என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சர்வதேச திறன்"
- 2024-ம் ஆண்டிற்கான சர்வதேச திறன் போட்டிகள் (வேல்ட் ஸ்கில்ஸ் காம்ப்ப டிஷன்ஸ் 2024) பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் நகரில் நடைபெற உள்ளது.
- டிஎன் ஸ்கில்ஸ்-2023 என்ற தேசிய அளவிலான திறன் போட்டிகள் 55 திறன் பிரிவுகளுக்கு நடைபெற உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2024-ம் ஆண்டிற்கான சர்வதேச திறன் போட்டிகள் (வேல்ட் ஸ்கில்ஸ் காம்ப்ப டிஷன்ஸ் 2024) பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் நகரில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னோடியாக டிஎன் ஸ்கில்ஸ்-2023 என்ற தேசிய அளவிலான திறன் போட்டிகள் 55 திறன் பிரிவுகளுக்கு நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் கலந்து கொள்ளுவதற்கான தகுதி வயது வரம்பு மட்டுமே ஆகும். 1.1.2002க்கு பின் பிறந்த வர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். இன்பர் மேஷன் நெட்வொர்க் கேபிளிங், மெக்கட்ரானிக்ஸ் போன்ற திறன் போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளர் களின் வயது வரம்பு 25 வயதிற்கு மேல் இருக்க கூடாது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், மருத்துவம், மருத்துவம் சார்ந்த, என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல், பாலி டெக்னிக், ஐடிஐ பள்ளிகளில் படித்த மற்றும் படிக்கும் மாணவ மாணவிகளும், தொழில் நிறுவனங்களில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த தொழிற்பழகுநர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தகுதியான தனி நபர்களும் இப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்.
திறன் போட்டியில் கலந்துகொள்ள விருப்ப முள்ள போட்டியாளர்கள் தங்களது விவரங்களை https://naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற வெப்சைட் மூலம் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப் பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள திறன் பயிற்சி அவலக உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு விபரங்கள் அறியலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.