search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடலை தேங்காய்"

    • தேவர்கள் அனைவரும் அசுரர்களால் படும் துன்பங்களை சிவபெருமானிடம் கூறி துயரங்களை போக்குமாறு வேண்டினார்கள்.
    • முழுமுதல் கடவுளாகிய விநாயக பெருமானை வழிபட மறந்ததால் அச்சு முறிந்து தடை ஏற்பட்டது என்று உணர்ந்தனர்.

    முன்பு ஒரு காலத்தில் தாருகாட்சன், கமாலாட்சன், வித்தின்மாலி எனும் மூன்று அசுரர்கள் கடுமையான தவங்கள் செய்து யாராலும் வெல்லவோ, கொல்லவோ முடியாத வரங்கள் பெற்றனர்.

    சாகா வரம் பெற்ற இந்த அசுரர்கள் மிகுந்த ஆணவம் கொண்டு தங்கக்கோட்டை, வெள்ளிக்கோட்டை, இரும்புக்கோட்டைகளில் ஆட்சி செய்தனர்.

    வரம் பல பெற்ற இவ்வசுரர்கள் மிகுந்த ஆணவம் கொண்டு அறவழியை விட்டு மறவழியில் சென்றனர். தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் பல நொடிய தீங்குகளை செய்தனர்.

    திருமால், நான்முகன், இந்திரன், அக்னி, வாயு, வருணன், பூமி, அஷ்டதிக் பாலகர்கள், நவகிரகங்கள், சூரியன், சந்திரன் அனைவரும் இவ்வசுரர்களை கண்டு அஞ்சி நடுங்கினர். தேவர்கள் அனைவரும் அசுரர்களால் படும் துன்பங்களை சிவபெருமானிடம் கூறி துயரங்களை போக்குமாறு வேண்டினார்கள்.

    தேவர்களின் வேண்டுகோளை ஏற்று தேரில் வரும்போது தேரின் அச்சு முறிந்தது. தேவர்கள் அனைவரும் கூடி என்ன காரணம் என்று ஆராய்ந்தனர். பின்னர் முழுமுதல் கடவுளாகிய விநாயக பெருமானை வழிபட மறந்ததால் அச்சு முறிந்து தடை ஏற்பட்டது என்று உணர்ந்தனர்.

    விநாயகர் ருத்ரனை பலி கேட்டார். ருத்ர ரூபமாக உள்ள முக்கண் படைத்த தேங்காயை உடைத்து பரிகாரம் செய்து தேரை ஓட்டினர்.

    அதுநாள் முதல் சூரை தேங்காய் உடைக்கும் வழக்கம் தோன்றியது. 

    ×