என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மகளிர் உரிமை திட்டம்"
- தகுதியுள்ள எல்லோருக்கும் உரிமைத் தொகை கிடைக்கிற வரை திராவிட மாடல் அரசின் பணி நிச்சயம் தொடரும்.
- திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவுக்கு எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து வளரும்.
சென்னை:
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி வைத்திருந்தார். இதில் 1 கோடியே 6 லட்சத்து 49 ஆயிரத்து 242 பேருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
இதில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் இப்போது புதிய பயனாளிகளாக 7 லட்சத்து 35 ஆயிரத்து 58 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நேற்றே ரூ.1000 சென்றடைந்துள்ளது.
இதன் தொடக்க விழா தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து இதில் 6 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று தேர்தலுக்கு முன்பு சொன்னோம். அப்போது சிலர் என்ன சொன்னார்கள் என்றால், இதெல்லாம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதி. இவர்கள் ஆட்சிக்கு வரவே மாட்டார்கள். இதுமாதிரி ஒவ்வொருவரும் நிறைய சொன்னார்கள். கட்டம் எல்லாம் பார்த்தார்கள்.
ஆனால் நீங்கள் எல்லோரும் என்ன சொன்னீர்கள். என்றால், தி.மு.க.தான் ஆட்சிக்கு வரவேண்டும். தி.மு.க. சொன்னால் வாக்குறுதியை நிறைவேற்றும். கலைஞர் மகன் ஸ்டாலின் தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று ஓட்டு போட்டு பதிலடியும் தந்தீர்கள்.
உங்களுடைய கட்டளைக்கு கட்டுப்பட்டவன் நான். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொன்னால், சொன்னதை நிச்சயம் செய்வேன். அதற்கு அடையாளமாகத்தான் மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை கொடுக்கிறோம்.
அதனால்தான் உங்கள் முன்னாடி கொஞ்சம் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன். கடந்த செப்டம்பர் 15-ந்தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தேன்.
செப்டம்பர் 15, அக்டோபர் 15 என 2 மாதத்துக்கும் 2 ஆயிரம் ரூபாயை 1 கோடியே 6 லட்சம் சகோதரிகள் வாங்கிவிட்டார்கள். இந்த முறை முன்கூட்டியே இன்று மாலைக்குள் அடுத்த 1000 ரூபாயும் வந்து சேர்ந்து விடும். மகளிருக்கு சொத்துரிமை, கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு கொடுத்து உங்களுடைய உரிமைகளுக்காக பாதுகாவலராக இருந்த தமிழினத் தலைவர் கலைஞருடைய நூற்றாண்டு விழாவில் தொடங்கி கொடுக்கப்படுகிற தொகை இதுவாகும். இது உதவித் தொகையல்ல. உரிமைத் தொகை.
இந்த உரிமைத் தொகை உண்மையிலேயே தேவையும், தகுதியும் உள்ள அனைத்து மகளிருக்கும் போய் சேர வேண்டும் என்பதில் நம்முடைய அரசு கவனமாக இருந்தது.
வி.ஏ.ஓ. அலுவலகம் தாலுகா அலுவலகம் என எங்கேயும் அலையாமல் பொதுமக்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று அரசே உங்களிடம் வந்து விண்ணப்பங்களை வாங்கினார்களோ அதே மாதிரி அந்த விண்ணப்பங்களை வாங்குவதற்கு முகாம்களை அமைக்க சொன்னேன்.
கடந்த ஜூலை 24-ந்தேதி தர்மபுரி மாவட்டம் தோப்பூரில் அந்த முகாமை நானே தொடங்கி வைத்தேன். ஏறக்குறைய 1 கோடியே 63 லட்சம் மகளிர் விண்ணப்பித்தார்கள். இதற்கும் சிலர் விமர்சனம் செய்தார்கள்.
தகுதி உள்ள மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று சொன்னதை தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக செய்வதாக பேசினார்கள். நாம் தொடக்கத்தில் இருந்து தெளிவாக சொன்னோம். தகுதி உள்ளவர்கள் யார் என்று நேர்மையான பாரபட்சமற்ற விதிமுறைகள்.
அந்த அடிப்படையில் அரசு சார்பில் வெளியிட்டு தமிழ்நாட்டில் உள்ள அத்தனை குடும்ப அட்டைதாரர்களையும் விண்ணப்பிக்க சொன்னோம். இந்த திட்டத்தின் நோக்கத்தையும், விதிமுறைகளின் குறிக்கோளையும், மக்கள் உள்ளார்ந்து புரிந்து கொண்ட காரணத்தால் 2 கோடியே 24 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில் 1 கோடி 63 மகளிர் மட்டும் விண்ணப்பித்தார்கள்.
மக்களுடைய இந்த புரிதலே திட்ட விதிமுறைகளுக்கான நியாயத்தை வெளிப்படுத்தியது. விமர்சித்தவர்கள் அமைதியாகி விட்டனர். இப்படி விண்ணப்பித்தவர்களில் இருந்து 1 கோடியே 6 லட்சத்து 58 ஆயிரத்து 375 தகுதி உள்ள மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்டு எல்லோருக்கும் அவர்களுடைய வங்கி கணக்கில் இந்தத் திட்டத்துக்கு ஒரு நாள் முன்னாடியே அதாவது செப்டம்பர் 14-ந் தேதியே அந்த மாதத்துக்கான உரிமைத் தொகை 1000 ரூபாயை நாம் வரவு வைத்தோம்.
அந்த மாதம் வங்கி கணக்கு இல்லாத 2 லட்சத்து 42 ஆயிரத்து 956 பயனாளிகளுக்கு மணியார்டர் மூலம் 1000 ரூபாய் வழங்கப்பட்டது. அடுத்து அக்டோபர் 15-ந்தேதி வங்கிக் கணக்கில் வரவு வைத்தோம். மணியார்டர் மூலம் உரிமைத் தொகை வழங்கப்பட்ட மகளிருக்கு வங்கிக் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இவ்வளவு பெரிய திட்டம் 1 கோடிக்கும் அதிகமான பயனாளிகள். அவர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய். ஆனால் இதில் எந்த சின்ன புகாருக்கும் இடமில்லை. அதுதான் இந்த திட்டத்தோட மிகப்பெரிய வெற்றி.
அந்த பெருமிதத்தோடு சொல்கிறேன். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் நாட்டுக்கே முன்னுதாரணமாக அமைந்திருக்கிற திட்டம். ஒரு திட்டம் பெற்ற வெற்றியை தொடர வேண்டும் என்றால், அதை தொடர்ந்து கவனிக்க வேண்டும். அதனால் முகாம்களில் விண்ணப்பித்து தகுதியிருந்தும் தேர்ந்தெடுக்கப்படாத விண்ணப்பதாரர்களுக்கு, முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் பதிவாகாமல் போன விண்ணப்பத்தாரர்களுடைய விண்ணப்பங்களும் தரவுகளோடு தொடர்ந்து சரிபார்க்கப்பட்டது.
இதற்காக மட்டும் அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த ஏறக்குறைய 54 ஆயிரத்து 220 அலுவலர்கள் மாவட்ட, கிராம அளவில் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் அதை சரிபார்த்து ஒரு பட்டியலை எங்களிடம் வழங்கினார்கள். அதில் இந்த மாதத்தில் இருந்து 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிர் புதிய பயனாளிகளாக சேர்க்கப்பட்டார்கள்.
புதிய பயனாளிகளான என் அன்பு சகோதரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கான 1000 ரூபாயை நேற்று உங்கள் கணக்கில் வரவு வைத்து விட்டோம். உங்களோடு சேர்த்து மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1000 ரூபாய் இனி வாங்க போகிறீர்கள்.
நீங்கள் மட்டுமல்லா தகுதியுள்ள யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். அதனால்தான் விண்ணப்பித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்கிற காரணத்தை குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்தோம்.
அந்த காரணம் ஏற்புடையதா? இல்லை என்றால் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கினோம். அதை பயன்படுத்தி மேல்முறையீடு செய்தார்கள். அவர்களது விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம். சரிபார்ப்பு அலுவலர்கள் கள ஆய்வு செய்து தகுதிபெறும் மகளிருக்கு வருகிற டிசம்பர் மாதத்தில் இருந்து திட்டம் மூலமாக 1000 ரூபாய் வழங்கப்படும்.
தகுதியுள்ள எல்லோருக்கும் உரிமைத் தொகை கிடைக்கிற வரை திராவிட மாடல் அரசின் பணி நிச்சயம் தொடரும். கடந்த மார்ச் 27-ந்தேதி சட்டமன்றத்தில் இந்த திட்டத்தை பற்றி பேசும் போது, ஏறத்தாழ 1 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கிடும் வகையில் இந்த திட்டம் அமையும் என்று நான் சொன்னேன்.
ஆனால் இன்றைக்கு 1 கோடி 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதான் இந்த திட்டத்தோட மிகப்பெரிய வெற்றி. இதே மாதிரியான திட்டம் வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்ட போது, பொதுமக்கள் கூட்ட நெரிசலில் எப்படியெல்லாம் இன்னல்களுக்கு ஆளானார்கள், அலைக்கழிக்கப்பட்டார்கள் என்பதை பார்த்தோம். அது மாதிரி எந்த நிகழ்வும் இல்லாமல் அமைதியான முறையில் அனைத்து தகுதியான மகளிருக்கும் இந்த திட்டம் சென்று சேர்ந்து உள்ளது.
எந்தவிதமான சர்ச்சைக்கும் இடமளிக்காத வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்தி காட்டிய பெருமை, அரசு அலுவலர்களையும் பணியாளர்களையும்தான் போய் சேரும்.
இந்த திட்டத்துக்கு பொறுப்பேற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் தம்பி உதயநிதி, அரசு அலுவலர்களோடு இந்த திட்டத்தை இதனுடைய செயல்பாடு குறித்து தொடர்ந்து ஆய்வுக் கூட்டம் நடத்திக் கொண்டிருப்பார். அவருக்கு வாழ்த்துக்கள்.
தொடர்ந்து களத்திலும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். அது இனியும் தொடர வேண்டும். தொடரும் அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இது ஊர் கூடி இழுத்த தேர். ஊருக்காக நம்முடைய திராவிட மாடல் அரசு உருவாக்கிய தேர். மக்களின் தேர் இது.
மிகப்பெரிய சாதனையை அமைதியாக செய்து காட்டி இருக்கிறோம். திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவுக்கு எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து வளரும். தமிழ்நாடு முழுவதும் இன்று நிகழ்ச்சியில் பங்கேற்ற சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் உங்களில் ஒருவனான இந்த ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்து விடைபெறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர் பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- கலைவாணர் அரங்கில் மகளிர் உரிமைத்தொகையினை இரண்டாவது கட்டமாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை:
மகளிர் உரிமைத்தொகையினை இரண்டாவது கட்டமாக வழங்கும் திட்டத்தை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
என் குரலை கேட்கிற போதே உங்களுக்கு நன்றாக தெரியும். அதனால்தான் சில நாட்கள் வீட்டிலேயே முழு ஓய்வு எடுத்துக் கொண்டேன்.
இந்த வாரம் முழுவதும் ஓய்வெடுக்க வேண்டும் என்று என்னுடைய மருத்துவர்கள் சொன்னாலும், என்னால் மக்களைச் சந்திக்காமல் இருக்க முடியாது.
அதனால்தான் தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டத்தில் இருந்தும், காணொலி காட்சி மூலமாக இணைந்திருக்கிற உங்களைப் பார்க்க வந்துவிட்டேன்.
தொண்டை வலி இருந்தாலும் தொண்டு செய்வதில் தொய்விருக்கக் கூடாது என்பதால் வந்துள்ளேன்.
உங்களைப் பார்க்கும்போது என்னுடைய உடல்வலி குறைந்து மனது மகிழ்ச்சியில் நிறைந்துள்ளது. இந்த 1000 ரூபாய் நீங்கள் வாங்கும் போது உங்களுக்கு ஏற்படுகிற மகிழ்ச்சியைவிட கொடுக்கும்போது எனக்குத்தான் அதிக மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சியை விட சிறந்த மருந்து எதுவாக இருக்கமுடியும். அதனால்தான் மருத்துவர்கள் அறிவுரையை மீறி இந்த விழாவுக்கு வந்துள்ளேன்
மகளிர் உரிமைத்தொகை நிறைவேற்ற முடியாத வாக்குறுதி என சிலர் விமர்சித்தனர். சொன்னதைச் செய்வோம்- அதன் அடையாளமே மகளிர் உரிமைத்திட்டம்.
சொன்னதைச் செய்ததால் உங்கள் முன் தைரியமாக நிற்கிறேன். மகளிர் உரிமைத் திட்டம் இந்தியாவுக்கே முன்மாதிரியாக உள்ளது என தெரிவித்தார்.
- சென்னையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் தலைமையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
சென்னை:
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 பெறுவதற்காக 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்திருந்த நிலையில் அதில் தகுதியுள்ள 1 கோடியே 6 லட்சத்து 49 ஆயிரத்து 242 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களது வங்கிக் கணக்கில் மாதந்தோறும் பணம் செலுத்தப்பட்டு வந்தது. 56 லட்சம் குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள் இதில் நிராகரிக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அரசு அறிவித்து இருந்தது.
அதன் பேரில் 11 லட்சத்து 85 ஆயிரம் பெண்கள் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த விண்ணப்பங்களில் 7 லட்சத்து 35 ஆயிரத்து 58 பயனாளிகள் தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டது.
அதன் பேரில் ஏற்கனவே ரூ.1000 வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருடன் சேர்த்து புதிதாக தேர்வு செய்யப்பட்டு உள்ள 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிருக்கும் ரூ.1000 வழங்க உத்தரவிடப்பட்டது.
அதன் பேரில் மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு நவம்பர் மாதத்திற்கான உதவித்தொகையை தீபாவளி பண்டிகையையொட்டி முன்கூட்டியே இன்று வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அவரவர் வங்கிக் கணக்கில் நேற்றே ரூ.1000 பணம் சென்றடைந்தது.
இந்த திட்டத்தில் தற்போது புதிதாக இணைந்திருந்த 7 லட்சத்து 35 ஆயிரத்து 58 பயனாளிகளுக்கு உரிமைத்தொகை விழா தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.
சென்னையில் இதன் தொடக்க விழா கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சசர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மகளிருக்கு ரூ.1000 வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் தலைமையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
- குமரி மாவட்டத்தில் 4 லட்சத்து 27 ஆயிரம் பேர் உரிமை திட்ட தொகைக்காக விண்ணப்பித்திருந்தனர்.
- 2 லட்சம் விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்பட்டன
நாகர்கோவில் :
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு ஏராள மானோர் விண்ணப்பித்தனர்.
நாளை தொடக்க விழா
இந்த விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. குமரி மாவட்டத்தில் 4 லட்சத்து 27 ஆயிரம் பேர் உரிமை திட்ட தொகைக்காக விண்ணப்பித்திருந்தனர்.
இதில் 2 லட்சம் விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்பட்டன. வருவாய் துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அந்த விண்ணப்பங்கள் சென்னைக்கு அனுப்பப் பட்டன.
இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் தொடக்க விழா நாளை (15-ந் தேதி) நடக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை தொடங்கி வைக்கி றார்.
தமிழகம் முழுவதும் காணொலி காட்சி மூலம் அவர் திட்டத்தை தொடங்கி வைக்கி றார். குமரி மாவட்டத்தில் திருவிதாங்கோட்டில் தொடக்கவிழா நடக்கிறது. அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் முதல் கட்டமாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமை திட்ட உதவித் தொகை வழங்கப்படுகிறது
- ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதிவாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்ப பதிவு சிறப்பு முகாம்கள் இன்று , நாளை (சனிக்கிழமை), நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 3 நாட்களும், முதலாம், 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்ற அதே இடங்களில் நடைபெறுகிறது.
வருவாய்த்துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அந்த குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதிவாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம். இதுதவிர சிறப்பு முகாம்களில் ஏற்கனவே விண்ணப்பபதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வர முடியாத குடும்ப தலைவிகள் இந்த முகாம்களில் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- கமுதி வட்டாரத்தில் மகளிர் உரிமை திட்டத்தில் 36,500 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
- விடுப்பட்டவர்களுக்கு 3 நாள் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
மண்டபம்
கமுதி வட்டாட்சியர் சேதுராமன் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் உள்ள 86 நியாய விலை கடைகளில் மொத்தமுள்ள 36,546 குடும்ப அட்டைதாரர்களில், முதல் கட்டமாக 51 நியாய விலை கடைகளில் விற்பனையாளர்கள், தன்னார் வலர்கள் மூலம் கடந்த ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை மகளிர் உரிமைத் தொகைக்கான 25,027 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 2-ம் கட்டமாக ஆக.5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 35 நியாய விலை கடை களில் 11,519 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின் பேரில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற, முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், கணவனால் கைவிடப்பட்டோர் ஓய்வூதியம், முதிர் கன்னி ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வூதியங்கள் பெறும் நபர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் உள்ள தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 3 நாட்கள் அந்தந்த பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து முகாம்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உடன் துணை வட்டாட்சியர் மேகலா, முதுநிலை உதவியாளர் சிவகுமார், வருவாய் ஆய்வாளர் மணிவல்லபன் ஆகியோர் உள்ளனர்.
- வருகிற 19, 20-ந்தேதிகளில் மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது.
- வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் அசல் ஆவணங்களுடன் நேரில் சென்று பதிவு செய்து பயன்பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தேர்வு செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும், நியாய விலைக் கடை வாரியாக முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் பெறுவதற்கு அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில், மொத்தம் உள்ள 775 நியாயவிலைக் கடைகளில் முதற்கட்டமாக 326 நியாயவிலைக் கடைகளில் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 4-ந்தேதி வரை முகாம்கள் நடத்தப் பட்டுள்ளது.
2-ம் கட்டமாக 449 நியாயவிலைக் கடைகளில் கடந்த 5-ந்தேதி முதல் முகாம்கள் நடைபெற்று வருகிறது. 2-ம் கட்ட முகாமில் குறிப்பிட்ட நாளில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யத் தவறியவர்கள் கடைசி 2 நாட்களில் வருகிற 15, 16-ந்தேதிகளில் விண்ணப்பங்க ளைப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் பொதுமக்கள் கலந்துகொள்ளும் வகையில் 15, 16-ந்தேதிகளில் நடைபெறும் விடுபட்ட வர்களுக்கான விண்ணப்பப் பதிவை வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் நடை பெறும். சிறப்பு முகாம்களில் சேர்த்து நடத்த அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில், 2 கட்டங்களிலும் சேர்த்து மொத்தம் உள்ள 775 மையங்களிலும் நடை பெற்றுள்ள முகாம்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் அவரவர் குடும்ப அட்டை இணைக்கப்பட்டுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு உட்பட்ட மையங்களில் 19,20-ந்தேதிகளில் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை நடைபெறும். இந்த முகாம்களில் 21 வயதிற்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள், தகுதிவாய்ந்த இதர மகளிரில் ஒருவர் விண்ணப் பத்துடன் சரிபார்ப்பதற்காக ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை, மின் இணைப்பு ரசீது மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் அசல் ஆவணங்களுடன் நேரில் சென்று பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சேலம் மாவட்டத்தில் 11 லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.
- தகுதி உள்ளவர்களுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகையாக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 11 லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் தகுதி உள்ளவர்களுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகையாக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது.
டோக்கன் விநியோகம்
இதற்காக கடந்த 20-ந் தேதியிலிருந்து விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இதில் 4 லட்சத்து 74 ஆயிரத்து 696 கார்டுகளுக்கு டோக்கன், விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து இத்திட்டத்திற் கான முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் கடந்த 24-ந் தேதி தொடங்கியது.
4 லட்சம் விண்ணப்பங்கள்
இதையடுத்து பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பங்கள் அலுவலர்களுக்கு வழங்கப் பட்ட மொபைலில் உள்ள
செயலியில் பதிவேற்றப்பட் டது. அதன்படி முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாமின் கடைசி நாளான நேற்று மாலை வரை சேலம் மாவட்டத்தில் 4 லட்சத்து 2 ஆயிரத்து 657 பேரிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்கள் பெறப்பட்டு பதியப்பட்டுள்ளன.
2-ம் கட்ட பதிவு
2-ம் கட்ட விண்ணப்
பதிவிற்காக ஏற்கனவே விண்ணப்பம் மற்றும்
டோக்கன்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பதிவு செய்யும் முகாம் இன்று காலை தொடங்கியது. 800-க்கும் மேற்பட்ட முகாம்களில் இந்த விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்று வருகிறது.
ஆர்வத்துடன்
நீண்ட வரிசையில் பெண்கள் ஆர்வத்துடன் காத்து நின்று விண்ணப்பங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதற்குள் 4 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்ய வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கடந்த மாதம் 28-ந் தேதி வரை 2 லட்சத்து 4 ஆயிரத்து 423 நபர்கள் பதிவு செய்துள்ளனர்.
- பதிவு செய்ய இயலாதவர்கள் வருகிற 15, 16-ந் தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி,
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், மகளிர் உரிமைத்தொகை வருகிற செப்டம்பர் மாதம் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்து, அதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்யும் முகாமை கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் தொடங்கி வைத்தார்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பெறுவதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் ஒவ்வொரு நியாய விலைக்கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம், டோக்கன் ஆகியவை நியாய விலைக்கடை பணியாளர்கள் மூலம் வீட்டில் நேரடியாக வழங்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் சரயு கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் 1094 நியாய விலைக் கடைகளில் உள்ள 5 லட்சத்து 64 ஆயிரத்து 264 குடும்ப அட்டைதாரர்கள் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக 584 கடைகளில் உள்ள 2 லட்சத்து 98 ஆயிரத்து 164 நபர்களுக்கு (முதல் நாள் ஒவ்வொரு பதிவு மையத்திலும் 60 நபர்களும், இரண்டாவது நாள் முதல் 80 நபர்கள் வீதம்) தேதி குறிப்பிட்டு விண்ணப்பங்கள் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டு 2 லட்சத்து 74 ஆயிரத்து 853 நபர்களுக்கு ஒப்புதல் ரசீது மற்றும் விண்ணப்பம் வழங்கப்பட்டு, 823 விண்ணப்பப்பதிவு தன்னார்வலர்கள் மூலம் கடந்த மாதம் 28-ந் தேதி வரை 2 லட்சத்து 4 ஆயிரத்து 423 நபர்கள் பதிவு செய்துள்ளனர்.
மேலும், கடந்த மாதம் 24-ந் தேதி முதல் நேற்று வரை டோக்கன் வழங்கப்பட்ட போது வீடு பூட்டி இருப்பதாலும், வெளியூர் சென்றுவிட்டதாலும் ஒப்புதல் ரசீது மற்றும் விண்ணப்பங்கள் பெறாத 23 ஆயிரத்து 311 நபர்களுக்கு மீண்டும் டோக்கன் வழங்கப்படும்.
மேற்கண்ட உரிய தேதிகளில் பதிவு செய்ய இயலாதவர்கள் மற்றும் விண்ணப்பம் பெறாதவர்கள் அனைவரும் இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) ஆகிய இரு நாட்கள் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இரண்டாம் கட்டமாக மீதம் உள்ள 510 நியாய விலைக் கடைகளில் உள்ள 2 லட்சத்து 66 ஆயிரத்து 460 குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) வரை டோக்கன் வழங்கப்பட்டு, 774 விண்ணப்பப்பதிவு தன்னார்வலர்கள் மூலம் வருகிற 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை விண்ணப்பதிவு செய்ய திட்டமிட ப்பட்டுள்ளது. மேலும், இரண்டாம் கட்டத்தில் உரிய தேதிகளில் பதிவு செய்ய இயலாதவர்கள் வருகிற 15-ந் தேதி மற்றும் 16-ந் தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சரயு தெரிவித்தார்.
- வடபுதுப்பட்டி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- 2 நாட்களாக மாவட்டத்தில் சுமார் 39 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், வடபுதுப்பட்டி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேனி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்ய முதற்கட்டத்தில் 259 முகாம்கள் மற்றும் 2-ம் கட்டமாக 258 முகாம்கள் என மொத்தம் 517 முகாம்கள் நடைபெற உள்ளது.
தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் மற்றும் பெரியகுளம் வட்டத்தி ற்குட்பட்ட 259 பகுதிகளில் முதற்கட்ட விண்ணப்பதிவு முகாம்கள் 24ந் தேதி முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் சுமார் 39 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொது மக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் இணைய பதிவு மேற்கொள்ளப்படும். பெறப்பட்ட விண்ணப்ப ங்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டதற்கான ஒப்புதல் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு குறுஞ் செய்தியாக வரும்.
கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ,டோ க்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டும் பொதுமக்கள் வருகை தந்து தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
- கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முதற்கட்ட முகாம் நேற்று தொடங்கியது.
- இதற்காக கடந்த 20 ஆம் தேதியிலிருந்து விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முதற்கட்ட முகாம் நேற்று தொடங்கியது. இதற்காக கடந்த 20 ஆம் தேதியிலிருந்து விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. அதில் விண்ணப்ப தாரர்கள் எத்தனை மணிக்கு முகாமிற்கு வர வேண்டும் தேவையான ஆவணங்கள் குறித்து தெரிவிக்கப்ப ட்டுள்ளது.அதன்படி முகாம் நடந்த இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே நேற்று மக்கள் திரண்டனர். இதையடுத்து அவர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர் பூர்த்தி செய்தனர். விரல் ரேகை பயோமெட்ரிக் மூலம் சரிபார்க்கப்பட்டது.விண்ணப்பங்களை அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட மொபைலில் உள்ள செயலியில் பதி வேற்றினர். சேலம் சிஎஸ்ஐ பாலி டெக்னிக் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதி வேற்றம் செய்யும் பணியை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். மாவட்டத்தில் 11 லட்சத்து 1861 ரேஷன் கார்டுகள் உள்ளன.இதில் முதல் கட்டமாக ஆறு லட்சத்து 138 காடுகளுக்கு டோக்கன், விண்ணப்பங்கள் வழங்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு ஆகஸ்ட் 4 வரை விண்ணப்ப பதிவு முகாம் நடக்க உள்ளது.முதல் நாளில் 846 முகாம்களில் 60 ஆயிரத்து 250 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இரண்டாவது நாளாக இன்றும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப் பட்டு வருகிறது. இதனை வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார்கள்.
- ஆவணங்களை இணைத்து பதிவு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- விண்ணப்பங்கள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
கடலூர்:
கடலூரில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் இன்று காலை முதல் விண்ணப்பங்கள் பெறும் முகாம் நடைபெற்று வரு கின்றது. இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் பெண்கள் ஆர்வ முடன் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அரசு அறிவித்த ஆவணங்களை இணைத்து பதிவு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் புனித வளனார் பள்ளியில் நடைபெற்று வரும் விண்ணப்பங்கள் பெறும் முகாமை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் சென்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது விண்ணப்பங்கள் சரியான முறையில் பெறப் பட்டு பதிவு செய்யப்படு கிறதா? என்பதை பார்வை யிட்டு பொதுமக்களிடம் பணிகள் குறித்து கேட்ட றிந்தார்.
மேலும் அரசு நிபந்தனைக் குட்பட்டு விண்ணப்பங்கள் அளிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் பதிவு செய்து இத்திட்டம் மூலம் பயனடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் யாரும் விடுபடாமல் சரியான முறையில் விண்ணப்பங்கள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் சங்கீதா செந்தில் முருகன், சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் அருள்பாபு, பார்வதி, சுபாஷிணி ராஜா, சுதா அரங்கநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்