search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்க பந்து"

    • இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாக விளங்கினார்.
    • இந்த தொடரில் அதிக கோல் அடித்தவர் வரிசையில் அவரே 5 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

    பெங்களூரு:

    தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் குவைத் அணியை பெனால்டி ஷூட்அவுட்டில் 5-4 என்ற கோல் கணக்கில் விழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த தொடர் முழுவதும் இந்திய அணியினர் சிறப்பாக விளையாடினர்.

    இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாக விளங்கினார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.மேலும் இந்த தொடரில் அதிக கோல் அடித்தவர் வரிசையில் அவரே 5 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

    தொடரில் அதிக கோல் அடித்தவருக்கு வழங்கப்படும் தங்க ஷூ விருதையும் அவரே வென்று உள்ளார். மேலும் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டதால் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதன்படி தொடர் நாயகனுக்கு வழங்கப்படும் தங்க பந்து விருதும் அவருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டு உள்ளது.

    தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் வரலாற்றில் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையும் படைத்துள்ளார். 10 ஆண்டுகளாக இருந்த அஷ்பாக்கின் சாதனையை முறியடித்தார். இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×