search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் உரிமை தொகை"

    • நான் சொல்றேன் அண்ணாமலை அடிக்கடி வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
    • தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை 80 சதவீத பெண்களுக்கு கிடைக்கும். வெறுமனே குற்றம் சாட்டக் கூடாது.

    திண்டுக்கல்:

    காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று திண்டுக்கல் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

    தமிழகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகின்றோம். பெருந்தலைவருக்கு செய்கிற மரியாதையிலேயே, பெரிய மரியாதை இதுதான். தமிழகத்தில் ஏராளமான திட்டங்கள் கொணடு வரப்பட்டதற்கு காரணம் பெருந்தலைவர் காமராஜர். தமிழகத்தில் பா.ஜ.க. இதற்கு எதிராக செயல்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்காக ஒரு புதிய திட்டங்கள் கூட பாரதிய ஜனதா கொண்டு வரவில்லை.

    9 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு ஒரு புதிய சாலை கூட கொண்டு வரவில்லை. இங்கு நடைபெறுவது எல்லாம் ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகள் தான். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தொடங்கி 7 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை சுற்றுச்சுவர் மட்டுமே இருக்கிறது. அதனோடு தொடங்கப்பட்ட மற்ற மாநிலங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள் முடிவு பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்தை பா.ஜ.க. புறக்கணிக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

    அதை நாங்கள் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறோம். அமைச்சர் செந்தில் பாலாஜி மொரீசியஸ் தீவில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சொல்கிறார். இது எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு. டெல்லியில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாமா. நான் சொல்றேன் அண்ணாமலை அடிக்கடி வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். அதற்கு காரணம் இங்கே இருக்கிற பணத்தை சுவிஸ் பேங்க்கில் டெபாசிட் செய்யத்தான். இது அரசியல் ஆயிடுமா. இதனால் யாருக்கு என்ன பலன் அண்ணாமலை அளந்து பேச வேண்டும். செந்தில் பாலாஜி என்ன குற்றவாளியா? குற்றம் சுமத்தி இருக்கிறீர்கள். உங்களது அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அமைச்சர்களாக இருக்கின்றனர். அமித்ஷா மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்த போது குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்தார்.

    அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களுக்கும் நிபந்தனைகள் இருக்கும். நிபந்தனைகள் இல்லாமல் எந்த திட்டங்களும் செயல்படுத்த முடியாது. தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை 80 சதவீத பெண்களுக்கு கிடைக்கும். வெறுமனே குற்றம் சாட்டக் கூடாது. பொது சிவில் சட்டத்தை இந்தியா முழுவதும் மக்கள் எதிர்கின்றனர். மோடி 9 வருடத்தில் எதையுமே சாதிக்கவில்லை. எனவே சாதனையை சொல்லி ஓட்டு கேட்க முடியாதவர்கள், ஜாதியை சொல்லி ஓட்டு கேட்க நினைக்கின்றனர். இந்தியாவில் பல ஜாதிகள், பல மதங்கள் உள்ளன. விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். காமராஜர் பிறந்த நாளன்று இரவு நேர பாடசாலையை தொடங்கியுள்ளார். இதை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    • சென்னையில் சுமார் 3,200 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை அறிவித்து, அதனை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, சென்னை மாநகராட்சியில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக விண்ணப்பங்களை பெற 24ம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெறும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

    மேலும், சென்னையில் சுமார் 3,200 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

    • பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியருக்கு வருடம் தோறும் 234 கோடி ரூபாய் செலவில் மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது.
    • கிராமப்புறங்களில் மாணவ மாணவியர் இலவச சைக்கிள்களை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    சென்னை:

    கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்-1 படித்த 4 லட்சத்து 89 ஆயிரத்து 600 மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கான விழா சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    அரசு சார்பாக 5 லட்சம் மாணவ மாணவிகளுக்கு ரூ.234 கோடி மதிப்பீட்டில் இலவச மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. இதை இலவசமாக பார்க்காமல் கற்ற கல்விக்கு உரிமையாக பார்க்க வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். கல்வியை மட்டும் தான் யாராலும் எடுத்துகொள்ள முடியாது. ஒரு தாயாகவும் தந்தையாகவும் உங்களை பார்த்து கொள்ள தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். எனவே வேறு எங்கும் கவனம் செலுத்தாமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

    பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:- பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியருக்கு வருடம் தோறும் 234 கோடி ரூபாய் செலவில் மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அதனை துவக்கி வைத்துள்ளேன்.

    கவர்னர் கடிதம் தொடர்பான விஷயத்தை முதலமைச்சர் பார்த்துக்கொள்வார் என்றார்.

    மகளிர் உரிமை திட்டம் 80 சதவீதம் பேருக்கு கிடைக்க வாய்ப்பில்லை என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டது குறித்து பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 15 லட்சம் தருவேன் என்று சொன்னார்களே 15 ரூபாயாவது கொடுத்தார்களா? அவர்களுக்கு மகளிர் உரிமை திட்டம் குறித்து பேச அருகதை இல்லை என குறிப்பிட்டார். கிராமப்புறங்களில் மாணவ மாணவியர் இலவச சைக்கிள்களை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் தயாநிதி மாறன் எம்.பி. அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×