என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆசிய தடகளம் சாம்பியன்ஷிப்"
- நீளம் தாண்டுதலில் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
- இந்தியா இதுவரை 9 பதக்கங்களை வென்றுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க நாளில் அபிஷேக் பால் இந்தியாவின் பதக்கப் பட்டியலை தொடங்கி வைத்தார். அவர் 10000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இரண்டாம் நாளான நேற்று நடைபெற்ற போட்டிகளில் மூன்று இந்தியர்கள் தங்கம் வென்று சாதனை படைத்தனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியர்கள் இரண்டு தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.
இதில், ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் தஜிந்தர்பால் சிங் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மகளிருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பரூல் சவுதாரி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
இதேபோல், நீளம் தாண்டுதலில் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை ஷைலி சிங் வெள்ளி வென்றார்.
இதன்மூலம், ஐந்து தங்கம், ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் என இந்தியா இதுவரை 9 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.