என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதிய பேருந்து நிலையம்"
- புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இன்று நடைபெற்றது.
- அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி கோவில்வழியில் ரூ.26 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பூமி பூைஜ செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-3, வார்டு-60 கோவில் வழியில் அமைக்கப்பட உள்ள புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு தளங்களில் 42 பேருந்து நிறுத்தம், 35 கடைகள், 550 இருசக்கர வாகன நிறுத்துமிடம், 1 உணவகம், 1 தாய்மார்கள் பாலூட்டும் அறை, 3 மின்தூக்கிகள், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, காவல் துறை மற்றும் அலுவலர்களுக்கான அறை, கண்காணிப்பு அறை, மற்றும் தகவல் மையம் போன்ற வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.
தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-4, வார்டு-43 நடராஜ் தியேட்டர்அருகில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் நொய்யல் ஆற்றின் குறுக்கே பழைய உயர்மட்டபாலம் அருகே புதிய பாலம் அமைத்து அகலப்படுத்தும் பணிகளுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த உயர்மட்ட பாலம் 105 மீட்டர் நீளமும், 9.50 மீட்டர் அகலத்தில் அமைய பெற உள்ளது. மேலும் 20 தெரு விளக்குகளுடன் நொய்யல் ஆற்றின் கரையோரம் இரு புறம் அமையும் புதிய சாலைகளுக்கு இணைப்பு பாலமாக அமைய உள்ளது. இந்த புதிய பாலத்தின் மூலம் 80,000 முதல் 90,000 பொதுமக்கள் பயன்பெறுவர்.
இந்நிகழ்ச்சிகளில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாரயணன் , துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன் , கோவிந்தசாமி , கவுன்சி லர்கள் கோமதி , சாந்தாமணி , தலைமை பொறியாளர் வெங்கடேஷ், உதவி ஆணையாளர் வினோத், மாநகர துணை பொறியாளர்கள் வாசுகுமார், செல்வநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்