search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூண்டு"

    • பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை அதிகமாகவே உள்ளது.
    • இனி வரும் நாட்களில் பூண்டு வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் பூண்டு பயிரிடப்படுகிறது. ஆானலும் தேவை அதிகமாக இருப்பதால் மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    ஆண்டு தோறும் ஜனவரி மாத பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதி வரை பூண்டு அறுவடை காலமாகும். இதனால் பொங்கல் பண்டிகைக்கு பிறகு வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு மூட்டைகள் கொண்டு வரப்படும். இதனால் ஜனவரி இறுதியில் பூண்டு விலை குறைந்து மார்ச் மாதம் வரை 100 ரூபாய்க்கு விற்கப்படும்.

    தமிழகத்தில் பூண்டு மொத்த விற்பனை சந்தைகளில் சேலம் லீபாஜார், பால் மார்க்கெட் உள்பட பல இடங்கள் முக்கிய இடம் வகிக்கிறது. தற்போது பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை அதிகமாகவே உள்ளது.

    முதல் தர பூண்டுகள் கடந்த 2 மாதங்களாக 350 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது. இதனால் பொது மக்கள் குறைந்த அளவே வாங்கி செல்கிறார்கள். சேலம் மொத்த சந்தைகளில் இருந்து நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு பூண்டு மூட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.

    ஆனால் அறுவடை காலம் தொடங்கியும் வட மாநிலங்களில் விளைச்சல் குறைவு காரணமாக வழக்கத்தை விட 4-ல் ஒரு பங்கு மட்டுமே சேலம் சந்தைக்கு பூண்டு கொண்டு வரப்படுவதால் விலை இன்னும் 350 ருபாயாக நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இனி வரும் நாட்களில் பூண்டு வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
    • பூண்டு மிளகு சாதம் செய்வது பற்றி பார்ப்போம்.

    இந்த மழைக்காலத்தில் தொற்று நோய்களின் பாதிப்பு என்பது அதிகரிக்கும். ஒருவருக்கு சளி, இருமல், காய்ச்சல் வந்து விட்டால் அது மற்றொருவருக்கும் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது அதனால் இந்த மழை மற்றும் குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், அதேசமயம் தொற்று நோய்களின் பாதிப்புகள் ஏற்படாமல் குறைக்கவும் நமக்கு உதவி செய்யும் உணவு பொருளாக திகழ்வதுதான் பூண்டு. இந்த பூண்டை போலவே மிளகும் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொண்ட பொருள் என்பதால் இவை இரண்டையும் சேர்த்து ஆரோக்கியமாக பூண்டு மிளகு சாதம் செய்வது பற்றி பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    மிளகு- 2 ஸ்பூன்

    சீரகம்- ஒரு ஸ்பூன்

    கடுகு- கால் டீஸ்பூன்

    பூண்டு- 10 பல் (நறுக்கியது)

    சாம்பார் வெங்காயம்- 10 (நறுக்கியது)

    காய்ந்த மிளகாய்- 2

    கறிவேப்பிலை- ஒரு கொத்து

    சாதம்- 2 கப்

    செய்முறை:

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரம், பூண்டை தட்டி சேர்க்க வேண்டும். பூண்டு வதங்கிக்கொண்டு இருக்கும் போதே வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். நன்றாக வதங்கிய பிறகு அதில் சாதத்தை சேர்த்து வதக்க வேண்டும். இறக்குவதற்கு முன்பு மிளகை ஒன்றிரண்டாக பொடித்து சாதத்தின் மீது தூவி இறக்கினால் சுவையான பூண்டு, மிளகு சாதம் தயார். இது குளிர்காலத்துக்கு மிகவும் ஏற்றதும். சளி, இருமல் உள்ளவர்கள் சூடாக சாப்பிட்டு வர மிகவும் இதமாக இருக்கும்.

    • கடந்த 2 வாரங்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.150 உயர்ந்து உள்ளது.
    • பூண்டு வரத்து குறைந்து விட்டதால் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    பூண்டு விளைச்சல் குறைந்துள்ளதால் கடந்த சில வாரங்களாகவே பூண்டு விலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பூண்டு வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் பூண்டு விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் தற்போது ஒரு கிலோ பூண்டு ரூ.350 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரங்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.150 உயர்ந்து உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பூண்டு வரத்து குறைந்து விட்டதால் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் விலை கிலோவில் வருமாறு:-

    வெங்காயம்-ரூ.28, தக்காளி-ரூ.20, உருளைகிழங்கு ரூ.27, சின்ன வெங்காயம்-ரூ.80, ஊட்டி கேரட்-ரூ.40, பீன்ஸ்-ரூ.35, பீட்ரூட்ரூ.45, முட்டைகோஸ்-ரூ.15, வெண்டைக்காய்-ரூ.45, கத்தரிக்காய்-ரூ.50, காராமணி-ரூ.50, பாகற்காய்-ரூ.50, புடலங்காய்-ரூ.40.

    • விரதம் இருந்தும் வழிபாட்டில் ஈடுபடுவார்கள்.
    • பூண்டு, வெங்காயத்தையும் ஒதுக்கி வைப்பதுண்டு.

    நாடு முழுவதும் கொண்டாடப்டும் பண்டிகைகளுள் ஒன்று நவராத்திரி. பலரும் வீட்டில் கொலு வைத்து வழிபாடு நடத்துவார்கள். விரதம் இருந்தும் வழிபாட்டில் ஈடுபடுவார்கள். அதற்கு ஏற்ப உணவுக்கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பார்கள். சில உணவுப்பொருட்களை அறவே தவிர்ப்பார்கள். பெரும்பாலும் அசைவத்தை தவிர்க்கும் நிலையில் பூண்டு, வெங்காயத்தையும் ஒதுக்கி வைப்பதுண்டு.

    நவராத்திரியின் போது பூண்டு, வெங்காயத்தை தவிர்ப்பதற்கு காரணங்களும் இருக்கின்றன. இந்து மதத்தில் உணவுப்பொருட்கள் ராஜசம், தமாசம், சாத்வீகம் என மூன்று விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் சாத்வீக உணவுகள் ஆன்மிக உணர்வை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.

    பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், நட்ஸ் வகைகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், இறைச்சி அல்லாத புரத உணவுகள் சாத்வீக உணவுகளாக குறிப்பிடப்படுகின்றன. இவற்றை சாப்பிடுவதன் மூலம் மனதை அடக்க முடியும். சகிப்பு தன்மை, கருணை, மகிழ்ச்சி போன்ற உணர்வுகள் இயல்பாகவே வெளிப்படவும் செய்யும். உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியையும் அளிக்கும். உடலில் உள்ள நச்சுக்களை விரைவாக நீக்கும்.

    விரதத்தின்போது சாத்வீக உணவுகளை உட்கொண்டால் எளிதில் ஜீரணமாகும். அதனால் சாப்பிட்ட உணவுகள் செரிமானமாவதற்கு குறைந்த நேரமே செலவாகும். அதனால் குடல் இயக்கங்களுக்கு ஓய்வு கிடைக்கும். உடலும் சோர்வின்றி இருக்கும். மேலும் சாத்வீக உணவு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்யும். நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்தும். மன நலனையும் மேம்படுத்தும். அதனால்தான் நவராத்திரியின்போது சாத்வீக உணவுகளை சாப்பிடுவதற்கு பரிந்துரைக்கிறார்கள்.

    ஆயுர்வேதத்தின்படி வெங்காயம், பூண்டு இவை இரண்டும் தாமசம் வகை உணவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகை உணவுகள் மனம், ஆன்மாவிற்கு இடையூறு ஏற்படுத்ததக்கூடியவையாக குறிப்பிடப்படுகின்றன. உணர்ச்சிகள், ஆசைகளை தூண்டுவது, பேராசை கொள்ள வைப்பது, மந்தநிலை, மனச்சோர்வு அடைவது போன்ற குணங்களை தூண்டக்கூடியவையாக கருதப்படுகின்றன.

    வெங்காயத்தை பொறுத்தவரை உடல் உஷ்ணத்தையும் ஏற்படுத்தக் கூடியது. பூண்டு உணர்ச்சிகளை, ஆசைகளை கட்டுப்படுத்தும் விஷயத்தில் எதிர்மறையாக செயல்படக்கூடியது. அதனால் நவராத்திரி விரதத்தின்போது அவைகளை உட்கொள்வது நல்லதல்ல என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

    • மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் தற்போது நீலகிரி பூண்டு அதிகபட்சமாக ரூ.400-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
    • விலை உயர்வு விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறி விவசாயம் பிரதான தொழிலாக உ ள்ளது. அங்கு உள்ள விவசாயிகள் விளைநிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

    இதன் ஒருபகுதியாக கோத்தகிரி மற்றும் கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன், நெடுகுளா உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் முதல் போகமாக கடந்த ஜனவரி மாதமும், 2-வது போகமாக ஏப்ரல் மாதத்திலும் பூண்டு பயிரிட்டு இருந்தனர்.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக போதிய மழை பெய்து உள்ளது. இதனால் அங்கு பூண்டு பயிர்கள் செழித்து வளர்ந்தது. எனவே விவசாயிகள் பூண்டுக்களை சாகுபடி செய்து விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் தற்போது நீலகிரி பூண்டு அதிகபட்சமாக ரூ.400-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் 300 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டது. இதேபோல சைனாரக பூண்டு கிலோ ரூ.140-க்கு கொள்முதல் செய்யப்ப டுகிறது.

    இமாச்சலபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பூண்டு விதை வாங்குவதற்காக ஏராளமான வியாபாரிகள் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு வந்து செல்கின்றனர். இதனால் அங்கு நீலகிரி பூண்டின் கொள்முதல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஊட்டி வெள்ளைப்பூண்டு கிலோவுக்கு ரூ.150 முதல் ரூ.350 வரை விற்பனையானது.
    • வெளியூர் வரத்தும் குறைந்ததால் மேலும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் காய்கறி மண்டி செயல்பட்டு வருகிறது. இங்கு நீலகிரி மாவட்டத்தில் விளையும் உருளைக்கிழங்கு, முட்டைக் கோஸ், பூண்டு, தக்காளி, டர்னீப், கேரட், பீன்ஸ், பீட்ரூட், வெள்ளைப்பூண்டு, இஞ்சி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வந்து ஏலமுறையில் விற்பனை செய்து வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிக்கு கர்நாடகா, ஆந்திரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்கும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சல்பிரதேசம், காஷ்மீரில் இருந்து வெள்ளைப்பூண்டும் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது.

    அதேபோல மத்திய பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசம் காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெள்ளைப்பூண்டு கொண்டு வரப்பட்டு விற்கப்பட்டு வருகிறது.

    ஊட்டியில் தற்போது வெள்ளைப்பூண்டு சீசன் இல்லை. எனவே வெளிமாநில வெள்ளைப்பூண்டு மட்டுமே தற்போது அதிகளவில் விற்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் காய்கறி மண்டியில் தற்போது வெளிமாநில பூண்டு கிலோவுக்கு ரூ.85 முதல் அதிகபட்சமாக ரூ.145 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    அடுத்தபடியாக இருப்பு வைக்கப்பட்ட ஊட்டி வெள்ளைப்பூண்டு கிலோவுக்கு ரூ.150 முதல் ரூ.350 வரை விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அதே நேரத்தில் வெள்ளைப்பூண்டு விலை ஏற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து வெள்ளைப் பூண்டு மண்டி உரிமையாளர் ஜோசப் பேபி கூறுகையில், கடந்த ஆண்டு வெள்ளைப் பூண்டிற்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.50 வரை மட்டுமே விற்பனை ஆனது.எனவே விவசாயிகளில் 50 சதவீதம் பேர் வெள்ளைப் பூண்டு பயிரிடுவதில் போதிய ஆர்வம் காட்டவில்லை.

    இதனால் தற்போது வரத்து குறைவாக உள்ளது. எனவே, ஊட்டி வெள்ளைப் பூண்டு கிலோ ஒன்றிற்கு ரூ.150 முதல் ரூ.350 வரை விற்பனையாகிறது.

    வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் வெள்ளைப்பூண்டு கிலோ ஒன்றிற்கு ரூ.85 முதல் ரூ.145 வரை விற்பனையாகிறது. இந்த விலையேற்றம் இனிவரும் காலங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.

    ×