என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "513 இ-சேவை மையங்கள்"
- இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்கள் நிறுவி செயல்படுத்த தொடங்கப்பட்டு உள்ளது.
- ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 513 இ-சேவை மையங்கள் செயல்பட அனு மதி வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழ்நாட்டில் அனைத்து பொதுமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
படித்த இளைஞர்கள், தொழில் முனைவோர்களை ஊக்கு விக்கும் வகையில் இ-சேவைமையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்கள் நிறுவி செயல்படுத்த தொடங்கப்பட்டு உள்ளது.
இ-சேவைமையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து இ-சேவை மையத்தில் மக்கள் காத்தி ருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதே இன் நோக்கமாகும்
இத்திட்டம் மூலம் ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 513 இ-சேவை மையங்கள் செயல்பட அனு மதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் இதுவரை பயன்பெறாத தொழில்முனைவோர் https://tnesevai.tn.gov.in/ (அல்லது) (https://.tnega.tn.gov.in/ என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
விண்ணப்பதாரர்கள் வரும் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்து வதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகர்புற த்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆன்லைன் முறை யில் செலுத்தப்பட வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு ரியபயனர் எண் மற்றும் கடவுச்சொல் (User ID & Password) விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலை பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயி லாக வழங்கப்படும்.
மேலும் அருகே உள்ள இ-சேவைமையங்களின் தகவல்களை "Mugavari" ஆண்ட்ராய்டு மொபைல் செயலியைப் பயன்படுத்திக் காணலாம் அல்லது https://.tnega.tn.gov.inஇணைய தளத்தில் காணலாம் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவி த்துள்ளார்.