search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகள் பீதி"

    • எதிர் பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.
    • போலீசார் விபத்தில் சிக்கிய பயணி களை பொதுமக்களின் உதவியுடன் பத்திரமாக பஸ்சில் இருந்து மீட்டனர்.

    விழுப்புரம்:

    நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் ஒன்று 27 பயணிகளை ஏற்றி கொண்டு நேற்று இரவு வந்தது. இந்த பஸ்சை கும்பகோணத்தை சேர்ந்த நடராஜ் (வயது 40) ஓட்டி வந்தார். இந்நிலையில் பஸ் இன்று அதிகாலை கிழக்கு கடற்கரை சாலை மரக்காணம் தாழ ங்காடு அருகே வந்தபோது எதிர் பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த 10 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது. உடனே பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறினர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்ட அருகில் இருந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் இதுகுறித்து மரக்காணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் உடனடியாக சம்ப இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய பயணி களை பொதுமக்களின் உதவியுடன் பத்திரமாக பஸ்சில் இருந்து மீட்டனர். இந்த விபத்தில் பஸ் கண்டக்டர் ஸ்ரீராம் (57) மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த சந்தியா (29) வேதாரணியம் பகுதியை சேர்ந்த பாபா செல்வம் (35) நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த கார்த்திக (25) சாதிக் (40)ராஜேந்திரன் (50) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடை ந்தவர்களை போலீசார் மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக தொடர்ந்து பஸ் விபத்துக்காளவது பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் மத்தில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

    ×