என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆழகு"
- பூக்களில் ஏராளமான வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன.
- பூக்கள் எவ்வாறு முக அழகை இளமையாக வைக்க உதவுகிறது என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.
ஒவ்வொரு பூக்களும் பல்வேறு நன்மைகளை கொண்டது. இவை உடல் ஆரோக்கியம் முதல் முக அழகு வரை பராமரிக்க பயன்படுகின்றது. பூக்களில் ஏராளமான வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இவற்றை முகத்தில் தடவினால் முகம் இளமையாக மாறுவதோடு, மினுமினுப்பாகவும் பொலிவு தரும். பூக்கள் எவ்வாறு முக அழகை இளமையாக வைக்க உதவுகிறது என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.
சாமந்தி பூ :- இந்த மலர்கள் அதிக நன்மைகளை கொண்டது. இவை வெயிலினால் கலை இழந்த முகத்தை முற்றிலுமாக அழகும்பெற செய்கிறது.
தேவையனவை :- சாமந்தி பூக்கள் 3, பால் 1 டீஸ்பூன், யோகர்ட் 1 டீஸ்பூன், துருவிய கேரட் 2 டீஸ்பூன்
செய்முறை :- முதலில் துருவிய கேரட்டையும், சாமந்தி இதழ்களையும் ஒன்று சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் பால் மற்றும் யோகர்ட் சேர்த்து முகத்தில் பூசவும். பின் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் மினுமினுக்க செய்யும். அத்துடன் கலை இழந்த முகத்தில் புது பொலிவு கிடைக்கும்.
மல்லிகை பூ :- வறண்ட சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள இந்த மல்லிகை உதவுகிறது. மல்லிகை பூக்கள் சிறிது எடுத்து கொண்டு அவற்றை நன்கு அரைத்து கொள்ளவும். பின் அவற்றுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகம் மிகவும் மென்மையாகும். அத்துடன் முகத்தில் உள்ள சொரசொரப்புகளை நீக்கி விடும்.
ரோஜா பூ :- தேவையானவை :- ரோஜா பூ 1, பால் 1 டீஸ்பூன், கோதுமை தவடுகள் 1 டீஸ்பூன்
செய்முறை :- முதலில் ரோஜா பூவின் இதழை நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் கோதுமை தவடுகளையும் சேர்த்து அரைத்து கொண்டு பால் சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். பின் 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் மிகவும் அழகு பெரும்.
தாமரை பூ :- தேசிய மலரான தாமரையில் அதிக படியான ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இது உடலில் செல்களை மறு உற்பத்தி செய்து என்றும் இளமையாக வைக்கிறது. அத்துடன் முகத்தை மிகவும் அழகாக மாற்றுகிறது.
தேவையானவை :- ஆலிவ் எண்ணெய் 2 டீஸ்பூன், தாமரை மலர் 1, பால் 2 டீஸ்பூன்
செய்முறை :- வெள்ளை தாமரை இதழ்களை முதலில் தனியாக நறுக்கி கொள்ளவும். பிறகு அவற்றுடன் பால், ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து கொண்டு முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகம் இளமை பெரும்.
செம்பருத்தி பூ :- பொதுவாக செம்பருத்தி பூ முடி பிரச்சினையை போக்கும் என்பதுதான் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவற்றுடன் முகத்தின் அழகையும் இது பராமரிக்க பெரிதும் பயன்படுகிறது.
தேவையானவை :- 1 செம்பருத்தி பூ, 1 டீஸ்பூன் தயிர், 2 டீஸ்பூன் முல்தானி மட்டி, 1 ரோஜா பூ
செய்முறை :- முதலில் ரோஸ் மற்றும் செம்பருத்தி இதழ்களை சேர்த்து அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் தயிர் மற்றும் முல்தானி மட்டி கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்த இந்த முக பூச்சை குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் மிருதுவாகும். அத்துடன் கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவற்றையும் நீக்கி விடும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்