search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலா வரும்"

    • சேலம் மாவட்டம் மேட்டூரில் பசு, காளை, எருமை மாடுகள் போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.
    • இந்த கால்நடைகள் பல நேரங்களில் போக்கு வரத்துக்கு இடையூறாக நடுரோட்டிலேயே உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் பசு, காளை, எருமை மாடுகள் போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த கால்நடைகள், மேட்டூர் பஸ் நிலையம், தினசரி மார்க்கெட் உட்பட முக்கிய பகுதிகளில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.

    இந்நிலையில், இந்த கால்நடைகள் பல நேரங்களில் போக்கு வரத்துக்கு இடையூறாக நடுரோட்டிலேயே உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    நேற்று மாலை மேட்டூர் சின்ன பார்க் அருகே, சுமார் 10-க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் நடுரோட்டில் வரிசையாக சென்றது. இதனை பார்ப்பதற்கு எருமை மாடு பேரணி போன்ற காட்சி அளித்தது.

    ரோட்டின் நடுவே மாடுகள் சென்றதால், மாலை நேரத்தில் போக்குவரத்து நிறைந்து காணப்படும் அந்த சாலையில், நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    எனவே, சாலையில் சுதந்திரமாக சுற்றி வரும் கால்நடைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கால்நடை வளர்ப்பவர்கள் மீது மேட்டூர் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×