search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கற்கள் மற்றும் மண்கள்"

    • டிப்பர் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் லாரிகளில் இருந்து கற்கள் மற்றும் மண் சிதறுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது
    • அசுரவேகத்தில் செல்லும் டிப்பர் லாரிகளை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உடுமலை:

    அன்றாட அத்தியாவசிய பணிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏதுவாக ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாதுகாப்போடு எளிதில் செல்லும் வகையில் மத்திய-மாநில அரசுகளால் ஊரக ,மாவட்ட, மாநில தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.அதன் வழியாக பல்வேறு தரப்பட்ட மக்கள் நாள்தோறும் சென்று தேவைகள் சேவைகளை பெற்று பயன் அடைந்து வருகின்றனர்.இந்த சூழலில் சுயநல நோக்கோடு செயல்படும் ஒரு சிலர் டிப்பர் லாரிகளில் அதிக அளவு மண்ணை ஏற்றிக்கொண்டு அசுர வேகத்தில் செல்வதால் சாலைகள் சேதம் அடைவதும் கற்கள் மற்றும் மண் சிதறுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

    அந்த வகையில் உடுமலை பகுதியில் இருந்து கற்களுடன் கூடிய சரளைமண்ணை ஏற்றிக் கொண்டு செல்லும் டிப்பர் லாரிகள் சரளைகற்கள், மண்துகள்களை மேம்பாலத்தில் சிதர வைத்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,

    பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை ஏதுவாக்கும் வகையில் சாலைகள் பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.இதில் நிலப்பரப்போடு உள்ள சாலைகளை காட்டிலும் ஏற்ற இறக்கத்துடன் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்கள் சற்று அபாயகரமானவை. ஏனென்றால் வாகனங்களை நிலை தடுமாற வைக்கும் சூழல் மேம்பாலங்களுக்கு உண்டு. அதை உணராமல் உடுமலை காந்தி சதுக்கத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் டிப்பர் லாரிகள் கற்களுடன் கூடிய மண் துகள்களை சிதற வைத்து சென்று கொண்டு உள்ளது.உருளும் தன்மை கொண்ட கற்களால் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இது குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மேம்பாலம் வழியாக டிப்பர் லாரிகள் மண்ணை எடுத்துக் கொண்டு சென்ற வண்ணம் உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் அதிக அளவு மண்ணை ஏற்றிக்கொண்டு அசுர வேகத்தில் மேம்பாலத்தை கடந்து வருகிறது.அப்போது அதன் வேகத்தை தாங்க முடியாமல் மேம்பாலம் ஆட்டம் கண்டு வருவதாக அருகில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே அதிகாரிகள் அசுரவேகத்தில் செல்லும் டிப்பர் லாரிகளை மீது நடவடிக்கை எடுப்பதுடன் மேம்பாலத்தில் சிதறி கிடக்கும் கற்கள் மண் துகள்களை உடனடியாக அகற்றி பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துவதற்கு முன் வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

    ×