search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொடக்குறிச்சி"

    • மொடக்குறிச்சி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • இரவில் வீட்டுக்கு வெளியே கூட வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு அருகே சோலார் ஈ.பி.நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த சில நாட்களாக இந்த குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர் நடமாற்றம் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.

    இதில் கடந்த 9-ந் தேதி மர்ம நபர் ஒருவர் கையில் கத்தியுடன் வீட்டு கதவை நள்ளிரவில் தட்டுவது, காலிங் பெல்லை அழுத்தும் செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதேபோல் அந்த நபர் அந்த பகுதியில் உள்ள பல்வேறு வீட்டு கதவுகளை நள்ளிரவில் தட்டுவதும் பதிவாகி உள்ளது.

    இதனால் அந்த பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடனேயே இருந்து வருகி ன்றனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் சமீபகாலமாக நள்ளிரவில் மர்ம நபர் நடமாட்டம் இருந்து வருகிறது. அந்த நபர் கத்தியுடன் சுற்றி வருவதால் நாங்கள் பீதி அடைந்துள்ளோம். இது குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வீடுகளின் கதவை தட்டுவது, காலிங் பெல் அடிப்பது இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதனால் இரவில் வீட்டுக்கு வெளியே கூட வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    வீடு, வீடாக கதவை தட்டுவது, காலிங் பெல்லை அடித்து சிறிது நேரம் நிற்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் பெண்கள் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். அந்த நபரால் பெரிய பிரச்சனை ஏற்படும் முன் அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மக்கள் கூறினர்.

    • 2 ஆயிரம் ஆண்டு கொங்கு பாரம்பரிய கலையான வள்ளி கும்மி கலையை மீட்டெடுக்கும் வகையில் இந்த வள்ளி கும்மி நடனம் நடைபெற்றது.
    • ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வள்ளி கும்மி நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுக்கா பூந்துறை கிராமம் சின்னியகவுண்டன் வலசில் ஆசிரியர் வெள்ளநத்தம் சண்முகசுந்தரத்தின் மங்கை வள்ளி கும்மி குழுவின் 64-வது அரங்கேற்ற விழா நடைபெற்றது.

    2 ஆயிரம் ஆண்டு கொங்கு பாரம்பரிய கலையான வள்ளி கும்மி கலையை மீட்டெடுக்கும் வகையில் இந்த வள்ளி கும்மி நடனம் நடைபெற்றது. சின்னியகவுண்டன் வலசில் வண்ண விளக்குகள் நடுவே 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஒரே வண்ண உடை அணிந்து நாட்டுப்புற பாடல்கள் பாடி அதற்கு ஏற்ப நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

    ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வள்ளி கும்மி நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. மேலும் மங்கை வள்ளி கும்மி குழு கொங்கு பாரம்பரிய கலைகளில் ஒன்றாக கருதப்படுவதால் வள்ளி கும்மி நடனத்தை மீட்டெடுக்கும் வகையில் இந்த விழா வெகு விமரிசயைாக நடைபெற்றது.

    ×