என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசாம் போலீஸ்"

    • குழந்தைகளை பற்றிய அதிகப்படியான தகவல்களை வெளியிடுவது அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
    • காவல் துறையின் பதிவிற்கு பயனர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் புகைப்படங்களை எடுத்து மார்பிங் செய்து மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்நிலையில் அசாம் போலீசார் தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட சில குழந்தைகளின் புகைப்படங்களை பகிர்ந்து ஒரு பதிவை செய்துள்ளனர்.

    அதில், உங்கள் குழந்தைகளை பாதுகாக்க சமூக ஊடகங்களில் உங்கள் குழந்தையை பற்றி நீங்கள் என்ன பகிர்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பற்றிய அதிகப்படியான தகவல்களை வெளியிடுவது அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். அவர்களது இந்த பதிவு டுவிட்டரில் வைரலாகிய நிலையில், காவல் துறையின் பதிவிற்கு பயனர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    • சம்பவத்தின்போது கூட்டத்தினரை கலைக்க லேசான தடியடியை நடத்தினார்கள்.
    • வருகிற 23-ந்தேதி பகல் 11.30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிட்டுள்ளனர்.

    கவுகாத்தி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மணிப்பூரில் தொடங்கி மும்பையை நோக்கி பாத யாத்திரையை நடத்தி வருகிறார்.

    கடந்த மாதம் அவர் அசாம் மாநிலத்தில் நடை பயணத்தை நடத்தினார். அப்போது காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    ராகுல்காந்தி முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தின்போது கூட்டத்தினரை கலைக்க லேசான தடியடியை நடத்தினார்கள். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    அடுத்தகட்ட விசாரணைக்காக போலீசார் அசாம் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். வருகிற 23-ந்தேதி பகல் 11.30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிட்டுள்ளனர்.

    காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கும் அசாம் போலீசார் சம்மன் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. அவரையும் 23-ந்தேதி அசாம் போலீசார் விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்கு அசாம் காங்கிர சார் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராகுலை கைது செய்ய அசாம் போலீசார் மறைமுகமாக திட்டமிடுகிறார்கள் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • தாக்குதலில் 5 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
    • போலீசாரை தாக்கியதாக 11 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

    'கூகுள் மேப்' மூலமாக வழி தவறி சென்றதால், ஏரிக்குள் கார் பாய்ந்தது, ஆற்றுக்குள் மோட்டார் சைக்கிள் மூழ்கியது என பல விபத்துகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. 'கூகுள் மேப்' மூலமாக திருடனை பிடிக்க வந்த போலீசாருக்கே தொழிலாளர்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் நாகாலாந்தில் அரங்கேறி உள்ளது.

    இதுபற்றிய விவரம் வருமாறு:-

    அசாம் மாநிலத்தை சேர்ந்த 16 பேர் கொண்ட தனிப்படை போலீசார், கொள்ளை வழக்கு தொடர்பாக ஒரு திருடனை தேடி வந்தனர். இதில் 3 பேர் மட்டுமே சீருடை அணிந்திருந்தனர். மற்றவர்கள் சாதாரண உடையில் சென்றனர். அந்தப்பகுதியில் உள்ள ஒரு தேயிலைத்தோட்டத்தில் திருடன் மறைந்து இருப்பதாக தகவல் கிடைத்தது.

    ஆனால் போலீசாருக்கு, அந்த தேயிலைத்தோட்டம் எங்கே இருக்கிறது? என்று தெரியவில்லை. உடனே 'கூகுள் மேப்' உதவியை நாடினர். அது தவறாக வழிகாட்டியதால் நாகாலாந்து மாநிலம் மோகோக்சங் மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்குள் போலீசார் வழிதவறி சென்று விட்டனர்.

    அங்கிருந்த தேயிலைத்தோட்ட தொழிலாளர்களிடம் கொள்ளையன் பற்றி விசாரித்தனர். ஆனால் போலீசாரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், அங்கிருந்த தொழிலாளர்கள் போலீசாரை நையப்புடைத்து தர்ம அடி கொடுத்தனர். வலி தாங்காத போலீசார் அலறி துடித்தனர்.

    இந்த தாக்குதலில் 5 போலீசார் படுகாயம் அடைந்தனர். அந்த கும்பலிடம் இருந்து தப்பிய போலீஸ்காரர் அளித்த தகவலின்பேரில், நாகாலாந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அசாம் போலீசாரை பத்திரமாக மீட்டனர். மேலும் போலீசாரை தாக்கியதாக 11 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். திருடனை பிடிக்க சென்ற இடத்தில், போலீஸ்காரர்களையே தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் தாக்கிய சம்பவம் அசாமிலும், நாகாலாந்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×