search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயன்பாடற்ற கிணறு"

    • கிணறுகளையும் பாதுகாப்பாக மூடிவைத்திட வேண்டும்.
    • முக்கிய இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ள தாவது:- 

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகள், கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகள் ஆகியவற்றினால் இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் விலங்குகளுக்கு பல்வேறு ஆபத்துகள் ஏற்படுகின்றன. இதனைக் கருத்தில்கொண்டு, உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள விரிவான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. எனவே அனைத்து திறந்தவெளி கிணறுகளையும், செயலிழந்த ஆழ்துளை கிணறுகளையும் பாதுகாப்பாக மூடிவைத்திட வேண்டும்.

    பயன்படுத்தப்படாத குவாரிகளில் உள்ள பள்ளங்களில் குழந்தைகள், இளைஞர்கள்குளிப்பதை தடுத்திட வேண்டும். இதற்காக குவாரிகளை சுற்றிலும் வேலி அமைத்து எச்சரிக்கை பதாகைகளை வைத்திட குவாரி உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் பொறுப்பேற்க வேண்டும். சாலைகளில் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை உடனுக்குடன் மூடிடவும், பள்ளங்களை சுற்றிலும் தடுப்புகளை நிறுவிடவும் எச்சரிக்கை வாசகங்களை வைத்தி டவும், மேம்படுத்தப்பட்ட பிரதிபலிப்பான்களை வைத்திடவும் வேண்டும். பாதுகாப்பு விழிப்புணர்வைஅதிகரிக்க அபாயகரமான இடங்களுக்கு அருகில் உள்ள முக்கிய இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பயன்பாடற்றதிறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் பயன்பாடற்ற குவாரி குழிகளை கண்டறிந்து வருகின்ற 25- ந் தேதிக்குள் பாதுகாப்பு நடவடி க்கைகளை மேற்கொள்ள வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×