என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வீடு கொள்ளை"
- பூட்டை உடைத்து பீரோவில இருந்த தங்க நகைகளை திருடி சென்றனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், கண்ணண்டஹள்ளி அருகே உள்ள கெட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சித்ரா (வயது 60). இவரது கணவர் ராமச்சந்திரன். இவர் பெங்களூர் பகுதியில் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சித்ரா கெட்டம்பட்டி பகுதியில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
சம்பவத்தன்று சித்ரா அவரது கணவரை பார்க்க வீட்டை பூட்டி விட்டு பெங்களூருக்கு சென்றார் . அதனை அறிந்த மர்ம நபர்கள் அன்று நள்ளிரவு சித்ராவின் வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணத்தை திருடி சென்றனர்.
மறுநாள் காலை சித்ராவுடைய வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அவரது உறவினர்கள் அவருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சித்ரா வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி இருந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை சோதனை செய்ததில் அதில் இருந்த 40 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம், 750 கிராம் வெள்ளி நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சித்ரா மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கெட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கவுரப்பன் (வயது 65). இவருடைய மனைவி தவமணி(60). இந்த தம்பதியினருக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர்.
இவர்கள் பெங்களூர், ஓசூர் பகுதியில் சுவிட் கடையில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக வீட்டில் இருந்து வந்தனர்.
சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் வயதான தம்பதியினர் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். அங்கு வந்த மர்ம நபர்கள் இவர்கள் இருந்த அறையை வெளியே பூட்டிவிட்டு, அருகே உள்ள மற்றொரு அறையின் பூட்டை உடைத்து பீரோவில இருந்த தங்க நகைகளை திருடி சென்றனர்.
மறுநாள் காலை கவுரப்பன் எழுந்து கதவை திறந்து பார்த்தபோது கதவின் வெளியே பூட்டு போடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அக்கம்,பக்கத்தினர் உதவியுடன் பூட்டை உடைத்து வெளியே வந்து அருகே இருந்த அறையை திறந்து பார்த்தபோது போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி இருந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை சோதனை செய்ததில் அதில் இருந்த 14 3/4 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து கவுரப்பன் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், தடவியல் நிபுணர்கள் வீட்டிற்கு வந்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் இப்பகுதியில் ஒரே நாளில் மர்ம நபர்கள் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை பணம், திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் வீட்டை சோதனை செய்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
- கொள்ளை சம்பவம் குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு நாடார் மேடு, அண்ணாதுரை வீதியை சேர்ந்தவர் பர்கத்பாவா (28). இவர் ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜனதுல்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பர்கத்பாவா தனது குடும்பத்தினருடன் திருச்சிக்கு சென்று விட்டார். நேற்று நள்ளிரவு குடும்பத்துடன் மீண்டும் வீட்டுக்கு வந்தார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பீரோ இருக்கும் அறைக்கு சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் ரொக்க பணம், 3 பவுன் நகை திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் வீட்டை சோதனை செய்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் விநாயகர் தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 39). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ராசாத்தி (35)என்கிற மனைவியும், சுஜித் சரண் (11) என்கிற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு கோத்தகிரியில் உள்ள தனது உறவினர் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மணிமாறன் தனது வீட்டினை பூட்டிவிட்டு, குடும்பத்தாருடன் வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் இன்று காலை மணிமாறனின் தங்கையான மகேஸ்வரி என்பவர் வீட்டினை பார்த்தபொழுது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 10 பவுன் எடையுள்ள உள்ள தங்க நகை, ரொக்கம் ரூ.80 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக மகேஸ்வரி உடனடியாக துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருச்சியில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
துறையூர் நகரப் பகுதியில் வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதியிலேயே வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வீட்டில் உள்ள அறையில் பீரோ திறக்கப்பட்டு துணிமணிகள் பொருட்கள் சிதறி கிடந்தன.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கிருஷ்ணன் வீதியை சேர்ந்தவர் சரோஜா (71). கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் ஜெகதீஷ் இறந்து விட்டார். சரோஜா வீடு அருகே அவரது மகள் வீடும் உள்ளது. சரோஜா வீட்டில் தனியாக வசித்தாலும் இரவு நேரத்தில் மகள் வீட்டில் சாப்பிட்டு தூங்குவது வழக்கம்.
அதைபோல் நேற்று இரவும் வழக்கம்போல் மகள் வீட்டில் சாப்பிட்டு அங்கேயே தூங்கிவிட்டார். இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கீழே கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் ரோட்டில் இருந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த சரோஜா வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் பீரோ திறக்கப்பட்டு துணிமணிகள் பொருட்கள் சிதறி கிடந்தன.
பீரோவில் இருந்த வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது. பணம், நகை இல்லாததால் தப்பியது. நள்ளிரவில் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் சி.சி.டி.வி. பொருத்தப்பட்டிருந்ததால் முகம் தெரியாமல் இருப்பதற்காக கால் மிதியடியை கேமிராவில் மேல் போட்டு முடிவு உள்ளனர்.
இதுகுறித்து கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேப்போல் கோபி ஈஸ்வரன் கோவில் எதிரே உள்ள பானுமதி என்பவர் வீட்டில் ஆளில்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். ஆனால் பணம், நகை, வெள்ளி பொருட்கள் எதுவும் இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று விட்டனர்.
இது குறித்தும் கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 56). இவர் கடந்த 22-ந் தேதி காலை 11 மணியளவில் மனைவியுடன் சொந்த விஷயமாக வீட்டை பூட்டிக்கொண்டு காரைக்குடி சென்றார்.
நேற்று முன் தினம் இரவு தனது வீட்டுக்கு வந்தபோது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 11 பவுன் தங்க நகை மற்றும் ¾ கிலோ மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் போன்றவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- நாராயணனின் பணம் மற்றும் நகைகள் அடிக்கடி குறைய தொடங்கியது.
- ஓய்வு பெற்ற டாக்டரான நாராயணன் வீட்டில் வைத்திருந்த நகைகளை திருடியது யார் என்பதில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
மதுரை:
மதுரை எல்லீஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 70). ஓய்வு பெற்ற அரசு டாக்டரான இவரது வீட்டில் கார் டிரைவராக ஜெயராமன் என்பவர் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
நாராயணன் வயது மூப்பு காரணமாக வீட்டில் ஜெயராமனை அனைத்து பகுதிகளிலும் அவர் மீதான நம்பிக்கையின் பேரில் அனுமதித்ததுடன் தன்னுடைய கணக்கு வழக்குகளையும் பார்க்கும் பணியிலும் ஈடுபடுத்தினார்.
இந்த நிலையில் நாராயணனின் பணம் மற்றும் நகைகள் அடிக்கடி குறைய தொடங்கியது. இதற்கிடையே வீட்டின் தனி அறையில் பீரோவில் வைத்திருந்த 32 பவுன் தங்க நகை மற்றும் 135 பவுன் மதிப்புள்ள தங்கப்பொருள்களையும் கடந்து சில மாதங்களாக கொஞ்சம், கொஞ்சமாக மாயமானது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நாராயணன், ஜெயராமன் மீது சந்தேகப்பட்டாலும் அவரது நடவடிக்கையில் மாற்றம் இல்லாததால் இந்த நகையை திருடியது யார் என்பதில் அவருக்கு குழப்பமான நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக மதுரை எஸ்.எஸ். காலனி போலீசில் நாராயணன் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஓய்வு பெற்ற டாக்டரான நாராயணன் வீட்டில் வைத்திருந்த நகைகளை திருடியது யார் என்பதில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
வீட்டின் கதவு மற்றும் பீரோக்கள் உடைக்கப்படாமல் நகைகள் மாயமாகி இருப்பதால் அந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் தான் இந்த திருட்டு வேலையில் ஈடுபட்டிருக்க முடியும் என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து அடிக்கடி வந்து சென்ற கார் டிரைவர் ஜெயராமன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட் டது. ஆனாலும் ஜெயராமன் நகைகளை திருடவில்லை என்று தொடர்ந்து மறுத்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது ஜெயராமன் அடிக்கடி வீட்டிற்கு வருவதும், வெளியே செல்வதுமாக இருந்ததை உறுதி செய்தனர். பின்னர் விசாரணை நடத்தியபோது 167 பவுன் நகைகளை திருடியதை ஜெயராமன் ஒப்புக்கொண்டார்.
அதன் அடிப்படையில் கார் டிரைவர் ஜெயராமனை கைது செய்த போலீசார் அபேஸ் செய்த நகைகளையும் மீட்டனர். இதன் மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும். வேலியே பயிரை மேய்ந்த கதையாக பணி செய்த வீட்டிலேயே தனது கைவரிசையை காட்டிய கார் டிரைவர் ஜெயராமனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த திருட்டு சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஷான் முகமது பணம் கொள்ளை போய் இருப்பதாக கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடுங்கையூர், எம்.ஜி.ஆர். நகர், அண்ணாசாலை பகுதியை சேர்ந்தவர் ஷான் முகமது. துடைப்பம் வியாபாரி. இவர் வீட்டில் உள்ள பீரோவில் ரூ.1 லட்சம் ரொக்கம் வைத்து இருந்தார்.
இந்த நிலையில் பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷான் முகமது பணம் கொள்ளை போய் இருப்பதாக கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார்.
ஆனால் பீரோ, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்படாமல் உள்ளதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்