search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுமான்"

    • ஆஞ்சநேயரின் 108 போற்றிகளை துதித்து வணங்கினால் சகல கிரக தோஷங்களும் விலகும்.
    • கோடி புண்ணியம் கிடைக்கும்

    மாதந்தோறும் மூலம் நட்சத்திரம், வாரந்தோறும் சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயரின் 108 போற்றிகளை துதித்து வணங்கினால் சகல கிரக தோஷங்களும் விலகி கோடி புண்ணியம் கிடைக்கும்.

    செல்வ வளந்தரும் ஆஞ்சநேயரின் 108 போற்றி வருமாறு,

    1. ஓம் அனுமனே போற்றி

    2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி

    3. ஓம் அறக்காவலனே போற்றி

    4. ஓம் அவதார புருஷனே போற்றி

    5. ஓம் அறிஞனே போற்றி

    6. ஓம் அடக்கவடிவே போற்றி

    7. ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி

    8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி

    9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனேபோற்றி

    10. ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி

    11. ஓம் ஆனந்த வடிவே போற்றி

    12. ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி

    13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி

    14. ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி

    15. ஓம் இசை ஞானியே போற்றி

    16. ஓம் இறை வடிவே போற்றி

    17. ஓம் ஒப்பிலானே போற்றி

    18. ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி

    19. ஓம் கதாயுதனே போற்றி

    20. ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி

    21. ஓம் களங்கமிலாதவனே போற்றி

    22. ஓம் கர்மயோகியே போற்றி

    23. ஓம் கட்டறுப்பவனே போற்றி

    24. ஓம் கம்பத்தருள்பவனே போற்றி

    25. ஓம் கடல் தாவியவனே போற்றி

    26. ஓம் கரை சேர்ப்பவனே போற்றி

    27. ஓம் கீதாபாஷ்யனே போற்றி

    28. ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி

    29. ஓம் கூப்பிய கரனே போற்றி

    30. ஓம் குறுகி நீண்டவனே போற்றி

    31. ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி

    32. ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி

    33. ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி

    34. ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி

    35. ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி

    36. ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி

    37. ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி

    38. ஓம் சீதாராம சேவகனே போற்றி

    39. ஓம் சூராதி சூரனே போற்றி

    40. ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி

    41. ஓம் சொல்லின் செல்வனே போற்றி

    42. ஓம் சூரியனின் சீடனே போற்றி

    43. ஓம் சோர்வில்லாதவனே போற்றி

    44. ஓம் சோக நாசகனே போற்றி

    45. ஓம் தவயோகியேபோற்றி

    46. ஓம் தத்துவஞானியே போற்றி

    47. ஓம் தயிரன்னப் பிரியனேபோற்றி

    48. ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி

    49. ஓம் தீதழிப்பவனே போற்றி

    50. ஓம் தீயும் சுடானே போற்றி

    51. ஓம் நரஹரியானவனே போற்றி

    52. ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி

    53. ஓம் நாமகிரி காவலனே போற்றி

    54. ஓம் நாமக்கல் ஆஞ்சநேயா போற்றி

    55. ஓம் பண்டிதனே போற்றி

    56. ஓம் பஞ்சமுகனே போற்றி

    57. ஓம் பக்தி வடிவனே போற்றி

    58. ஓம் பக்த ரட்சகனே போற்றி

    59. ஓம் பரதனைக் காத்தவனே போற்றி

    60. ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி

    61. ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி

    62. ஓம் பயம் அறியாதவனே போற்றி

    63. ஓம் பகையை அழிப்பவனே போற்றி

    64. ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி

    65. ஓம் பிரம்மச்சாரியே போற்றி

    66. ஓம் பீம சோதரனே போற்றி

    67. ஓம் புலனை வென்றவனே போற்றி

    68. ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி

    69. ஓம் புண்ணியனே போற்றி

    70. ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி

    71. ஓம் மதி மந்திரியே போற்றி

    72. ஓம் மனோவேகனே போற்றி

    73. ஓம் மாவீரனே போற்றி

    74. ஓம் மாருதியே போற்றி

    75. ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி

    76. ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி

    77. ஓம் மூலநட்சத்திரனே போற்றி

    78. ஓம் மூப்பில்லாதவனே போற்றி

    79. ஓம் ராமதாசனே போற்றி

    80. ஓம் ராமநாமப் பிரியனே போற்றி

    81. ஓம் ராமதூதனே போற்றி

    82. ஓம் ராம சோதரனே போற்றி

    83. ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி

    84. ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி

    85. ஓம் ராமனை அணைந்தவனே போற்றி

    86. ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி

    87. ஓம் ராமாயண நாயகனே போற்றி

    88. ஓம் ராமாயணப் பிரியனே போற்றி

    89. ஓம் ராகவன் கண்மணியே போற்றி

    90. ஓம் ருத்ர வடிவனே போற்றி

    91. ஓம் லட்சியப் புருஷனே போற்றி

    92. ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி

    93. ஓம் லங்கா தகனனே போற்றி

    94. ஓம் லங்காவை வென்றவனே போற்றி

    95. ஓம் வஜ்ர தேகனே போற்றி

    96. ஓம் வாயுகுமாரனே போற்றி

    97. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி

    98. ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி

    99. ஓம் விஷ்ணு சொரூபனே போற்றி

    100. ஓம் விளையாடும் வானரனே போற்றி

    101. ஓம் விஸ்வரூபனே போற்றி

    102. ஓம் வியாசராஜருக்கு அருளியவனேபோற்றி

    103. ஓம் வித்தையருள்பவனே போற்றி

    104. ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி

    105. ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி

    106. ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி

    107. ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி

    108. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

    • ஆஞ்சநேயரை வழிபடுவோர் அன்றாடம் பஞ்சபூதங்களையும் வழிபட்டவர்களாவர்.
    • ஐந்தில் ஒன்றான பூமி தேவியின் மகளான சீதையை இலங்கையில் கண்டு என அர்த்தப்படுகிறது.

    அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி

    அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி

    அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்

    அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்

    இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல்.

    இப்பாடலில் இடம்பெறும் ``அஞ்சிலே" எனும் சொல் ஒரே மாதிரியாக, ஒரே உச்சரிப்பை கொடுத்த போதிலும், ஒவ்வொரு அடியிலும் அவை உணர்த்தும் பொருள் வெவ்வேறானவை.

    முதல் வரியில் இடம்பெற்றுள்ள அஞ்சிலே என்னும் சொல் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவிற்குப் பிறந்தவர் ஆஞ்சநேயர் என்பதனைக் குறிக்கும்.

    அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி ஆஞ்சநேயர் இலங்கை சென்றார் என்று பொருள்படும்.

    அஞ்சிலே ஒன்று ஆக ஆரியர்க்காக ஏகி- ஆகாய மார்க்கத்தில் இலங்கைக்குப் பறந்து,

    அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு -ஐந்தில் ஒன்றான பூமி தேவியின் மகளான சீதையை இலங்கையில் கண்டு என அர்த்தப்படுகிறது.

    (ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்காக பூமியைத் தோண்டும் போது தோன்றியவள் சீதை)

    கடைசி வரியில் வரும் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் - இலங்கைக்கு ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பையும் வைத்து எரித்தான் எனப்படுகிறது.

    ராமபக்தனான ஆஞ்சநேயர் நமக்கு வேண்டியன எல்லாம் தந்து - அளித்து காப்பார் என்பதே இந்த 4 வரி துதிப்பாடலின் பொருள்.

    ஆஞ்சநேயரை வழிபட்டால் பஞ்சபூதங்களையும் வழிபட்டதற்கு சமம். ஆஞ்சநேயரை வழிபடுவோர் அன்றாடம் பஞ்சபூதங்களையும் வழிபட்டவர்களாவர்.

    அனுமனை வழிபடச் செல்லும் முன் அவர் மீதான துதி பாடலை அதன் பொருள் உணர்ந்து சொல்லி அனுமன் அருள் பெறுவோமாக!

    • நாமக்கல் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி வழிபடுவதன் மூலம் சனி கிரக பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
    • துளசியை நினைத்தால் பாவம் போகும்.

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி வழிபடுவதன் மூலம் சனி கிரக பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

    தேவர்களும், அசுரர்களும் ஒன்று கூடி பாற்கடலை கடைந்து அதில் இருந்து அமிர்தத்தை பெற முயன்றனர்.

    அப்போது பாற்கடலில் இருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன் தோன்றினர்.

    மகா விஷ்ணுவின் ஆனந்த கண்ணீர் பெருகி அந்த கண்ணீர் துளி அமிர்த கலசத்தில் விழுந்தது.

    அந்த கலசத்தில் இருந்து பச்சை நிறத்துடன் துளசி மகாதேவி தோன்றினார்.

    துளசி, லட்சுமி, கவுதுஸ்பம் என்ற மூன்றை மட்டும் மகா விஷ்ணு வைத்துக்கொண்டு மற்றவற்றை தேவர்களுக்கு வழங்கி விட்டார்.

    துளசியில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள், அசுவினி தேவர் இருவர் வசிக்கின்றனர்.

    இலையின் நுனியில் பிரம்மன், நத்தியில் மாயோன்மற்றும், லட்சுமி, சரஸ்வதி, காயத்ரி, பார்வதி ஆகியோர் வசிக்கின்றனர்.

    துளசியை நினைத்தால் பாவம் போகும்.

    துளசி மாலை சாத்தி விஷ்ணுவை வழிபட்டால் மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் விலகும். மனக்கிலேசம் நீங்கும்.

    புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் உண்டாகும் என்பது ஐதீகம்.

    இதன்படி விஷ்ணுவின் திருநாமத்தில் ஊறித்திளைக்கும் ஆஞ்சநேயருக்கும் பக்தர்கள் துளசி மாலை சாத்தி வழிபடுவது பிரதானமாக உள்ளது. துளசி மாலையுடன் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.

    புகழ் கூடும், செல்வம் பெருகும், பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

    துளசி தீர்த்தத்தை அருந்தினால் பரமபதம் செல்வார்கள் என்றும் ஒரு கருத்து உள்ளது.

    • நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்படுகிறது.
    • தலைச்சுற்றல், கபம், மூச்சுத்திணறல் என்று பலபாதிப்புகளுக்கும் தீர்வாக அமைகிறது.

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்படுகிறது.

    மனமுருக வழிபடும் பக்தர்களுக்கு, இந்த துளசி தீர்த்தமானது ரத்தத்தை சுத்திகரிக்கிறது.

    தலைச்சுற்றல், கபம், மூச்சுத்திணறல் என்று பலபாதிப்புகளுக்கும் தீர்வாக அமைகிறது.

    இதன் காரணமாகவே நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஆண்டாண்டு காலமாக பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    • இந்த வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்ய 3 மணி நேரம் ஆகும்.
    • கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்கிறார்கள்.

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்கிறார்கள்.

    இந்த வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்ய 3 மணி நேரம் ஆகும்.

    ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்வது ஏன்? என்பது குறித்து வரலாறு உண்டு.

    ராவணன் சம்காரத்திற்கு பிறகு தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த 2 அசுரர்களை ஒழிக்க ஆஞ்சநேயரை தேவர்கள் தேர்ந்தெடுத்தனர்.

    ஆஞ்சநேயருக்கு போரில் உதவ ராமர் வில்லையும், பிரம்மா, சிவபெருமான் உள்ளிட்ட மற்ற கடவுள்கள் அவரவர்களுக்குரிய ஆயுதங்களையும் வணங்கி வாழ்த்து கூறினர்.

    கண்ணன் வெண்ணெய் அளித்து இந்த வெண்ணெய் உருகுவதற்குள் உனது காரியம் வெற்றி அடையும் என்றும், அசுரர்களையும் அழித்து விடலாம் என்று சொல்லி வாழ்த்தினார்.

    அதன்படி ஆஞ்சநேயர் கையில் ஆசீர்வாதமாக அளிக்கப்பட்ட வெண்ணெய் உருகுவதற்குள் 2 அசுரர்களையும் போரில் சந்தித்து ஆஞ்சநேயர் அவர்களை அழித்துவிட்டார்.

    அதுபோல ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால் நாம் சாத்திய வெண்ணெய் உருகுவதற்குள் காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.

    • நாமக்கல் நகர், தமிழகத்தில் தொழிலில் சிறந்து விளங்கும் ஒப்பற்ற நகரமாகும்.
    • இந்நகருக்கு சுமார் 50 மைல் தொலைவில் அநேக மூலிகைகளும், பல வகை உள்ளன.

    நாமக்கல் நகர், தமிழகத்தில் தொழிலில் சிறந்து விளங்கும் ஒப்பற்ற நகரமாகும்.

    இங்கு நகரின் நடுவே பெரிய ஒரே கல்லால் ஆன பாறை ஒன்றுள்ளது.

    இப்பாறை சாளக்கிராமம் என்றும், இப்பாறையில் இருபுறமும் குடையப் பெற்ற, ஸ்ரீ நரசிம்மர், அரங்க நாதர் சன்னதிகளும், அரங்க நாயகி தாயார், நாமகிரி தாயார் என்ற புராணப் புகழ் பெற்ற புண்ணிய தலங்களும் உள்ளன.

    பாரத துணை கண்டத்தின் தென் பகுதியில், தமிழ்நாட்டில், சேலம் மாவட் டத்தின் தெற்கு பகுதியில் உள்ள இந்நகர், முன் காலத்தில் நாமகிரி என்றும், தற்போது நாமக்கல் என்றும் விளங்குகிறது.

    இது நகராட்சி எல்லைக்குட்பட்டது.

    2 லட்சம் ஜனத்தொகை கொண்ட இந்நகரம் மழை வளம் உடையது. சுமார் 10 மைல் பரப்பளவில் அமைந்துள்ளது.

    நகருக்கு மையத்தில் ஸ்ரீ சைல மலை, நாமகிரி, நாமக்கல் என்றெல்லாம் பெயர் கொண்டு ஒரே கல்லால் ஆன குன்று நகரின் நடுநாயகமாக திகழ்கிறது.

    அப்பாறையை சுற்றி மூன்று புறத்தில், பச்சைகுளம், செட்டிமார்குளம், கமலாலயகுளம், கமலாலயம் என்ற புராணப் பிரசித்தி பெற்ற குடிநீர் குளங்கள் உள்ளது.

    நாமக்கல் நகருக்கு சுமார் பத்து மைல் தொலைவில் புனிதமான காவிரி நதிபாய்கிறது. இந்நகரில் மிகவும் சக்திவாய்ந்த பிரசித்திபெற்ற ஸ்ரீ நாமக் கிரியம்மன் கோவில் கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கிறாள், தவிர பல அழகிய சிற்பங்களைக் கொண்டு சரித்திரப்பிரசித்தி பெற்ற குடவறைக் கோவில்களும் உள்ளன.

    அங்கு ஸ்ரீ நரசிம்ம சாமி ஆலயம் ஒரு புறமும் மலையின் மறுபுறம்ஸ்ரீ அரங்க நாத சாமி ஆலயமும் மிகப்பிரசித்தி பெற்று விளங்கு கின்றன.

    சுமார் 18 அடி உயரமுள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் திறந்த வெளியில் நின்று தொழுத கைகளுடன் நிற்கும் திருக்கோவிலும் இருக்கிறது.

    நாமக்கல்லில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய 3 கடவுள்களும் உள்ளதால் மும்மூர்த்தி தலம் என்ற பெருமை இந்நகருக்கு உண்டு.

    இந்நகருக்கு சுமார் 50 மைல் தொலைவில் அநேக மூலிகைகளும், பல வகை உள்ளன.

    • அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும்.
    • சிறந்த அறிவு திறன், புத்தி கூர்மை ஏற்படும். வீரம், விவேகம் உண்டாகும்.

    நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால்

    ஆன்ம பலம்,

    மன பலம்,

    உடல் பலம்,

    பிராண பலம்,

    சம்பத் பலம்

    உள்பட 6 பலன்களை அளிப்பார்.

    அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும்.

    சிறந்த அறிவு திறன், புத்தி கூர்மை ஏற்படும். வீரம், விவேகம் உண்டாகும்.

    • வீட்டில் செல்வ வளம் பெருகுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
    • வாழ்க்கையில் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.

    நாமக்கல் ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பிரம்மாண்டமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் ரூ.5ஆயிரம் செலுத்தி தங்க முலாம் பூசிய இந்த தாமிர கவசத்தை சாத்துவதால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.

    வீட்டில் செல்வ வளம் பெருகுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    இதன்மூலம் வீட்டில் தங்கம், வைரம், வைடூரியம் பெருகுவதாக பக்தர்களிடையே நம்பிக்கை உள்ளது.

    வாழ்க்கையில் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.

    இந்த நான்கு பெருமை கொண்ட எழுத்துச் சேர்க்கையால் ஆனது தமிழில் நாமக்கல் என்று வழங்கப்படுகிறது.

    நா -பாவங்களை நசிக்க செய்வது

    ம - மங்களத்தை கொடுப்பது

    கி - வாக்கு வன்மையை அளிக்கவல்லது

    ரி - பிற்காலத்தில் வீடளிக்கும் சக்தி வாய்ந்தது

    இந்த நான்கு பெருமை கொண்ட எழுத்துச் சேர்க்கையால் ஆனது தமிழில் நாமக்கல் என்று வழங்கப்படுகிறது.

    • திரேதா யுகத்தில் ராம அவதாரத்தில் ராவணனால் வானர சேனைகளும், ராமரும் மூர்ச்சையடைந்தனர்.
    • சாளக் கிராமத்தை தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை.

    நாமக்கல் என்றதும் நினைவுக்கு வருபவர் 18 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக கம்பீர தோற்றத்தில் கனிவுடன் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர்.

    நாமக்கல்லில் நடுநாயகமாய் வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜெயந்தியன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

    நாமக்கல் நகரில் 1500 ஆண்டுகளுக்கு முன்பே கோவில் கொண்ட நரசிம்ம சுவாமியை இருகரம் கூப்பி தரிசித்தவாறு ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.

    முன்னொரு காலத்தில் மகாலட்சுமி பெருமாளைப் பிரிந்து நாமக்கல் கமலாலய குளம் அருகே பர்ணசாலை அமைத்து பகவானை நோக்கி கடும் தவம் இயற்றினாள்.

    திரேதா யுகத்தில் ராம அவதாரத்தில் ராவணனால் வானர சேனைகளும், ராமரும் மூர்ச்சையடைந்தனர்.

    அப்பொழுது சாம்பவானால் அறிவுறுத்தப்பட்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் சஞ்சீவி மூலிகையைப் பெறுவதற்காக, இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்தார்.

    பணி முடிந்ததும் மலையை அதே இடத்தில் வைத்துவிட்டு திரும்பினார்.

    அவ்வாறு வருகையில் நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் குளிக்கும் போது 2 துளையுள்ள சாளக்கிராமம் கிடைக்கிறது.

    இறைவனின் அம்சமாக இருப்பதை எண்ணி அதனை தம்முடன் எடுத்துக் கொண்டு வான்வழியாக வந்து கொண்டிருந்தார் ஆஞ்சநேயர்.

    அப்போது நாமக்கல் பகுதியில் வந்து கொண்டிருந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் தமது கையில் இருந்த சாளக்கிராமக்கல்லை கீழே வைத்து விட்டு சந்தியா வந்தனத்தை செய்து முடித்தார்.

    மீண்டும் வந்து சாளக் கிராமத்தை தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை.

    ராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளை செய்து முடித்து விட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல் என்றொரு அசரீரி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார்.

    ராமன் போரில் வென்று சீதையை மீட்டபிறகு ஆஞ்சநேயர் மீண்டும் இங்கே வந்தார்.

    ஆஞ்சநேயர் விட்டு போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள் பாலிக்கிறார்.

    • ஆஞ்சநேயர், சிவபெருமானின் வடிவாக அவதரித்தவர் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன.
    • சஞ்சீவி ஆஞ்சநேயர் - இவரை வழிபட்டால் நோய் நொடிகள் விலகும்.

    ஆஞ்சநேயரின் சில வடிவங்களை வணங்கினால் அதற்கு ஏற்ற பலன்கள் நமக்கு கிடைக்கும்.

    ஆஞ்சநேயர், சிவபெருமானின் வடிவாக அவதரித்தவர் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

    ஆஞ்சநேயரின் சில வடிவங்கள் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன.

    எந்த வடிவ ஆஞ்சநேயரை வணங்கினால் என்ன கிடைக்கும் என்பதை பார்ப்போம்...

    1. வீர ஆஞ்சநேயர் - இவரை வழிபட்டால் தைரியம் வந்து சேரும்.

    2. பஞ்சமுக ஆஞ்சநேயர் - இவரை வழிபட்டால் பில்லி, சூன்யம், மாய மந்திரங்களால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

    3. யோக ஆஞ்சநேயர் - இவரை வழிபட்டால் மன அமைதியும், மன உறுதியும் கிடைக்கும்.

    4. பக்த ஆஞ்சநேயர் - இவரை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

    5. சஞ்சீவி ஆஞ்சநேயர் - இவரை வழிபட்டால் நோய் நொடிகள் விலகும்.

    • பஞ்சமுக ஆஞ்சநேயர் திருநள்ளார் நள தீர்த்தத்தில் இருந்து வரும் வழியில் அருள் தருகின்றார்.
    • வடக்கு முகம் வராஹமுகத் தரிசனம், சாந்தியும், நிம்மதியும் தரவல்லது.

    அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய வல்லமை மிக்க பஞ்சமுக அனுமன்.

    அனுமனின் ஐந்து முகங்களான கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும்,

    அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லாநலமும் தரும், நரசிம்மமுகம் தீமையைப் போக்கும்,

    ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும் என்பதால்,

    வேண்டியதை வேண்டியவாறு அருள்கிறார் அஞ்சிலே ஒன்று பெற்ற அருள் குமரன் அனுமன்.

    அனுமனின் தாடை நீண்டு இருக்கும்.

    ஹனுமன் முகம், நரசிம்ம முகம், கருடன் முகம், வராஹமுகம், ஹக்கிரீவர் முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முகவடிவில் ஒருங்கிணைந்து உள்ளார்.

    கிழக்கு முகம் ஹனுமனாக சத்ருக்களை அழிக்க வந்த முகம் "பிரதிவாதி முகஸ்நம்பி'' என்ற சுலோக வரியினால்

    அனுமனை வேண்டினால் எதிரிகள் விலகுவர் என பொருள் தரும்.

    தெற்கு முகம் நரசிம்ம முகம். இம்முக ரூப ஆஞ்சனேயர் பயத்தினால் உண்டாகும் பிரச்சனைகள்,

    பில்லி சூன்யம் துஷ்ட தேவதைகளால் உண்டாகும் பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம்.

    மேற்கு முகம் கருடன் முகத் தரிசனம் சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தரும்.

    வடக்கு முகம் வராஹமுகத் தரிசனம், தீராத கடன், பொருள் இழப்பு விஷ சுரம், மர்ம நோய்கள்

    முதலியனவற்றை அழித்து சாந்தியும், நிம்மதியும் தரவல்லது. பொருளாதார மேன்மை உண்டாகும்.

    மேல் முகம் ஸ்ரீ ஹயக்கிரீவர் முகம். இம்முக ஆஞ்சநேயர் சகல கலைகளையும், சிறந்த ஞானத்தையும்,

    சொல்வன்மையையும், சகலகலா வல்லவனாக தேர்ச்சியையும் தருபவர்.

    சொல்லின் செல்வன் என சீதையால் போற்றப்பட்ட அனுமனை பஞ்சமுக ஆஞ்சநேயராக வழிபாடு செய்யும்போது

    உங்களுக்கும் சொல்வன்மை, ஆரோக்யம், எதிரிகள் விலகல் என அனைத்தும் உண்டாகும்.

    பஞ்சமுக ஆஞ்சநேயர் திருநள்ளார் நள தீர்த்தத்தில் இருந்து வரும் வழியில் அருள் தருகின்றார்.

    ×