என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பங்க் ஊழியர்"
- உடல்நிலை சரியில்லை, சிறிது நேரம் படுத்துவிட்டு வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறியுள்ளார்.
- சக பணியாளர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு செல்ல வலியுறுத்தினர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள வி.அரியலூர் அங்காளம்மன் கோவில் தெருவவை சேர்ந்தவர் கதிரவன் (வயது 39). இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், மகனும் உள்ளனர். இவர் திருவெண்ணைநல்லூர் - திருக்கோவிலூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் வேலைக்கு சேர்ந்துள்ளார். இரவு 7 மணியில் இருந்து காலை 9 மணிவரை வேலை செய்து வந்தார்.
பின்னர் உடல்நிலை சரியில்லை, சிறிது நேரம் படுத்துவிட்டு வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறியுள்ளார். சக பணியாளர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு செல்ல வலியுறுத்தினர். அவரும் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்ததாக கூறி பெட்ரோல் பங்கில் உள்ள ஓய்வறையில் படுத்துறங்கினார். நீண்ட நேரமாகியும் அவர் எழுந்து வரவில்லை. ஊழியர்கள் அவரை எழுப்பிய போதும், அவர் எழவில்லை. தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கதிரவனை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது தொடர்பான புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதிரவன் உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.