search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கியுடன் சிக்கினார்"

    • இருசக்கர வாகனத்தினை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் நாட்டுத் துப்பாக்கியுடன் மான்கறி இருப்பது தெரியவந்தது.
    • கள்ளத் துப்பாக்கி வைத்திருப்போர் தாமாக முன்வந்து காவல்துறை மற்றும் வனத்துறையுடன் ஒப்படைக்க வேண்டும்.

     ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வன சரக்கத்திற்கு உட்பட்ட ஒட்டப்பட்டி பிரிவு பகுதியில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலர்கள் ராஜ்குமார் (ஒகேனக்கல்), செந்தில்குமார் (பென்னாகரம்), ஆலயமணி (வேட்டை தடுப்பு ) மற்றும் வனப்பணியாளர்கள் கொண்ட குழுவினர் ஊட்டமலை பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தினை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் நாட்டுத் துப்பாக்கியுடன் மான்கறி இருப்பது தெரியவந்தது.

    அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே சேசுராஜபுரம் பூமரத்துகுழி பகுதியை சேர்ந்த கோபால் மகன் சக்தி (வயது28) என்பதும், நாட்டுத் துப்பாக்கி கொண்டு வனப்பகு தியில் மான் வேட்டையாடியதாக ஒப்பு கொண்டார்.

    இதனை அடுத்து வனத்துறையினர் சக்தியை கைது செய்து பென்னாகரம் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    மேலும் கள்ளத் துப்பாக்கி வைத்திருத்தல், வனவிலங்குகளை வேட்டையாடுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுதல், கள்ளத்துப்பாக்கி வைத்திருப்போர் தாமாக முன்வந்து காவல்துறை மற்றும் வனத்துறையுடன் ஒப்படைக்க வேண்டும்.

    வனத்துறை மூலமாக கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பது தெரிந்தாலோ, வன விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டாலோ சம்பந்தப்பட்ட நபர் மீது குண்டர் சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வன உயிரினங்களையும், வனத்தையும் பாதுகாக்க கிராமங்கள் தோறும் வனத்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அணிவகுப்பு நடத்தி வருகிறது.

    பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் தேவையின்றி அத்துமீறி உள்ளே நுழைந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வனஉயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குறைந்தபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    மேலும் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பது தெரிந்தாலோ வனவிலங்குகளை வேட்டையாடுதல் போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாக இருப்பின் பொதுமக்கள் தருமபுரி மாவட்ட வனத்துறை இலவச கைப்பேசி எண் 18 00 425 4586 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்பவரின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும் என மாவட்ட வனத்துறையினர் தெரிவித்தனர்.

    ×