான் நீடித்து வருகிறது.

    இந்த நிலையில், வரும் 15-ந் தேதி முதல், சென்னை சென்ட்ரல்–, மதுரை எக்ஸ்பிரஸ் ரெயிலை, தேனி மாவட்டம் போடி வரையில் நீட்டிக்க, தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    மாவட்டத்தின் தலைநக ரான நாமக்கல்லில், சென்னை–-போடி ரெயில் நின்று செல்வதற்கான நடவ டிக்கைகளை மத்திய இணை மந்திரி முருகன் மற்றும் எம்.பி.க்கள் ராஜேஷ்குமார், சின்ராஜ் ஆகியோர் மேற்கொள்ள வேண்டும் என ரெயில் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ள னர். சென்னை– - போடி ரெயில், வாரம் தோறும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணிக்கு, சென்னையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9:35 மணிக்கு போடி சென்றடைகிறது. நாமக்கல்லை, காலை 4 மணிக்கு கடந்து செல்கிறது.

    மறு மார்க்கமாக ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியா ழக்கிழமைகளில், இரவு 8:30 மணிக்கு போடியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7:55 மணிக்கு சென்னை சென்றடைகிறது. நாமக் கல்லை நள்ளிரவு, 1:30 மணியளவில் கடந்து செல்கிறது.

    இந்தியா முழுவதும் இருந்து, தொழில், கல்வி, வேலை வாய்ப்பு உள்பட பல்வேறு விஷயங்களுக் கான, ஏராளமானோர் நாமக்கல்லுக்கு வந்து செல்கின்றனர். ஆனால் போதிய ரெயில் வசதி இல்லாததால், அவர்கள் கடும் அவதிக்குள்ளா கின்றனர்.

    சென்னை சென்ட்ரல் - –போடி எக்ஸ்பிரஸ் ரெயில், நாமக்கல்லில் நின்று சென்றால், பயணிகள் அனைவருக்கும் பயனுள்ள தாக அமையும். அதனால், சென்னை சென்ட்ரல் - –போடி விரைவு ரெயில் நாமக்கல்லில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×