search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்எல்ஏ கருணாநிதி"

    • 2 மாணவர்களுக்கான செலவை அகத்தியம் அறக்கட்டளை ஏற்றுக் கொண்டது.
    • தனது சொந்த நிதியின் மூலம் ரூ.4 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார்.

    பல்லாவரம்:

    ரஷ்ய விண்வெளி மையத்தை பார்வையிட செல்லும் மாணவர்களுக்கு, பல்லாவரம் எம். எல். ஏ. இ.கருணாநிதி ரூ. 4 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

    கொரோனா காலத்தில், முடங்கிக் கிடந்த அரசு பள்ளி மாணவர்களை, செறிவூட்டும் விதமாகவும், அவர்களின் திறமைகளை மேம்படுத்தும் விதமாகவும், 'ராக்கெட் சைன்ஸ்' என்ற தலைப்பில் ஆன்-லைன் பயிற்சி திட்டம், 2022-ம் ஆண்டு, ஜனவரி 26-ந்தேதி நடத்தப்பட்டது.

    விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை தலைமையில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள, 56 அரசு பள்ளிகளை சேர்ந்த 500 மாணவர்கள் வாய்ப்பு பெற்றனர். அவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், ஆன்-லைன் வகுப்பும் தொடர்ந்து கேள்வி நேரமும் நடத்தப்பட்டது.

    இதில் நிறைவாக 50 பேர் தமிழக அரசின் ஆதரவுடன் வருகிற ஆகஸ்டு 9-ந் தேதி ரஷ்ய நாட்டில் உள்ள யூரிக்காரின்' விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட செல்கிறார்கள்.

    இவர்களில் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள ஜமீன் பல்லாவரம் மேல் நிலை பள்ளியை சேர்ந்த பிளஸ்- 2 மாணவர்ரோஹித், பிளஸ்-1 மாணவர் முகமதுசதிக், 10-ம் வகுப்பு மாணவர்கள், லத்தாஷா ராஜ் குமார், இலக்கியா, லித்திகா, ரக்க்ஷித் ஆகிய 6 மாணவர்களும் அடங்குவர்.

    ரஷ்யாவுக்கு செல்ல ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.2 லட்சம் செலவாகிறது. இதில் 2 மாணவர்களுக்கான செலவை அகத்தியம் அறக்கட்டளை ஏற்றுக் கொண்டது. ஒரு மாணவருக்கு தனியார் நிறுவனமும், ஒரு மாணவருக்கு தமிழ் ஆர்வலர்களும் நன்கொடை வழங்கி உள்ளனர்.

    இந்நிலையில் 2 மாணவர்களுக்கு பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தனது சொந்த நிதியின் மூலம் ரூ.4 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார். நிகழ்ச்சியில் பல்லாவரம் 2-வது மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, அறிவியல் பட்டதாரி ஆசிரியை விஜயலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியர் சுதா, மாமன்ற உறுப்பினர் கலைச் செல்வி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×