search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகரஜோதி"

    • சபரிமலையின் பெரிய பாதையை ஏழு கோட்டைகளாக சொல்வது வழக்கம்.
    • ஒவ்வொரு கோட்டையையும் ஐயப்பனின் கணங்கள் காத்து வருகின்றன.

    சபரிமலையின் பெரிய பாதையை ஏழு கோட்டைகளாக சொல்வது வழக்கம்.

    ஒவ்வொரு கோட்டையையும் ஐயப்பனின் கணங்கள் காத்து வருகின்றன.

    முதல் கோட்டை -எருமேலி -வாபுரன்

    இரண்டாம் கோட்டை -காளைகெட்டி -நந்திகேஸ்வரன்

    மூன்றாம் கோட்டை -உடும்பாறை -ஸ்ரீபூதநாதன்

    நான்காம் கோட்டை - கரிமலை-பகவதி

    ஐந்தாம் கோட்டை -சபரி பீடம்-சபரி துர்கை

    ஆறாம் கோட்டை -சரங்குத்தி-அஸ்த்ர பைரவர்

    ஏழாம் கோட்டை -பதினெட்டாம்படி-கருப்பசுவாமி.

    • பதினெட்டாம் படி ஏறியதும் இரண்டு விசேஷங்களை நாம் தரசிக்க வேண்டும்.
    • அதன் பினனர் அந்த சிலையை உருக்கி, மணியாக வடிவமைத்தனர்.

    பதினெட்டாம் படி ஏறியதும் இரண்டு விசேஷங்களை நாம் தரசிக்க வேண்டும்.

    ஒன்று கொடி மரத்தில் அமைந்திருக்கும் குதிரை.

    மற்றொன்று 18ம் படிக்கும் இடைபுறம் உள்ள ஆலய மணி.

    ஆதியில் சபரிமலையில் பரசுராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பன் சிலை (பஞ்சலோக விக்கிரகம்), காலப் போக்கில் இயற்கைச் சீற்றத்தால் சற்று சேதமானது.

    1950ம் ஆண்டு அந்தச் சிலை மேலும் சேதமடைந்ததாக சொல்லப்படுகிறது.

    அதன் பினனர் அந்த சிலையை உருக்கி, மணியாக வடிவமைத்தனர்.

    18ம் படி இருக்கும் இடத்தில், வலம் இடம் என இருபுறமும் அங்கு மணிகள் இருக்கும்.

    அதில், இடப் பக்கமாக உள்ள மணிதான், ஆதிகாலத்தில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பனின் திருஉருவச்சிலை.

    • 18 மலை தேவதைகளை வழிபாடு செய்வதற்காகத்தான் படிபூஜையை நடத்துகிறார்கள்.

    18 மலை தேவதைகளை வழிபாடு செய்வதற்காகத்தான் படிபூஜையை நடத்துகிறார்கள்.

    அந்த பதினெட்டு மலைகளின் பெயர்கள் வருமாறு:

    1. தலைப்பாறைமலை

    2. காளகெட்டி மலை

    3. புதுச்சேரி மலை

    4. கரிமலை

    5. இஞ்சிப்பாறை மலை

    6. நிலக்கல்

    7. தேவர்மலை

    8. ஸ்ரீபாதமலை

    9. வட்டமலை

    10. சுந்தரமலை

    11. நாகமலை

    12. நீலிமலை

    13. சபரிமலை

    14. மயிலாடும் மலை

    15. மதங்க மலை

    16. சிற்றம்பல மலை

    17. கவுண்டன் மலை

    18. பொன்னம்பல மேடு (காந்தமலை)

    • 18 படிகளிலும் ஐயப்பன் 18 திருநாமங்களுடன் அமர்ந்திருப்பதாக ஒரு வரலாறு கூறுகிறது.
    • ஒன்பதாம் திருப்படி - சிவபாலன்

    18 படிகளிலும் ஐயப்பன் 18 திருநாமங்களுடன் அமர்ந்திருப்பதாக ஒரு வரலாறு கூறுகிறது.

    ஒன்றாம் திருப்படி- குளத்துப்புழை பாலகன்

    இரண்டாம் திருப்படி- ஆரியங்காவு ஐயப்பன்

    மூன்றாம் திருப்படி- எரிமேலி சாஸ்தா

    நான்காம் திருப்படி- அச்சங்கோயில் அரசன்

    ஐந்தாம் திருப்படி- ஐந்துமலை அதிபதி

    ஆறாம் திருப்படி- வீரமணிகண்டன்

    ஏழாம் திருப்படி- பொன்னம்பல ஜோதி

    எட்டாம் திருப்படி- மோகினி பாலன்

    ஒன்பதாம் திருப்படி- சிவபாலன்

    பத்தாம் திருப்படி- ஆனந்தமயன்

    பதினோராம் திருப்படி- இருமுடிப்பிரியன்

    பனிரெண்டாம் திருப்படி- பந்தளராஜ குமாரன்

    பதிமூன்றாம் திருப்படி- பம்பாவாசன்

    பதினான்காம் திருப்படி- வன்புலி வாகனன்

    பதினைந்தாம் திருப்படி- ஹரிஹரசுதன்

    பதினாறாம் திருப்படி- குருநாதன்

    பதினேழாம் திருப்படி- சபரிகிரி வாசன்

    பதினெட்டாம் திருப்படி- ஐயப்பன்

    • 18 படிகளும் 18 தெய்வங்களாக கருதப்படுகிறார்கள்.
    • ஒற்றைபடை வரிசையில் நவக்கிரகங்கள் உள்ளன.

    18 படிகளும் 18 தெய்வங்களாக கருதப்படுகிறார்கள். அவை முறையே:

    ஒன்றாம் திருப்படி- சூரியன்

    இரண்டாம் திருப்படி- சிவன்

    மூன்றாம் திருப்படி- சந்திரன்

    நான்காம் திருப்படி- பராசக்தி

    ஐந்தாம் திருப்படி- செவ்வாய்

    ஆறாம் திருப்படி- முருகன்

    ஏழாம் திருப்படி- புதன்

    எட்டாம் திருப்படி- விஷ்ணு

    ஒன்பதாம் திருப்படி- குரு

    பத்தாம் திருப்படி- பிரம்மா

    பதினோராம் திருப்படி- சுக்கிரன்

    பனிரெண்டாம் திருப்படி- லட்சுமி

    பதிமூன்றாம் திருப்படி- சனீஸ்வரர்

    பதினான்காம் திருப்படி- எமன்

    பதினைந்தாம் திருப்படி- ராகு

    பதினாறாம் திருப்படி- சரஸ்வதி

    பதினேழாம் திருப்படி- கேது

    பதினெட்டாம் திருப்படி- விநாயகர்

    இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சம் உள்ளது.

    அதாவது ஒற்றைபடை வரிசையில் நவக்கிரகங்களும், இரட்டை படை வரிசையில் தெய்வ குடும்பமும் இருப்பதாக ஐதீகம்.

    • படிபூஜை சபரிமலையில் சிறந்த முறையில் செய்யப்படுகிறது.
    • 18 படிகளும் வெள்ளி மற்றும் பித்தளை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

    படிபூஜை சபரிமலையில் சிறந்த முறையில் செய்யப்படுகிறது.

    18 படிகளை பூக்களாலும், விளக்குகளாலும் அலங்கரித்து அவற்றுக்கு கீழே 18ம்படி ஏறும் இடத்தில்

    பிரதான தந்திரி 18 வெள்ளி கலசங்களை வைத்து படிபூஜை செய்வார்.

    ஒவ்வொரு படியிலும் படி பூஜையும், மூர்த்தி பூஜையும் நடத்துவார்.

    பிறகு 18 படிகளுக்கும் கலசாபிஷேகம் நடைபெறும்.

    தேங்காயை இரண்டாக உடைத்து அந்த மூடியில் நெய்விளக்கு ஏற்றி தீபம் காண்பிப்பார்.

    18 படிகளும் வெள்ளி மற்றும் பித்தளை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

    நைவேத்தியம் நடைபெற்ற பிறகு பிரசன்ன பூஜை செய்வார்.

    பிறகு கற்பூர ஜோதி ஏற்றி தீபாராதனை காண்பிப்பார்.

    இதற்கு பிறகு பிரதான தந்திரியும், மேல்சாந்தியும் மற்றும் சில குறிப்பிட்ட பக்தர்களும், படியேறி செல்வார்கள்.

    பிறகு சன்னிதானத்தில் ஐயப்பனுக்கு அரவணப்பாயாசம் நைவேத்தியம் செய்து தீபம் காண்பிப்பார்கள்.

    • ஹரிஹர புத்ரனாகிய மணிகண்டனுக்கு ஐயப்பன் என்ற பெயரின் பின்னால், ஒரு வரலாறு கூறப்படுகிறது.
    • ”வழி தெரியாமல் நீங்கள் திணறாமல் இருக்க கருடன் உங்களுக்கு வழிகாட்டுவான்" என்று கூறி சென்றார்.

    ஹரிஹர புத்ரனாகிய மணிகண்டனுக்கு ஐயப்பன் என்ற பெயர் வந்ததன் காரணமாக ஒரு வரலாறு கூறப்படுகிறது.

    பந்தளராஜன் மகனாக வளர்ந்த மணிகண்டன், அவதார நோக்கம் முடித்து,

    பந்தளராஜனை விட்டுப் பிரிய வேண்டிய நேரம் வந்தது.

    அந்த சமயத்தில் கலங்கி நின்ற தனது வளர்ப்புத் தந்தையிடம் "நான் இனி வனத்தில் வாசம் செய்வேன்.

    என்னை காண வேண்டும் என நீங்கள் நினைத்தால், கல்லும் முள்ளும் நிறைந்த காட்டு வழியே வர வேண்டும்.

    வழி தெரியாமல் நீங்கள் திணறாமல் இருக்க கருடன் உங்களுக்கு வழிகாட்டுவான்"

    என்று சொல்லி விடை பெற்றுச் சென்றார்.

    தன் மைந்தன் மணிகண்டனைப் பார்க்க சென்ற போதெல்லாம் பந்தளராஜன் காடு, மலைக்களைக் கடக்க மிகவும் சிரமப்பட்டார்.

    அப்போது ஐயனே, அப்பனே என்றெல்லாம் அவர் சொன்ன வார்த்தைகளே இணைந்து ஐயன், அப்பன் ஐயப்பன் என்றாகி விட்டதாக சொல்லப்படுகிறது.

    • ஐயப்பன் என்றதும் சின்முத்திரை காட்டி, யோபட்டம் தரித்து அமர்ந்திருக்கும் வடிவமே நினைவுக்கு வரும்
    • அஷ்டகோண சாஸ்தா பீடத்தில் யோக பத்ராசனத்திலும், வீற்றிருந்து அருள்கிறார்.

    ஐயப்பன் என்றதும் சின்முத்திரை காட்டி, யோபட்டம் தரித்து அமர்ந்திருக்கும் வடிவமே பலருக்கும் நினைவுக்கு வரும்.

    ஆனால் அவர் நான்கு விதமான ஆசனங்களில் அமர்ந்து,

    நான்கு வகையான முத்திரைகளைக் காட்டுபவர் என்கிறது பூதநாததோ பாக்யானம்,

    தியானபிந்து ஆசனத்தில் அபய சின்முத்திரை தரித்தும்,

    கிருக நாரீயபீட ஆசனத்தில் யோகப் பிராண முத்திரையுடனும்,

    குதபாத சிரேஷ்டாசனத்தில் அபான பந்த முத்திரையோடும,

    அஷ்டகோண சாஸ்தா பீடத்தில் யோக பத்ராசனத்திலும்,

    வீற்றிருந்து அருள்கிறார் ஐயப்பன்.

    • சபரிமலையில் முதன் முதலில் பரசுராமரே சாஸ்தா கோவிலை எழுப்பினார்.
    • சபரி மலையில் மகர சங்கராந்தி தரிசனம் சிறப்பாக சொல்லப்படுகிறது.

    சபரிமலையில் முதன் முதலில் பரசுராமரே சாஸ்தா கோவிலை எழுப்பினார்.

    அப்போது தர்தசாஸ்தாவின் விக்ரகத்தை அவர் அங்கே பிரதிஷ்டை செய்தார்.

    அவதார நோக்கமான மகிஷி சம்ஹாரம் முடிந்ததும், சின் முத்திரைக்காட்டி யோக பட்டம் தரித்து

    தவக்கோலத்தில் அமர்ந்த ஐயப்பன், தவத்தின் நிறைவாக, பரசுராமர் அமைத்த தர்மசாஸ்தா விக்ரகத்தில் ஐக்கியமானார்.

    அதன் பிறகே சின்முத்திரை காட்டி யோக பட்டம் தரித்து, அமர்ந்த நிலையில் உள்ள ஐயப்பனின் வடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    ஆதிகாலத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்த சாஸ்தாவின் வடிவிற்கு ஆண்டுக்கு ஒரு முறை மகர சங்கராந்தி, அன்று மட்டுமே வழிபாடுகள் நடத்தப்பட்டன.

    ஐயப்பன் வடிவம் அமைந்த பிறகே மாத பூஜைகள், மண்டல பூஜைகள் மகரவிளக்கு பூஜைகள் தொடங்கப்பட்டன.

    அதனால்தான் இன்று சபரி மலையில் மகர சங்கராந்தி தரிசனம் சிறப்பாக சொல்லப்படுகிறது.

    • சபரிமலை செல்வதற்காக 48 நாட்கள் விரதம் இருந்தாக வேண்டும் என்பது சாஸ்திரம்.
    • பக்தர்கள் ஒரு மண்டலம் விரதம் மேற்கொண்டால், கலிதோஷங்களிலிருந்து விடுபடலாம்.

    சபரிமலை செல்வதற்காக 48 நாட்கள் விரதம் இருந்தாக வேண்டும் என்பது சாஸ்திரம்.

    ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள் இது எப்படி வந்தது?

    மொத்த நட்சத்திரங்கள் 27.

    அவற்றுக்குரிய ராசிகள் 12, கிரகங்களின் எண்ணிக்கை 9, இவை மொத்தம் 48.

    இந்த 48 தினங்களுக்கு ஒருவர் பகவானிடம் பக்தி வைத்து தரிசித்தால், எந்தவித கலிதோஷங்களும் பிடிக்காது.

    நட்சத்திரங்கள், ராசிகள், கிரகங்களால் உண்டாகும் தொல்லைகளில் இருந்து விடுபட்டு,

    பகவானுடைய பாதங்களில் சரணாகதி அடைந்து உலக துன்பங்களிலிருந்து மீண்டு வருவதற்காகவே

    பக்தர்கள் ஒரு மண்டலமான 48 நாட்கள் காலம் விரதம் மேற்கொள்கின்றனர்.

    • ஐயப்பனுக்குரிய நட்சத்திரம் உத்திர நட்சத்திரமாகும்.
    • தோஷங்கள், தடைகள், பாவங்கள் தீர்ந்து நலம் பெற ஐயப்பனுக்குரிய உத்திர விரதம் உறுதி தருகிறது.

    ஐயப்பனுக்குரிய நட்சத்திரம் உத்திர நட்சத்திரமாகும்.

    அந்த நட்சத்திர நாளில் ஐயப்பனுக்குரிய விரதம் இருக்கலாம்.

    அன்று காலை முதல் இரவு வரை, முறையான விரதம் அனுஷ்டித்து

    மாதம் ஒரு நாள் ஸ்ரீ ஐயப்ப சுவாமியை மனதில் எண்ணி வணங்கலாம்.

    தீபம் ஏற்றி, சரண கோஷம் இட்டு பானகம் நிவேதனம் செய்து, கற்பூர தீபம் ஏற்றிய பின் வணங்கி,

    அருகில் உள்ள ஐயப்பன் அல்லது மற்ற ஆலயங்களுக்குச் சென்று வரலாம்.

    பூரணா, புஷ்கலாம்பிகையுடன் உள்ள ஹரிஹரபுத்ர சுவாமி படத்தை வீட்டில் பூஜை செய்து,

    10 முதல் 50 வயதுவரை உள்ள பெண்களும் விரதம் இருக்கலாம்.

    தோஷங்கள், தடைகள், பாவங்கள் தீர்ந்து நலம் பெற ஐயப்பனுக்குரிய உத்திர விரதம் உறுதி தருகிறது.

    • சபரிமலையில் இந்த ஏழு அம்சங்களும் பொருந்தியுள்ளது.
    • இத்தகைய இடத்திற்குப் போய் தரிசனம் செய்வதால் ஒருவருடைய அனைத்து பாவங்களும் நீங்கும்.

    ஒரு தலம் மிகவும் சிறப்பான புண்ணிய தலம் என்ற சிறப்பை பெற வேண்டுமானால் கீழே உள்ள ஏழு அம்சங்களில் ஏதாவது ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.

    1. சுயம்பு லிங்க பூமி - சுயமாக உண்டானதோ அல்லது இறைவனுடைய ஜீயோதிர்லிங்கம் உள்ளவை.

    2. யாக பூமி - மகா யாகம் நடந்த தலம்.

    3. பலி பூமி - பக்தி மார்க்க யுத்தம் நடந்த இடம்.

    4. யோக பூமி - ரிஷி தவமிருந்த தலம்.

    5. தபோ பூமி - யோகிமார் வாழ்ந்த தலம்.

    6. தேவ பூமி - தேவர்களால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட பூமி.

    7. சங்கம பூமி - நதி சங்கமிக்கும் தலம்.

    இந்த ஏழில் ஒன்று இருந்தாலும் அது தீர்த்த பூமியாகும்.

    இத்தகைய இடத்திற்குப் போவதாலும் தரிசனம் செய்வதாலும் ஒருவருடைய அனைத்துப் பாவங்களும் நீங்கி

    கோடி புண்ணியம் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

    சபரிமலையில் மேற்கண்ட ஏழு அம்சங்களும் பொருந்தியுள்ளதால் சபரிமலை வருபவர்களுக்கும்

    ஐயப்பனை தரிசிப்பவர்களுக்கும் கோடி புண்ணியம் கிடைக்கிறது.

    அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி மோட்சமடைய தகுதி பெறுகிறார்கள்.

    இது சபரிமலைக்கு மட்டுமே இருக்கும் தனித்தன்மையாகும்.

    ×