search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.25 ஆயிரம் அபராதம்"

    • மோட்டார் வாகனச் சட்டம் 2019 சட்டப்பிரிவு 199-ஏ படி பெற்றோர்கள் பாதுகாவலர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
    • மேலும் வாகனம் 12 மாதங்களுக்கு சாலையில் ஓடுவது ரத்து செய்யப்படும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பள்ளி மாணவ மாணவிகள் ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம் இல்லாமல் மோட்டார் வாகனம் ஓட்டினால் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் 2019 சட்டப்பிரிவு 199-ஏ படி பெற்றோர்கள் பாதுகாவலர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். மேலும் வாகனம் 12 மாதங்களுக்கு சாலையில் ஓடுவது ரத்து செய்யப்படும். வாகனம் ஓட்டிய சிறுவர்கள் 25 வயது வரை எந்த வாகன ஓட்டுநர் உரிமமும் பெற இயலாது. எனவே பெற்றோர்கள், பொதுமக்கள் இதில் கவனம் செலுத்தி தங்களது குழந்தைகள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா தெரிவித்து உள்ளார்.

    • வனச்சரக அலுவலர் செந்தில்குமார், வனவர் முனுசாமி மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • மூங்கில் மடுவு வனப்பகுதியில் கையில் வலையுடன் சென்ற நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே மசக்கல் காப்புக்காடு பகுதிகளில் வனச்சரக அலுவலர் செந்தில்குமார், வனவர் முனுசாமி மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    மசக்கல் காப்புக்காடு மூங்கில் மடுவு வனப்பகுதியில் கையில் வலையுடன் சென்ற நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் அதே பகுதியை பழனிசாமி (வயது61) என்பதும், முயல் வேட்டையாட சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து வலையை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை வேட்டையாட முயன்ற பழனிசாமிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் அத்துமீறி செல்லும் நபர்கள் மீதும், வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×