search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் அழைப்பு"

    • திருச்சியில் கண்காட்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இக்கண்கா ட்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

    தமிழக வேளாண்மை த்துறை மற்றும் உழவர் நலத்துறை விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த சட்டசபை கூட்டத்தில் 2023-24ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் வேளாண் பெருமக்கள் பயன்பெறும் பொருட்டு நவீன தொழில்நு ட்பங்கள், கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் உணவு பதப்படுத்துபவர்கள் பயன் பெறும் வகையில் திருச்சியில் கண்காட்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அதன்படி வருகிற 27,28, 29 ஆகிய 3 நாட்கள் திருச்சியில் உள்ள கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விவசாய கண்காட்சி நடைபெறுகிறது. இதில்வேளாண்மையை எளிமைப்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்பங்கள், வருமானத்தை பெருக்கு வதற்கான வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டு நுட்பங்கள் நவீன மரபுசார் நுட்பங்கள், பாரம்பரியமிக்க தொழில்நுட்பங்கள், ஏற்றுமதி வாய்ப்புகள், வேளாண் விளைபொ ருட்களை பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள். வேளாண் காடுகள், உயரிய தோட்டக்கலை தொழில்நுட்பங்கள், நவீன வேளாண் எந்தி ரங்கள், பசுமைக்குடில் தொழில்நுட்பங்கள், பாரம்பரிய நெல் மற்றும் பிற பயிர் ரகங்கள், பாரம்பரிய மரபுசார் வேளாண் கருவிகள், பாரம்பரிய உணவு அரங்கங்கள், வேளாண் மானிய உதவிகள் பெற முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளன. கண்காட்சியை காண வரும் விவசாயிகள் ஆதார் நகலை எடுத்து வருமாறு கேட்டுக்கொண்டார். மேலும்கூடுதல் தகவலுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொள்ள வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இக்கண்கா ட்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    ×