search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணையவழி"

    • திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் 12 மணி வரையில், மக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
    • சேவையை பெறுவதற்கு http://teleconsultation.s10safecare.com இணைப்பினை உபயோகிக்கலாம்.

    சென்னை:

    நவீன தொலைதொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சி காலகட்டத்தில் தொலை மருத்துவம் என்பது தொலைதொடர்பு இணைப்புகள் மூலம் இத்தகைய மக்களுக்கு வீட்டில் இருந்தபடியே சிறப்பு மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவதற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.

    இது சுகாதார சேவைகளை பயனாளிகள் வீட்டிற்கே எடுத்துச் செல்லும் உன்னதமான முறையாகும்.

    கொரோனா பேரிடர் காலத்தில், தொலை மருத்துவத்தின் மகத்துவத்தை இந்த உலகம் அறிந்தது. சிறப்பு மருத்துவ ஆலோசனை தேவைப்படும் கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகளில் இருக்கும் வயதானவர்கள் மற்றும் பயணம் செய்ய இயலாதவர்களுக்கு தொலை மருத்துவம் சிறந்த பரிசாக அமைகிறது.

    இதை கருத்தில் கொண்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொலை மருத்துவம் எனப்படும் இணைய வழி மருத்துவ ஆலோசனை சேவை மக்களுக்காக சமீபத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் 12 மணி வரையில், மக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், குழந்தை நல மருத்துவம், முதியோர் நல மருத்துவம் மற்றும் தோல் நோய் மருத்துவம் ஆகிய துறைகளை சார்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

    18 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகள் இந்த சேவையை பெறுவதற்கு http://teleconsultation.s10safecare.com இணைப்பினை உபயோகிக்கலாம் என்று டீன் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.

    ×