search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார கேபிள்"

    • இருவரையும் மரத்தில் கட்டிப்போட்டு பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
    • இரண்டு பேரை அடிக்கும் வைரலான வீடியோவில் காணப்பட்ட சில கிராம மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் மின் கேபிள்களை திருடியதாக கூறி இரண்டு பேரை அதே மின் கேபிளில் மரத்தில் கட்டிப்போட்டு தடியால் அடித்து தக்கிய சம்பவம் நடந்துள்ளது. இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், "மின் கேபிள்களைத் திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பேரை ஒரு கிராமவாசி தடியால் அடிக்கும் காட்சி காண முடிகிறது. அப்போது அந்த இருவரும் தங்களை விட்டுவிடும்படி கெஞ்சும் காட்சியும் பதிவாகியுள்ளது.

    குளித்தலை பாக்தா பாய் கா என்ற இடத்தில் விவசாய வயல்களில் பொருத்தப்பட்டிருந்த தண்ணீர் மோட்டாரின் மின் கேபிள்கள் அண்மையில் இரவு திருடர்களால் திருடப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

    தண்ணீர் மோட்டார் பழுதடைந்து கிடப்பதை கவனித்த விவசாயிகள், போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து பொதுமக்கள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து திருடர்களை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். இதையடுத்து, 2 பேரை பிடித்து, திருடப்பட்ட மின் கேபிள்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர், இருவரையும் மரத்தில் கட்டிப்போட்டு பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து பதிண்டா காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அஜய் காந்தி கூறுகையில், "இரண்டு பேரை அடிக்கும் வைரலான வீடியோவில் காணப்பட்ட சில கிராம மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலரை நாங்கள் கைது செய்துள்ளோம். சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்றும், குற்றம் தொடர்பான எந்தவொரு விஷயத்தையும் எங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

    ×