search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யூ-டியூபர் கடத்தல்"

    • நேற்று திடீரென 12 பேர் கொண்ட கும்பல், ஆனந்த குமாரின் அலுவலகத்துக்குள் புகுந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
    • கத்தியை காட்டி மிரட்டி அவரை காரில் கடத்தி சென்றதுடன், அலுவலகத்தில் இருந்த, 70 மொபைல் போன்கள், 5 லேப்டாப்புக்களையும் தூக்கி சென்றுள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், லளிகம் அடுத்த தம்மனம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது31). இவர், தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே யு-டியூப் சானல் அலுவலகம் நடத்தி வருகிறார்.

    நேற்று திடீரென 12 பேர் கொண்ட கும்பல், ஆனந்த குமாரின் அலுவலகத்துக்குள் புகுந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    மேலும் கத்தியை காட்டி மிரட்டி அவரை காரில் கடத்தி சென்றதுடன், அலுவலகத்தில் இருந்த, 70 மொபைல் போன்கள், 5 லேப்டாப்புக்களையும் தூக்கி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து, ஆனந்த குமார் அலுவலகத்தில் பணியாற்றிய தருமபுரியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், தருமபுரி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    இதைனை அடுத்து, தருமபுரி எஸ்.பி. ஸ்டீபன்ஜேசுபாதம், தருமபுரி டி.எஸ்.பி. செந்திகுமார், தருமபுரி டவுன் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், ஆனந்த குமாரை கடத்தி சென்றவர்களை தேடிவந்தனர்.

    இந்த நிலையில், தருமபுரி அடுத்த குண்டல்பட்டியில் ஆனந்தகுமாரை கடத்தி சென்ற 12 பேர் கொண்ட கும்பலை போலீசார் ஒரு மணி நேரத்தில் மடக்கி பிடித்தனர்.

    பின்னர் விசாரணை மேற்கொண்டதில் ஆனந்தகுமாரை கடத்திய சின்னச்சாமி யு–டியூப் சானல் நடத்தி வந்தது தெரியவந்தது.

    மேலும், ஆனந்தகுமார் தங்களது யுடியூப் சானலில் அதிக பார்வையாளர்கள் உள்ளது போல் பொய்யான தகவலை பதிவிட்டுள்ளதாகவும், இதனால், தங்களது சானலை யுடியூப் நிறுவனம் தடை செய்துள்ளது.

    இதனால், அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதற்கு ஆனந்தகுமார் தான் காரணம் என அவரை கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து கடத்தலுக்கு முக்கிய காரணமாக இருந்த பழைய தருமபுரியை சேர்ந்த சின்னச்சாமி (38), இவருடைய கூட்டாளிகளான அதகபாடியை சேர்ந்த சீராளன் (30), கோடியூரை சேர்ந்த சுந்தரம் (30), சுரேஷ் (39), எ.ஜெட்டிஹள்ளியை சேர்ந்த முருகன் (26), ராமு (30), மல்லிக்குட்டையை சேர்ந்த சதீஷ் (35), பெரியசாமி (27), கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சந்திரன் (29), தருமபுரியை சேர்ந்த தினேஷ்குமார் (23), சோளப்பட்டியை சேர்ந்த மணி (25) உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாருதி கார், 6 பைக்குகள் மற்றும் ஆனந்தகுமார் அலுவலகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட 70 மொபைல் போன்கள், 5 லேப்டாப்புக்களை பறிமுதல் செய்தனர். பின்னர் 12 பேரையும் தருமபுரி சிறையில் அடைத்தனர்.

    ×