search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை மாநாடு"

    • மதுரை மாநாட்டில் பங்கேற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் பரிதாபமாக இறந்தார்.
    • பெருங்குடி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் வளை யங்குளத்தில் கடந்த 20-ந் தேதி அ.தி.மு.க. மாநாடு நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 56). அ.தி.மு.க. தொண்டரான இவர் மதுரை மாநாட்டில் பங்கேற்று விட்டு அன்று இரவு ஊருக்கு புறப்பட்டார்.

    சம்பக்குளம் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த போது பழனிச்சாமி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பழனிச்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் பத்ரிகாணு கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னையன் (65) அ.தி.மு.க. கிளைச் செயலாளரான இவர் கடந்த 20-ந்தேதி கட்சி பொறுப்பாளர் குப்பையன் தலைமையில் மாநாட்டில் பங்கேற் றார்.

    இந்த நிலையில் திடீரென உடல் நலகுறைவு ஏற்பட்டு மாநாட்டு பந்தல் அருகில் சென்னையன் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் முருகன் கொடுத்த புகாரின் பேரில் பெருங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருவிழாவில் மதுரை மட்டுமின்றி மாநிலம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.
    • மதுரை நகரின் அனைத்து பகுதிகளிலும் அ.தி.மு.க.வினரின் வாகனங்களாகவே அணி வகுத்து செல்கின்றன.

    மதுரை:

    கோவில் மாநகராக போற்றப்படும் மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழாவில் மதுரை மட்டுமின்றி மாநிலம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

    அதனை மிஞ்சும் அளவுக்கு மதுரையில் இன்று நடைபெற்று வரும் அ.தி.மு.க. வீர வராற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு தொண்டர்கள் குவிந்துள்ளனர். மதுரை நகரின் அனைத்து பகுதிகளிலும் அ.தி.மு.க.வினரின் வாகனங்களாகவே அணி வகுத்து செல்கின்றன.

    நேற்று காலை முதலே சென்னை மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ரெயில்கள், பஸ், வேன், கார் மூலமாகவும், அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இரு சக்கர வாகனங்கள் மூலமாகவும் மாநாட்டு திடலை நோக்கி படையெடுத்து வந்தனர்.

    அவ்வாறு பகலிலேயே வந்தவர்கள் ஆங்காங்கே பதிவு செய்து வைத்திருந்த தனியார் தங்கும் விடுதிகளில் ஓய்வெடுத்தனர். பலர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பழமுதிர்சோலை முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    அறை எடுக்காதவர்கள் கிடைத்த இடங்களில் தூங்கி இரவை கழித்து இன்று காலை மாநாட்டு பந்தலுக்கு வந்தனர். காலையிலேயே அவர்களுக்கு சுடச்சுட இட்லி, பொங்கல், சட்னி, சாம்பார் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

    • அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டு அதற்கான பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறார்கள்.
    • எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதையுடன் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வானதையடுத்து முதல் முறையாக அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டை எடப்பாடி பழனிசாமி மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கூட்டி உள்ளார்.

    அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு என்ற தலைப்பில் இந்த மாநாடு மிக பிரமாண்ட முறையில் நடத்தப்படுகிறது. அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டையொட்டி நடத்தப்படும் இந்த மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்த அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டு அதற்கான பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலை மதுரைக்கு வருகை தந்தார்.

    அவருக்கு வழியெங்கும் மலர்கள் தூவி, பூரண கும்ப மரியாதையுடன் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    • ராணிப்பேட்டை அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏக்கள் சம்பத், சீனிவாசன், மாவட்ட பொருளாளர் சாபுதீன் உள்பட நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், சட்டமன்ற துணை கொறடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி பேசினார்.

    கூட்டத்தில் வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் முன்னிட்டு 19 பேர் கொண்ட பூத் கமிட்டியும் வாக்குச்சா வடிகள் தோறும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் குழுக்களை வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதிக்குள் அமைப்பது.

    வருகிற ஆகஸ்ட் 20-ந் தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வது, வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் குறிப்பாக அரக்கோணம் நாடாளு மன்ற தொகுதியிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது என்பது உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அ.தி.மு.கவின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×