என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திமுக கவுன்சிலர் மரணம்"
- கருணாநிதி நினைவு அமைதி பேரணியில் பங்கேற்ற 146-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
- கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும், துயரும் அடைந்தேன்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவு அமைதி பேரணியில் பங்கேற்ற 146-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் கருணாநிதி நினைவு அமைதி பேரணியில் மயங்கி விழுந்து கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும், துயரும் அடைந்தேன்.
மதுரவாயல் பகுதியில் கழகம் வளர்த்த செயல்வீரரான சண்முகத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தார், கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
- ஆலப்பாக்கம் சண்முகம் நேற்று நடந்த கலைஞர் மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு 5 கி.மீ. தூரம் நடந்து சென்றுள்ளார்.
- சண்முகத்தின் உடல் அவரது சொந்த ஊரான ஆலப்பாக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
சென்னை:
சென்னை மாநகராட்சி 146-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து பணியாற்றி வந்தவர் ஆலப்பாக்கம் சண்முகம் (62). தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராகவும் உள்ள இவர் கலைஞர் கருணாநிதி நினைவு அமைதி பேரணியில் இன்று பங்கேற்க காரில் வந்தார்.
அண்ணா சிலையில் இருந்து கடற்கரை நோக்கி கட்சி நிர்வாகிகளுடன் நடந்து சென்றார். கலைவாணர் அரங்கம் அருகில் போகும் போது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவர் தனது கார் டிரைவரை தொடர்பு கொண்டு உடனே வரும்படி கூறி உள்ளார்.
டிரைவர் வருவதற்குள் சண்முகம் சாலையில் மயங்கி விழுந்தார். பேரணியில் உடன் சென்ற கட்சி தொண்டர்கள் அவரை உடனே அருகில் உள்ள ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து சண்முகத்தின் உடல் அவரது சொந்த ஊரான ஆலப்பாக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. மாரடைப்பால் மரணம் அடைந்த ஆலப்பாக்கம் சண்முகத்தின் உடலுக்கு தி.மு.க. நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் முக்கிய பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மறைந்த சண்முகத்திற்கு ஏற்கனவே இருதய அறுவை சிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் நேற்று நடந்த கலைஞர் மாரத்தான் ஓட்டத்திலும் கலந்து கொண்டு 5 கி.மீ. தூரம் நடந்து சென்றுள்ளார். இந்த நிலையில் தான் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
கவுன்சிலர் சண்முகத்திற்கு சுமதி என்ற மனைவியும், தினகர் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். தினகர் தி.மு.க. இளைஞர் அணியில் பொறுப்பு வகித்து வருகிறார். மறைந்த சண்முகத்தின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். நாளை ஆலப்பாக்கம் இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்